For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறை கத்தியை சுத்தப்படுத்துவதற்கான சில எளிய வழிகள்!!!

By Maha
|

அன்றாடம் சமையலறையில் பயன்படுத்தும் பொருள் தான் கத்தி. அத்தகைய கத்தியானது ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 2-3 ஆவது இருக்கும். அப்படியிருக்கையில் தினமும் ஒரே கத்தியை பயன்படுத்துவோம் என்று சொல்ல முடியாது. நம் கைக்கு எது கிடைக்கிறதோ, அதைப் பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்திய பின்னர், கத்தியை சரியாக கழுவாமல் வைப்பதால், கத்தியில் கிருமிகளானது நிச்சயம் குடிப்புகும். அதுமட்டுமின்றி, கத்தியானது விரைவில் துருப்பிடித்துவிடும்.

அனைவரும் கத்தியை பயன்படுத்திய பின் நீரில் கழுவுவோம். ஆனால் அதன் முனைகளை கண்டு கொள்ளமாட்டோம். ஒன்று தெரியுமா? கத்தியின் முனைகளில் தான் கிருமிகளானது தங்கும். ஆகவே கத்தியை எப்போதும் நன்கு சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். மேலும் கத்தியானது சுத்தமாக, கிருமிகளின்றி இல்லாவிட்டால், அது அதன் கூர்மையை இழந்துவிடும்.

இங்கு கத்தியை சுத்தமாக கிருமிகளின்றி வைத்துக் கொள்ள, எந்த பொருட்களைக் கொண்டு கத்தியை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிஷ் வாஷ்

டிஷ் வாஷ்

பாத்திரம் கழுவும் டிஷ் வாஷ் நீர்மத்தைக் கொண்டு கத்தியை நன்கு தேய்த்து, சுடுநீரில் கழுவினால், கத்தியில் உள்ள கறைகள் மற்றும் கிருமிகள் அழிந்துவிடும்.

கொதிக்கும் நீர்

கொதிக்கும் நீர்

கத்தியில் பிளாஸ்டிக் கைப்பிடி இல்லாவிட்டால், கத்தியை பயன்படுத்திய பின், அதனை கொதிக்கும் நீரில் போட்டு ஊற வைத்து எடுத்தால், கத்தியில் உள்ள எண்ணெய் பசை, வெங்காயம், பூண்டு போன்றவற்றின் வாசனை ஏதும் இல்லாமல், கத்தியில் உள்ள கிருமிகளும் அழிந்துவிடும். குறிப்பாக, சுடுநீரில் ஊற வைத்தப் பின், குளிர்ந்த நீரில் அதனை கழுவ வேண்டாம். இதனால் கத்தியின் கூர்மை பாதிக்கப்படும்.

எலுமிச்சை

எலுமிச்சை

ஒரு துண்டு எலுமிச்சையைக் கொண்டு கத்தியை தேய்த்தால், கத்தியில் உள்ள கறைகள் எளிதில் நீங்குவதோடு, கத்தியும் நன்கு நறுமணத்துடன் இருக்கும். முக்கியமாக எலுமிச்சை கொண்டு கத்தியை தேய்த்த பின்னர், உடனே நீரில் கழுவாமல், 1 மணிநேரமாவது ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வினிகர்

வினிகர்

கத்தியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், கொதிக்கும் நீரில் சிறிது வினிகரை சேர்த்து, அந்த கலவையில் கத்தியை ஊற வைத்து, பின் பழைய டூத் பேஸ்ட் கொண்டு நன்கு முனைகளில் எல்லாம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரிலேயே கழுவி உலர வைக்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கூட சுத்தப்படுத்த உதவும் பொருட்களுள் சிறந்தது. மேலும் இது கத்தியில் துரு இருந்தால் எளிதில் போக்கக்கூடியது. இதற்கு பேக்கிங் சோடா மற்றும் சோப்பைக் கொண்டு நன்கு தேய்த்து, பின் சுடுநீரில் கழுவ வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறியவற்றையெல்லாம் முயற்சி செய்த பின்னர், கத்தியை நன்கு உலர வைத்து, இறுதியில் சமையல் எண்ணெய் கொண்டு கோட்டிங் கொடுத்து, பின் டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனால் கத்தியானது புதிது போன்று மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Ways To Clean A Kitchen Knife

We wash the knife after every use, but most of us are unaware of the breeding bacteria and germs that accumulate in the corners. So, here are some of the ways to clean a kitchen knife and keep it bacteria-free.
Story first published: Friday, November 22, 2013, 18:16 [IST]
Desktop Bottom Promotion