For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரிக்கு பூஜை அறையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

By Maha
|

நவராத்திரி வரப் போகிறது. அனைவரும் வீட்டை சுத்தம் செய்வோம். குறிப்பாக பூஜை அறையை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள, நிறைய வேலை செய்வோம். மேலும் நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறை தான் கொலு. ஆகவே பலர் கொலு பொம்மைகளை 5 அல்லது 7 அல்லது 9 படிகளில் வைத்து, தினமும் ஒவ்வொரு படையல்களை செய்து படைப்பார்கள்.

ஆகவே இவ்வளவு பெரிய வழிபாட்டை மேற்கொள்ளும் முன், வீட்டின் பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சுத்தமாக வைத்துக் கொண்டால், வீட்டிற்கு வரும் தெய்வம் நன்கு வாழ்த்தி, செல்வத்தை கொழிக்கச் செய்வார்கள் என்பது நம்பிக்கை. இதற்காக பூஜை அறையை மட்டும் சுத்தம் செய்யாமல், வீடு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும்.

சரி, இப்போது பூஜை அறையை எளிதில் சுத்தம் செய்ய சில டிப்ஸ்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தரையை துடைக்கவும்

தரையை துடைக்கவும்

வீட்டை சுத்தம் செய்யும் போது முதலில் செய்ய வேண்டியது, தரையை துடைப்பது தான். அப்படி தரையை துடைக்கும் போது, சோப்புத் தண்ணீரில் தரையை துடைத்தால், தரையில் உள்ள அழுக்கு சீக்கிரம் வெளியேறிவிடும்.

தெய்வ சிலைகள்

தெய்வ சிலைகள்

மெட்டல் அல்லது சில்வரால் ஆன தெய்வ சிலைகளை உப்பு அல்லது டூத் பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்தால், சிலைகளில் உள்ள கறைகள் உடனே போய்விடும்.

பூஜை சாமான்கள்

பூஜை சாமான்கள்

பெரும்பாலான வீடுகளில் பூஜை சாமான்கள் காப்பரில் இருப்பதால், புளி அல்லது டூத் பேஸ்ட் கொண்டு தேய்த்தால், பளிச்சென்று இருக்கும். அதுவே வெள்ளியில் இருந்தால், டூத் பேஸ்ட் கொண்டு தேய்க்கவும்.

விளக்குகள்

விளக்குகள்

விளக்குகள் கருமையாகவும், எண்ணெய் பசையுடனும் இருந்தால், அப்போது அதனை எளிதில் சுத்தம் செய்ய, முதலில் சோப்பு தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்தால், எண்ணெய் பசை மற்றும் கருமைகள் நீங்கிவிடும். பின் சோப்பு கொண்டு தேய்த்தால், பளிச்சென்று காணப்படும்.

சாமியின் ஆபரணங்கள்

சாமியின் ஆபரணங்கள்

பூஜை அறையில் தெய்வங்களுக்கு ஆபரணங்களை அணிவிப்பவராக இருந்தால், அப்போது அந்த ஆபரணங்களை சோப்புத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் அலசினால், அதில் உள்ள தூசிகள் மாயமாக மறைந்துவிடும்.

பூஜை மணி

பூஜை மணி

பூஜையின் போது அடிக்கும் மணியை சுத்தம் செய்ய, புளி மட்டும் போதமானது. ஏனெனில் புளியைக் கொண்டு தேய்த்தால், புளி அந்த மணியை பளிச்சென்று மாற்றும்.

டைல்ஸ்

டைல்ஸ்

பூஜை அறையின் சுவர்களில் டைல்ஸ் பதித்திருந்தால், அதனை சோப்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் போதும். அதுவே டைல்ஸில் எண்ணெய் பசைகள் இருந்தால், அப்போது தண்ணீரில் சிறிது வினிகர் சேர்த்து கலந்து, துடைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cleaning Puja Room For Navratri

As Navratri has come closer, here are few tips to clean your Puja room and prepare for Navratri.
Desktop Bottom Promotion