For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்குப் பின் எளிய முறையில் வீட்டை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

By Super
|

ஒளி மற்றும் வெடிகளின் விழா தீபாவளிப் பண்டிகை இதோ வந்துவிட்டது! 'தன்டேராஸ்'-உடன் தொடங்கும் இந்தப் பண்டிகையைத் தொடர்ந்து 'லட்சுமி பூஜை'-யும், இந்துக்களின் புதிய ஆண்டான 'பாத்வா'- உடன் முடிவடையும். அந்நாளில் உங்கள் வீட்டுக்கு வெளியே ஒவ்வொரு நாளும் வண்ணமயமான ரங்கோலி நிறங்களும், வீட்டுப் புல்வெளியில் ஒவ்வொரு இரவிலும் பட்டாசு வெடிக்கும் காட்சிகளும் மற்றும் உங்கள் வீடு முழுவதும் விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எல்லா விஷயங்களுமே துடிப்பாகவும், விழாக்கோலத்துடனும் மற்றும் பளிச் என்ற வெளிச்சத்துடனும் இருக்கும்.

ஆனால், விழா முடிந்த பின்னர் என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? துடிப்பாகத் தோற்றமளித்த அதே வீடு தரையில் சிதறிக் கிடக்கும் ரங்கோலி, தேவையற்ற காகிதங்கள், பிளாஸ்டிக்குகள், எங்கெங்கிலும் கிடக்கும் பட்டாசு பவுடர் துகள்கள், அலங்காரம் மற்றும் பூஜைக்காக பயன்படுத்தப்பட்ட காய்ந்த இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றால் இப்பொழுது அலங்கோலமாக கிடக்கும். இது மட்டுமல்லாமல், குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் புகை மூட்டத்துடன் இருக்கும் வீடாகவும் இருக்கும். மேலும், உங்கள் வீட்டு சமையலறையும் கூட அலங்கோலமாகவும் மற்றும் ஒழுங்கற்றதாகவும் கிடக்கும்.

தீபாவளிக்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியமோ, தீபாவளிக்குப் பின்னர் வீட்டை சுத்தம் செய்வதும் அதே அளவு முக்கியமானது. அதனால் தான், தீபாவளிக்குப் பின்னர் வீட்டை சுத்தம் செய்வது எப்படி என்று சில ஆலோசனைகளை இங்கே உங்களுக்கு வழங்கியுள்ளோம். இது கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருக்கும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையில்லாதவற்றை நீக்குதல்

தேவையில்லாதவற்றை நீக்குதல்

தீபாவளிக்காக செய்த அலங்காரங்களை உடனுக்குடன் நீக்குவது நல்லது. கதவுகள் மற்றும் ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருக்கும் காய்ந்த பூக்களையும், ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் சிறிய விளக்குகளையும், ரங்கோலி பொடிகள் எல்லா இடங்களுக்கும் சிதறும் முன்னர் அவற்றையும் சுத்தம் செய்வது தான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை.

சமையலறை சுத்தம் செய்தல்

சமையலறை சுத்தம் செய்தல்

வீட்டில் சுத்தம் செய்ய வேண்டிய இடங்களில் ஒன்றாக இருப்பது சமையலறையாகும். தீபாவளி, பல்வேறு விதமாக பதார்த்தங்களை செய்யும் விழாவாகவும் மற்றும் இந்த வேலைகளின் போது சமையலறை சற்றே அலங்கோலமடைவதாகவும் இருக்கும் விழாவாகும். எனவே, தீபாவளிக்குப் பின் சமையலறையை சுத்தம் செய்யும் வேலை சற்றே நேரம் பிடிப்பதாக இருக்கும். தீபாவளிக்கு பயன்படுத்திய பொருட்களை கழுவி, சுத்தம் செய்து சரியாக அடுக்கி வைக்கவும்.

அலமாரிகளை சுத்தம் செய்தல்

அலமாரிகளை சுத்தம் செய்தல்

புதிய உடைகள், அணிகலன்களை அணியவும் மற்றும் எல்லா விதமான மேக்-அப்பும் போடவும் தீபாவளி மிகவும் ஏற்ற பண்டிகையாக உள்ளது. தீபாவளிக்குப் பின்னர் உங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது, இந்த அலமாரிகளை சுத்தம் செய்வதில் தொடங்கி, முறையாக அடுக்கி வைப்பதும், உங்கள் மேக்-அப் மஸ்காராவை சற்றே அதன் பெட்டியில் போட்டு வைப்பதும் சுத்தமாக வைத்திருக்க உதவும். நீங்கள் தீபாவளிக்கு அணிந்த அனைத்து புத்தாடைகளையும் உலர் சலவை செய்து அடுக்கி வைத்தால் அலமாரி ரெடி!

குப்பைகளை சுத்தம் செய்தல்

குப்பைகளை சுத்தம் செய்தல்

தீபாவளியின் போது வெடிக்கும் பட்டாசுகளிலிருந்த வெளிப்படும் குப்பைகள் வீட்டு பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் மீது படிந்து இருப்பதுதான் முதன்மையாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். எனவே, வாக்குவம் கிளீனர்கள் அல்லது துணியைப் பயன்படுத்தி வீட்டிலுள்ள பொருட்கள், மேஜை-நாற்காலிகள், மின் விசிறி மற்றும் பிற பொருட்களை தீபாவளிக்குப் பின்னர் சுத்தம் செய்வது சிறந்தது. இது தீபாவளிக்குப் பின்னர் வீட்டை சுத்தம் செய்ய உதவும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.

மாற்றி விடுங்கள்

மாற்றி விடுங்கள்

தீபாவளிக்குப் பின்னர் பழைய பெட்சீட்கள், பெட் கவர்கள், திரைச்சீலைகள் மற்றும் இருக்கை விரிப்புகளை மாற்றுவது சிறந்த செயலாக இருக்கும். இதன் மூலம் உங்கள் வீடு புத்துணர்வுடனும், மீண்டும் சுத்தமாகவும் தோற்றமளிக்கும். மேலும், அதன் மூலம் உங்கள் வீடு அழகாகவும், உயிரோட்டத்துடனும் காணப்படும்.

மாப் வைத்து துடைக்கவும்

மாப் வைத்து துடைக்கவும்

மேலே தரப்பட்ட செயல்கள் எல்லாவற்றையும் விட, ஒரு ஈரத்துணியை எடுத்து உங்கள் வீட்டின் மூலை முடுக்குகள் எல்லா இடங்களிலும் துடைப்பது வீட்டை சுத்தம் செய்யும் வேலையை முழுமைப்படுத்தும். இதற்காக க்ளீனர் திரவங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

தீபாவளி பண்டிகைக்குப் பின்னர், உங்கள் வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, தீபாவளிக்குப் பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் கவலையை மறந்து இந்த ஒளியின் விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள். இந்த படிகளை நீங்கள் பின்பற்றினால் போதுமானது.

அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cleaning Home After Diwali

As cleaning house is necessary before Diwali, similarly cleaning house after Diwali is also very important. So, here are a few tips to clean your house after Diwali
Desktop Bottom Promotion