Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்?

Posted by:
Published: Wednesday, February 13, 2013, 17:56 [IST]

ஆல்கஹாலில் ஒன்றான வோட்கா குடிப்பதற்கு மட்டும் தான் என்று நினைத்தால், அதை இப்போது மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆல்கஹால் குடிப்பதற்கு மட்டுமின்றி, மற்ற பல நன்மைகளையும் தருகிறது. அத்தகைய நன்மைகளைப் பற்றி தெரிந்தால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில் வோட்காடிவ வைத்து நிறைய பொருட்களை சுத்தப்படுத்தலாம்.

அதிலும் வோட்கா சுத்தப்படுத்த மட்டுமின்றி, டாக்சிக் கிளீனராகவும் பயன்படுகிறது. சரி, இப்போது அந்த வோட்காவை வைத்து எந்த பொருட்களை எல்லாம் சுத்தப்படுத்தலாம், வேறு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போமா!!!

8 cleaning uses vodka
* துணிகளில் உள்ள கடினமான கறைகளைப் போக்கி, துணிகளை பொலிவோடு வைப்பதற்கு வோட்கா பயன்படுகிறது. குறிப்பாக சேறு, உணவு மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதற்கு 5 பங்கு நீரில் ஒரு பங்கு வோட்காவை கலந்து, கறையுள்ள துணிகளைத் துவைக்க வேண்டும்.

* சில சமயங்களில் துணிகளை எவ்வளவு தான் துவைத்தாலும், துர்நாற்றம் மட்டும் போகாமல் இருக்கும். அத்தகைய துணிகளில் வரும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு, சிறந்த வழி என்றால் அது வோட்காவைப் பயன்படுத்துவது தான். அதற்கு துணியைத் துவைத்து, காய வைத்து இரவில் படுக்கும் போது, அதன் மேல் வோட்கவை தெளித்து, வைத்து விட வேண்டும்.

* குளியலறையில் உள்ள டைல்ஸ், வாஷ் பேசின் போன்றவற்றில் படிந்திருக்கும் அழுக்குகளைப் போக்கி, வாசனையுடன் வைப்பதற்கு, வோட்காவை பயன்படுத்தி, தேய்த்து கழுவ வேண்டும்.

* பீங்கான் மற்றும் குரோமியப் பொருட்களை மின்னச் செய்ய வோட்காவைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது அவற்றை சுத்தப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு பொருள். அதுமட்டுமல்லாமல், கண்ணாடிக் கதவுகள், டம்ளர்கள், முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவை பளிச்சென்று காணப்படுவதற்கு, அதில் வோட்காவை தெளித்து தேய்க்க வேண்டும்.

* வீட்டில் இருக்கும் பூச்சிகளான தேனீக்கள், குளவிகள் அல்லது ஈக்களை விரட்டுவதற்கு, வோட்காவை வீட்டில் தெளித்து, ஒரு மணிநேரம் கழித்து பார்த்தால், அனைத்து பூச்சிகளும் இறந்திருக்கும்.

* வோட்கா சுத்தப்படுத்தும் பொருள் என்பதற்காக முத்து, மாணிக்கம் போன்றவற்றில் பயன்படுத்தக் கூடாது. வேண்டுமெனல் வெள்ளி மற்றும் மெட்டல் பொருட்களில் பயன்படுத்தலாம்.

* சிகரெட் வாசனை மிகவும் கொடியது. அதுமட்டுமல்லாமல், அது அவ்வளவு எளிதில் போகாது. எனவே அத்தகைய துர்நாற்றாத்தை துணிகளில் இருந்து போக்குவதற்கு, வோட்காவை துணிகளில் தெளித்தால் போதும்.

* செடிகளில் உள்ள இலைகளை அழிக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு, இலைகளின் மேல் வோட்காவை காட்டனில் நனைத்து தேய்க்க வேண்டும். ஆனால் இதை அனைத்து செடிகளுக்கும் பயன்படுத்த முடியாது. உதாரணமாக மென்மையான செடியான ஆப்ரிக்கன் வயலட்டில் பயன்படுத்தக் கூடாது.

English summary
If you think that vodka is just an alcoholic drink then its time for you to think out of the box. This alcoholic beverage can be used for other things too. You might be surprised to know that vodka has many cleaning uses. Here are few cleaning uses of vodka.
Subscribe Newsletter