For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிச்சனில் உள்ள சுத்தப்படுத்த உதவும் சில ப்ளீச்சிங் பொருட்கள்!!!

By Maha
|

வீடு எப்போதும் சுத்தமாக இருந்தால் தான், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் வீட்டின் மூலைகளில் உள்ள அழுக்குகள் மட்டும் போகாமல் இருக்கும். இத்தகைய சாதாரணமாக தேய்த்தால் போகாது. அத்தகைய அழுக்கைப் போக்க ஒரு சில ப்ளீச்சிங் பொருட்கள் வீட்டின் சமையலறையிலேயே உள்ளது. அந்த பொருட்கள் என்னவென்று தெரிந்தால், எந்த ஒரு கஷ்டமுமின்றி வீட்டின் மூலைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்கிவிடலாம்.

ஏனெனில் வீட்டில் அழுக்குகள் இருந்தால், அது வீட்டில் உள்ள குழந்தைகள் உடலில் எளிதில் புகுந்துவிடும். மேலும் நோய்கள் அவர்களை தாக்கி, பின் அவர்களுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும். இத்தகைய அழுக்குகள் வீட்டில் மட்டுமின்றி, உடுத்தும் உடைகளிலும் இருக்கும். எனவே எப்போதும் சுத்தத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சரி, இப்போது வீட்டின் சமையலறையில் உள்ள அத்தகைய ப்ளீச்சிங் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

இந்த சிட்ரஸ் பழம் சாப்பிடுவதற்கு மட்டுமின்றி, சுத்தப்படுத்துவதிலும் பயன்படுகிறது. அதிலும் இது டைல்ஸ் மற்றும் சிங்கில் உள்ள கறைகளைப் போக்க சிறந்தது. அதுமட்டுமின்றி இதில் உள்ள சிட்ரஸ் ஆசிட் எண்ணெய் பசையை எளிதில் நீக்கிவிடும். அதிலும் சுத்தப்படுத்துவதில் வீட்டை மட்டுமின்றி, பற்களை வெள்ளையாக்கவும் பயன்படும்.

ப்ளீச்சிங் பவுடர்

ப்ளீச்சிங் பவுடர்

இந்த பொருளின் பெயரை வைத்தே, இது சுத்தப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக இந்த பொருளை குளியலறையை சுத்தப்படுத்தப் பயன்படும். ஆனால் அதே சமயம், இது துணிகளில் இருந்து நிறம் மழுங்குவதை தடுக்கும். குறிப்பாக, ப்ளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தி, ஜீன்ஸை துவைத்தால், அதில் உள்ள அழுக்குகள் போவதோடு, நிறம் போகாமலும் இருக்கும்.

வினிகர்

வினிகர்

எலுமிச்சையைப் போன்றே, வினிகரிலும் புளிப்புத்தன்மையுடையது. இதிலும் சக்தி வாய்ந்த ப்ளீச்சிங் பொருட்களில் ஒன்று. அதிலும் துணிகளை சுத்தப்படுத்தி, வெள்ளை துணிகளை நிறம் மாறாமல் வைக்க உதவுகிறது. மேலும் இது டைல்ஸ் தரைகளையும் பளிச்சென்று மின்ன வைக்கும். அதுமட்மல்லாமல், கண்ணாடி கதவுகளில் கறைகள் அதிகம் இருந்தால், அப்போது அதனை வினிகரை துணியில் நனைத்து, துடைக்க வேண்டும்.

உப்பு

உப்பு

உப்பு ஒரு சக்தி வாய்ந்த ப்ளீச்சிங் பொருள் இல்லாவிட்டாலும். இதனை எலுமிச்சை அல்லது வினிகருடன் சேர்த்து, கறை உள்ள இடத்தில் தேய்த்தால், அதன் பலனுக்கு அளவே இல்லை.

சோடா

சோடா

குளியலறையை சுத்தப்படுத்த, ப்ளீச்சிங் பவுடரை விட, குடிக்கும் பானங்களுள் ஒன்றான சோடா மிகவும் சிறந்தது. மேலும் இது கழிவறையில் படிந்துள்ள அழுக்குகளை போக்கவும் சிறந்த பொருள்.

புளி

புளி

புளியும், எலுமிச்சையைப் போன்றே, எண்ணெய் பசையை போக்கவும், பாத்திரங்கள் பளிச்சென்று அழுக்கின்றி மின்னவும் பெரிதும் உதவுகிறது.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவும் ஒரு வகையான ப்ளீச்சிங் பொருள் தான். அதிலும் இந்த பொருளை எண்ணெய் பசையுள்ள சுவர்கள் மற்றும் சமைக்கும் போது எண்ணெய் அதிகம் படிந்து நீங்காத கறைகளையும் எளிதில் போக்க பயன்படும். அதுமட்டுமின்றி, இந்த பொருள் சமையலறையிலிருந்து வரும் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் இதன் முக்கிய பயன் என்னவென்றால், துயி துவைக்கும் போது ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நீரில் கரைத்து, துவைத்தால், துணிகள் நன்கு பொலிவோடு மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bleaching Agents From Your Kitchen | கிச்சனில் உள்ள சுத்தப்படுத்த உதவும் சில ப்ளீச்சிங் பொருட்கள்!!!

Your home has many dirty corners that cannot be cleaned without using bleaching agents. So you need to keep a stock of natural bleaching agents. You basically need to bleach when the dirt has been accumulating in a nook or place for quite some time. These are some of the best bleaching agents for cleaning your home.
Story first published: Saturday, February 9, 2013, 15:11 [IST]
Desktop Bottom Promotion