For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேக்கிங் சோடாவை வைத்து சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

By Ashok CR
|

எல்லாப் பெண்களும் தங்களது சமையல் அறையை சுத்தமாகவும், ஈர்க்கும் தன்மையிலும் வைத்திருக்க விரும்புவர். சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தம் செய்தல் என்பது சமையல் அறையை சுத்தம் செய்வதில் மிகவும் முக்கியமான ஒன்று. இதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். சுத்தப்படுத்தும் பொருளை தேர்வு செய்வது மிகவும் கஷ்டமான காரணி. இதுவே சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தமாக வைக்க உதவுகிறது. சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தம் செய்ய நமக்கு நிறைய தீர்வு சந்தைகளில் கிடைக்கிறது. இந்த வணிகப்பொருளை தவிர மிக முக்கியமான, எளிமையான மற்றும் திறமையான வழி ஒன்று உள்ளது.

பேக்கிங் சோடா என்பது அதில் ஒரு முக்கியமான வழி, இதன் உதவியோடு சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைக்கலாம். பேக்கிங் சோடவை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவது மூலம் கெட்டியானக் கறையை வடிகால் வழியாக வெளியேற்ற உதவுகிறது. துருப்பிடிக்காத எக்கில் இருக்கும் சமையலறைக் கழிவு தொட்டியில் நிறம் நீக்கும், உராயும், காரத்தன்மை அதிகம் உள்ள பொருளையும் உபயோகிக்கக் கூடாது. உரசும் தன்மையுள்ள ஸ்பாஞ், கோடுகளை ஏற்படுத்தி உங்கள் சமையலறைக் கழிவு தொட்டியை பார்க்க அசிங்கமாக ஆக்கிவிடும். சமையலறைக் கழிவு தொட்டியை பேக்கிங் சோடாவை வைத்து கழுவும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்.

Cleaning Kitchen Sink With Baking Soda

கீழ்கண்ட குறிப்புகள் சமையலறைக் கழிவு தொட்டியை பேக்கிங் சோடவை வைத்து கழுவும் போது பயன்படுகிறது. இந்த குறிப்புகள் சமையலறைக் கழிவு தொட்டியை, பேக்கிங் சோடவை வைத்து கழுவும் போது திறம்படவும், எளிமையாகவும் சுத்தம் செய்ய உதவுகிறது.

கீழே கழுவுதல்

சமையலறைக் கழிவு தொட்டியை பேக்கிங் சோடாவை வைத்து கழுவும் போது அது நல்ல தீர்வைத் தருகிறது, பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்வதற்கு முன் சிறிது நேரம் தொட்டியை கழுவ வேண்டும். சுடுதண்ணீரை வைத்து சமையலறைக் கழிவு தொட்டியின் அனைத்து ஓரங்களையும் கழுவ வேண்டும்.

மென்மையாக அழுத்தித் துடைத்தல்

அனைத்து அசுத்தமான பாத்திரங்களையும், மிச்சம் உள்ள உணவுப் பொருட்களையும் தொட்டியில் இருந்து எடுக்கவும். மென்மையான சோப்பு, துணி, மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் இவற்றை குழாய்களிலும், வடிகால்களிலும், வெளிப்புற விளிம்புகளிலும் பயன்படுத்த வேண்டும். சமையலறைக் கழிவு தொட்டியை, பேக்கிங் சோடாவை பயன்படுத்தும் முன் சுத்தமாக வைக்கவும்.

சுடு தண்ணீரை பயன்படுத்துதல்

சமையலறைக் கழிவு தொட்டியை, பேக்கிங் சோடவை பயன்படுத்தும் முன் சுடு தண்ணீரால் கழுவி சுத்தமாக வைக்கவும். வடிகால்களையும் கழுவ வேண்டும். இது துர்நாற்றத்தை நீக்கி, வடிகால்களில் வரும் அழுக்குகளையும் நீக்க பயன்படுகிறது. இதற்கடுத்து பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதற்காக சமையலறைக் கழிவு தொட்டியை உலர்த்தி வைக்க வேண்டும்.

பேக்கிங் சோடாவை உபயோகித்தல்

தொட்டியின் பரப்பளவில் முதலில் பேக்கிங் சோடாவை போடவும். பேக்கிங் சோடாவை தொட்டியின் பரப்பளவில் தூவி சுத்தம் செய்ய வேண்டும். இன்னொரு நல்ல முறை என்னவென்றால் இந்த பேக்கிங் சோடாவை பசை மாதிரி கலந்து கொண்டால், அதை தடவி பிறகு சுத்தமாக கழுவ முடியும்.

பேக்கிங் சோடாவை வடிகால்களில் போடுதல்

முதலில் அரை கப் பேக்கிங் சோடவை வடிகால்களில் போடவும். அதற்கடுத்து வெள்ளை வினிகரை போடவும். பின்னர் சுடு தண்ணீரை ஊற்றி வடிகால்களில் ஒட்டி உள்ள அழுக்குகளை கழுவவும்.

வீட்டில் தயாரித்த சுத்தப்படுத்தும் பேக்கிங் சோடா

அரை கப் பேக்கிங் சோடா மற்றும் கால் கப் எலுமிச்சை சாறு இவற்றை கலந்து கொள்ளவும். தொட்டியை சுத்தம் செய்ய இதை உங்கள் சமையலறைக் கழிவு தொட்டியின் பரப்பளவில் ஊற்ற வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும்.

பேக்கிங் சோடாவுடன் வெள்ளை வினிகரை சேர்த்தல்

முதலில் அரை கப் பேக்கிங் சோடாவையும், கால் கப் எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளவும். அதற்கடுத்து வெள்ளை வினிகரை போடவும். இது தொட்டியை சுத்தம் செய்ய உதவுகிறது.

பேக்கிங் சோடாவுடன் திரவ சோப்பைச் சேர்த்தல்

இது தொட்டியை சுத்தம் செய்ய பயன்படும் இன்னொரு முறை. பேக்கிங் சோடவையும் திரவ சோப்பையும் ஒரு கிண்ணத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தண்ணீர் கலந்து நீர்க்க வேண்டும். அதன் பின் வினிகரை சேர்க்கவும். இதை கலக்கி ஒரு பாட்டிலில் வைக்கவும். இதை உபயோகத்திற்கு முன் நன்கு குலுக்கவும்.

கடைசியாக கழுவுதல்

அனைத்து வேலைகளும் முடிந்தவுடன் மறக்காமல் தொட்டியை ஒரு தடவை அலசவும். சுத்தமாக கழுவி, காயவிட வேண்டும் அல்லது துணியை வைத்து துடைக்கவும். ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் தொட்டியை கழுவ வேண்டும். அடிக்கடி கழுவும் பழக்கம் ஆனது உங்கள் சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தமாக வைக்க உதவுகிறது.

English summary

Cleaning Kitchen Sink With Baking Soda

Baking soda is one such effective option, which will help keep your kitchen sink clean and shiny. Using baking soda for kitchen cleaning once in a week will help break up stubborn clogs and sanitize the drain. Here are some tips that you can consider while cleaning your kitchen sink with baking soda.
Story first published: Wednesday, December 18, 2013, 18:33 [IST]
Desktop Bottom Promotion