For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் ஒளிந்திருக்கும் ஒன்பது அலர்ஜி மையங்கள்!!!

By Super
|

நம்மில் பலரும் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையினால் சிரமப்படுகிறோம். அலர்ஜி பாதிப்பு உள்ளது என்பதே பலருக்கு தெரியாது. அலர்ஜி உள்ளது என்பதை அறிந்த பலர்க்கும் அது எதனால் ஏற்படுகிறது என்பதும், எந்தப் பொருள் அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்பதும் கண்டுபிடிக்க முடியாமலேயே இருக்கும். சிலருக்கு எந்த உணவுப் பொருள் அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்று தெரிந்திருக்கும். அலர்ஜி என்று சில பொருள்களை ஒதுக்கியே வைத்திருப்பார்கள். ஆனால் அந்தப் பொருளை உண்ணாதிருக்கும்போதே தும்மல் மற்றும் சரும தடித்தல் உண்டாகும். எதனால் தும்மல் ஏற்படுகிறது? சருமத்தில் ஏன் தடிப்புகள் ஏற்படுகின்றன? என்று தெரியாமலிருக்கும்.

தும்மல், சரும தடித்தல் போன்ற அறிகுறிகளால் குழப்பமடைபவரா? இது போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று புரியாமல் இருப்பவரா? அப்படியென்றால் சரியான பக்கத்துக்குதான் நீங்கள் வந்துள்ளீர்கள். வாருங்கள்!!. உங்களுக்கு தும்மல், சரும தடிப்பு போன்ற அலர்ஜிகளை உண்டாக்குகின்ற அலர்ஜிப் பொருள்கள் ஒளிந்திருக்கும், உங்கள் வீட்டிலுள்ள சில இடங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெத்தையுடன் கூடிய இருக்கைகள் மற்றும் படுக்கைகள்

மெத்தையுடன் கூடிய இருக்கைகள் மற்றும் படுக்கைகள்

மெத்தையுடன் கூடிய பகட்டான இருக்கைகளும், படுக்கைகளும் (upholstered furniture) வீட்டின் தோற்றத்தினை மாற்றியமைத்து ஆடம்பரமாகக் காட்டும். ஆனால் அவைதான் மைட்(dust mites) எனப்படும் மிகச்சிறிய உண்ணிகளுக்கு வசதியான தங்குமிடங்கள் ஆகும். எனவே வீட்டிலுள்ள உறை போட்ட மற்றும் உறை போடாத இருக்கைகளையும் படுக்கைகளையும் அவ்வப்போது துடைத்து தூசிகள் அண்டாதவாறு பாதுகாத்து வையுங்கள். வேக்யூம் க்ளீனர் பயன்படுத்தி, தூசிகளை அகற்றுங்கள். மூலையில் வைக்கப்பட்டிருந்த ஃபர்னிச்சர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவற்றை அப்படியே வீட்டுக்குள் கொண்டு வராதீர்கள். மெத்தையுடன் கூடிய பகட்டான இருக்கைகளும், படுக்கைகளும் உள்ளே ரகசியமான துவாரங்களைக் கொண்டிருக்கும். அவற்றில் ஈரம், தூசிகள் இருக்கலாம். எனவே ஈரப்போக்கிகளைக் (dehumidifier) கொண்டு உள்ளே நிறைந்திருக்கும் ஈரத்தினை அகற்றுங்கள். மேலும் வழவழப்பான தோல் மற்றும் வினைல் பொருள்களால் ஆன ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். மெத்தையுடன் கூடிய இருக்கைகள் மற்றும் படுக்கைகளைத் (upholstered furniture) தவிருங்கள்.

படுக்கை விரிப்பு மற்றும் தலையணைகள்!!

படுக்கை விரிப்பு மற்றும் தலையணைகள்!!

உடலிலிருந்து தினந்தோறும் எத்தனை இறந்த செல்கள் படுக்கையில் உதிர்கின்றன என்று நம்மால் சொல்ல முடியாது. நாம் படுக்கையில் உறங்கும் எட்டு மணிநேரத்தில் உதிர்கின்ற கணக்கற்ற இறந்த செல்கள் தூசி உண்ணிகளைக்(dust mites) கவர்கின்றன. சரும அரிப்புகள் மற்றும் இதர அலர்ஜிகளைத் தடுக்க, வீட்டிலுள்ள தரை விரிப்புகள், படுக்கைகள், தலையணைகள் மீது அலர்ஜி தடுப்பு உறைகளை(allergen-proof casings) பயன்படுத்தவும். படுக்கை விரிப்புகள், தலையணைகள் மற்றும் தலையணை உறைகளை வாரம் ஒருமுறையாவது சோப்பு கொண்டு அலசுங்கள். மெத்தைகள், தலையணைகள்,குஷன் நாற்காலிகள் ஆகியவற்றிலுள்ள தூசிகளை வேக்யூம் க்ளீனர் கொண்டு நீக்குங்கள்.

குளியல் அறைகள்

குளியல் அறைகள்

குளியலறையிலுள்ள டைல்ஸ் மீது பாசிகள் வளர்ந்திருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு வீட்டு குளியலறைகளிலும் இது வளரும். பூஞ்சைகள் போன்ற இப்பாசிகள் ஈரமும், குறைந்த வெப்பம் உள்ள இடங்களில் நன்கு வளரும். வீட்டு குளியலறை இவை வளர்வதற்கு மிகவும் வசதியான சூழ்நிலையை அளிக்கின்றன. குளியலறைகளில் சில நேரங்களில் கருமை நிற பூஞ்சைகளைப் பார்த்திருக்கலாம். மறைவான இடங்களில்தான் இவை வளரும். இவை சுவருக்குப் பின்புறமும், தரைக்குக் கீழும் உள்ள பகுதிகளைப் பாதித்து வீணாக்கும்.

மென்மையான பொம்மைகள்

மென்மையான பொம்மைகள்

விலங்கின் மென்மையான பஞ்சு போன்ற முடிகளைக் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகள் மிகவும் கவர்ந்திழுக்கும். அவற்றிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், இப்பொம்மைகளின் முடிகளுக்கிடையில் ஏராளமான தூசிகள் நிறைந்திருக்கும். குழந்தைகள் எப்போதும் இப்பொம்மைகளைக் கட்டிப்பிடித்தவண்ணமே இருப்பதால், இப்பொம்மைகளில் உள்ள தூசிகள் அவர்களது மென்மையான சருமத்தில் எளிதில் எரிச்சலை உண்டாக்குகின்றன. நெடுங்காலமாக வீட்டின் மூலையில் கிடந்த பொம்மைகளைத் தயவு செய்து குழந்தைகளின் கையில் கொடுக்க வேண்டாம்.

சமையலறை

சமையலறை

பூஞ்சைகளுக்குப் பிடித்தமான மற்றொரு இடம் சமையலறை!!. தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் , பயன்பாடில்லாத மூலைகளும் பூஞ்சைகள் வளர மிகவும் ஏற்ற இடங்கள். சமையலறையில் ஒரு இடத்தையும் விடாமல் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்திருங்கள். கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட அனைத்து வீட்டுபயோகப் பொருள்களையும் தண்ணீரால் கழுவியவுடன் ஈரம்போகுமாறு நன்றாகத் துடைத்துவிடுங்கள். வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் உள்ள தண்ணீர் சொட்டும் தட்டினை வாரம் ஒருமுறையேனும் தேய்த்துக்கழுவுங்கள். சமையலறையை எப்போதும் ஈரமின்றி உலர்வாகவே வைத்துக்கொள்ளவும். குளிர்சாதனப்பெட்டியில் உள்ள பழைய, பூஞ்சை பிடித்த உணவுப் பொருட்களை உடனடியாக வெளியேற்றுங்கள்.

தொட்டியில் வளரும் வீட்டுச்செடிகள்

தொட்டியில் வளரும் வீட்டுச்செடிகள்

தொட்டியில் வளரும் வீட்டுச்செடிகளை வளர்க்கிறீர்களா? ஆமெனில் அது சற்று அபாயம்தான். பூந்தொட்டிகளில் இருக்கும் பூஞ்சைகள் எளிதாக தரைக்கும் பரவக்கூடும்.வீட்டுச் செடிகளிலிருந்து பழுத்த மற்றும் காய்ந்த இலைகளை சீரான கால இடைவெளிகளில் நீக்குவது மிக முக்கியம். தொட்டிகளுக்குக் கீழே மிகுதியான தண்ணீரை சேகரிக்க ஏதுவாக தட்டுக்களை வையுங்கள். செடிகளுக்கு அளவுக்கதிகமான தண்ணீர் ஊற்றுவதைத் தவிருங்கள்.

செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகள் பெரும்பாலான மக்களுக்கு அலர்ஜி ஏற்படுத்துபவை. விலங்குகள் மூலமாக அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன தெரியுமா? அவை கழிக்கும் சிறுநீர்,வாயில் ஒழுகும் நீர் மற்றும் ரோமங்களில் உள்ள பொடுகு ஆகியவற்றில் காணப்படும் "புரோட்டீன்" தான் காரணம் ஆகும். செல்லப்பிராணிகளின் உடலில் இருந்து உதிரும் தோல்களின் இறந்த செதில்கள் காற்றில் துணிகள், படுக்கைகள், சோபா, நாற்காலி, மேசைகளிலும் ஒட்டிக்கொள்ளூம். எனவே செல்லப்பிராணிகளை படுக்கை அறைகளில் அனுமதிக்காமலிருப்பது நல்லது.

தரை விரிப்புகள் மற்றும் கால் விரிப்புகள்

தரை விரிப்புகள் மற்றும் கால் விரிப்புகள்

தரை மற்றும் கால் விரிப்புகளால் வீடு நிச்சயமாக அழகு பெறும்.ஆனால் அவற்றின் அடியில் ஏராளமான தூசி படியும். கண்ணுக்குத் தெரியாத தூசு உண்ணிகளுக்கு இவை மிகச்சிறந்த இருப்பிடங்களாக அமையும். தூசி உண்ணிகள் தான் வீட்டினுள் அலர்ஜி உண்டாக்கும் பொருள்களில் முக்கியமான காரணிகள் ஆகும். எனவே இத்தகைய தூசி உண்ணிகளை நீக்கவல்ல "HEPA" வடிகட்டி (filter) பொருந்திய வேக்யூம் க்ளீனர்களைப் பயன்படுத்துங்கள்.

புத்தகங்கள்

புத்தகங்கள்

புத்தகங்கள் மனிதனுக்கு நல்ல நண்பன் தான். அவை பூச்சிகளுக்கும் மிகச்சிறந்த நண்பர்கள் ஆகும். புத்தகங்களுக்கிடையில், தூசி உண்ணிகள், பூஞ்சைகள், புத்தகப் பேன்கள் (book lice) ஆகியவை இருக்கும். எனவே புத்தக அலமாரிகளையும், புத்தகங்களையும் வேக்யூம் க்ளீனர் கொண்டு தவறாமல் சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். புத்தகங்களை மூடிய பெட்டிகளில் போட்டு வையுங்கள். இப்படிச் செய்தால், புத்தகங்கள் பத்திரமாக இருப்பதோடு, தூசி படியாமல் அலர்ஜியிலிருந்தும் பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Hidden Allergy Hot Spots in Your Home

A lot of people suffer from allergy.Sometimes we simply can’t figure out the thing that we are allergic to. People can usually figure out the food that they are allergic to but it is a little tricky to determine why they sneeze or get rashes on their skin when they don’t eat food that causes allergy. If you are one of those confused people who can’t understand the reason behind the unusual signs given by your body then this is the right page for you.
Desktop Bottom Promotion