For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையை எளிதில் சுத்தப்படுத்தப் பயன்படும் பொருட்கள்!!!

By Maha
|

வீட்டை சுத்தப்படுத்துவதிலேயே மிகவும் கஷ்டமான ஒரு இடம் என்று பார்த்தால், அது சமையலறை தான். ஏனெனில் தினமும் அழுக்குகள், சுவர்களில் எண்ணெய் பசைக் கறைகள் போன்றவை சேரும் ஒரே இடம் சமையலறை தான். அதுமட்டுமின்றி, சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடத்தில் அழுக்குகளுடன் பாக்டீரியாக்கள் அதிகம் தங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வீட்டில் உள்ளோருக்கு பல நோய்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், சரியாக சுத்தப்படுத்தாமல் இருந்தால், சமையலறையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும்.

எனவே வீட்டின் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள, தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். அவ்வாறு சமையலறையை சுத்தப்படுத்தும் போது, கெமிக்கல் கலந்து பொருட்களை பயன்படுத்துவதை விட, ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது. ஏனெனில் அவை அழுக்குகள் மற்றும் கறைகளை எளிதில் போக்குவதோடு, கெமிக்கல் இல்லாமலும் இருக்கும்.

இப்போது அந்த மாதிரி சமையலறையை சுத்தம் செய்வதற்கு பயன்படும் சில இயற்கைப் பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை கொண்டு சமையலறையை சுத்தம் செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

சமைக்கும் போது பாத்திரத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் கறைகளை போக்க வேண்டுமெனில், வெள்ளை வினிகரைக் கொண்டு சுத்தம் செய்தால், எளிதில் நீங்கிவிடும். அதிலும் இது பாத்திரத்தில் இருந்து வரும் முட்டை மற்றும் பூண்டு வாசனைகளைப் போக்கிவிடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சமையலறை திட்டுகளில் உள்ள எண்ணெய் பசையைப் போக்குவதில் மிகவும் சிறந்தது. அதுமட்டுமின்றி, இதனைக் கொண்டு சுத்தப்படுத்தினால், நல்ல வாசனையும் வெளிவரும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

சிறிது பேக்கிங் சோடாவை பாத்திரம் கழுவும் இடத்தில் தூவினால், அங்கிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்கலாம்.

சுடுநீர்

சுடுநீர்

கிச்சன் பைப்புகளில் அடைப்புகள் ஏதாவது இருந்தால், சுடுநீரை ஊற்றலாம். இல்லாவிட்டால், இரவில் படுக்கும் போது பேக்கிங் சோடாவை தூவி, காலையில் சுடுநீரை ஊற்றினால் அடைப்புகள் எளிதில் போய்விடும்.

உப்பு

உப்பு

அலுமினியப் பாத்திரங்களில் உள்ள துருக்களைப் போக்க வேண்டுமெனில், உப்பு மற்றும் வினிகர் கொண்டு தேய்த்தால் விரைவில் சுத்தமாகும்.

காட்டன் பட்ஸ்

காட்டன் பட்ஸ்

அடுப்பின் மூலைகளில் தங்கியிருக்கும் அழுக்குகளை போக்க, ஈரமான பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யலாம்.

கிரேப் ஃபுரூட்

கிரேப் ஃபுரூட்

இந்த சிட்ரஸ் பழம் சமையலறையில் உள்ள பல பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுகிறது. அதிலும் பாத்திரத்தில் உள்ள எண்ணெய் பசை ஆகட்டும், தரையில் உள்ள எண்ணெய் பசையாகட்டும், அவற்றை எளிதில் போக்குவதற்கு கிரேப் ஃபுரூட் கொண்டு தேய்த்தால், எளிதில் கறைகளானது போய்விடும்.

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர்

மைக்ரோவேவ்வில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க வேண்டுமெனில், எலுமிச்சையை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரை மைக்ரோவேவ் ஓவனில் சிறிது நேரம் வைத்து, பின் ஒரு பேப்பர் டவல் கொண்டு துடைத்தால், துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை தோல்

எலுமிச்சையின் தோலை நன்கு காய வைத்து, அதனை கேபினெட் உள்ளே வைத்துவிட்டால், கேபினெட் உள்ளே இருந்து வரும் ஈரப்பசையுடன் கூடிய நாற்றம் போய்விடும். அதுமட்டுமல்லாமல், எலுமிச்சையின் தோலை, காய்கறிகளை வெட்டும் பலகையின் மீது தேய்த்தால், அதில் உள்ள கறைகளை போக்கலாம்.

முட்டை ஓடு

முட்டை ஓடு

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால், முட்டையின் ஓட்டை கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைத்தால், கரப்பான் பூச்சி வருவதைத் தவிர்க்கலாம்.

ஈரமான பேப்பர் டவல்

ஈரமான பேப்பர் டவல்

முகத்தைத் துடைக்கப் பயன்படும் ஈரமான பேப்பர் டவலை சமையலறை திட்டு மற்றும் அடுப்பை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.

நெயில் பாலிஷ் ரிமூவர்

நெயில் பாலிஷ் ரிமூவர்

டோஸ்டரில் பிரட் கவர் ஒட்டியிருந்தால், அதனை எளிதில் போக்க நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் அது சீக்கிரம் வெளிவந்துவிடும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

பாத்திரத்தில் உள்ள கறைகளைப் போக்க ஆல்கஹாலைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். வேண்டுமெனில் ஆல்கஹாலை, தண்ணீர் மற்றும் வினிகருடன் சேர்த்து கலந்து, எண்ணெய் பசையுள்ள கதவுகள் மற்றும் சுவர்களைத் துடைத்தால், எளிதில் நீங்கிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஃப்ரிட்ஜில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை போக்க வேண்டுமெனில், ஆப்பிள் சீடர் வினிகர் கொண்டு ஃப்ரிட்ஜை துடைக்க வேண்டும். மேலும் ஆப்பிள் சீடர் வினிகரை எண்ணெய் பசையுள்ள சுவர்கள் மற்றும் கதவுகளை துடைத்தால் விரைவில் சுத்தமாகும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

இந்த பொருளைக் கொண்டு பல கிச்சன் பொருட்ளை சுத்தம் செய்யலாம். அதிலும், காய்கறி பலகைகள், கிச்சனை சுத்தம் செய்யப் பயன்படும் ஸ்பாஞ்ச் போன்றவற்றை ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு சுத்தம் செய்தால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில்

சமையலறை தரைகளை சுத்தம் செய்யும் போது, தண்ணீரில் சிறிது யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி சுத்தம் செய்தால், தரைகள் பளபளப்புடன் இருப்பதோடு, சுத்தமாகவும் இருக்கும்.

புளி

புளி

பித்தளை, சில்வர் போன்ற பாத்திரங்கள் புதியது போன்று ஜொலிக்க வேண்டுமெனில், புளி மற்றும் உப்பு கொண்டு தேய்த்தால், அதில் உள்ள துருக்கள் போன்றவை எளிதில் நீங்கிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

கண்ணாடி பாத்திரங்கள் நன்கு சுத்தமாக இருக்க வேண்டுமெனில், உருளைக்கிழங்கு கொண்டு தேய்த்தால், புதியது போன்று இருக்கும். மேலும் இது வெங்காயம், பூண்டு, முட்டை, பால், ஆல்கஹால் போன்றவற்றின் வாசனையை நீக்கிவிடும்.

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய்

பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் லேபிள்களை எளிதில் நீக்க வேண்டுமா? அப்படியெனில், லேபிள் மீது சிறிது வேர்க்கடலை வெண்ணெயை தேய்த்தால், சீக்கிரம் வெளிவந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cleaning Ingredients For Kitchen

To maintain a stainless and odour-free kitchen, you need to follow some smart cleaning tricks. If you want a proper guide to clean your kitchen, then you can use the tips given below. Here are the few homemade cleaning ingredients that can be used in cleaning the kitchen effectively. Try these easily available ingredients for cleaning your kitchen.
Story first published: Thursday, August 29, 2013, 17:16 [IST]
Desktop Bottom Promotion