For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறிய அறையையும் பெரியதாக காட்டுவதற்கான சில வழிகள்!!!

By Super
|

இக்காலக் கட்டத்தில் வீடு வாங்குவதே ஒரு பெரும் கனவாக உள்ளது. வீடு வாங்க எத்தனையோ விஷயங்களை கஷ்டப்பட்டு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக வீடு வாங்காமலும் இருக்க முடியாது. அப்படி வாங்கிய வீட்டை அழகுப்படுத்துவது என்பது அடுத்த செயல். ஆனால் வீட்டை கஷ்டப்பட்டு வாங்கிவிட்டாலும், வீடு சிறியதாக இருக்கும். மேலும் அந்த புதிய வீட்டை விருப்பப்பட்டவாறு அலங்கரித்து அழகுப்படுத்திக் கொள்வோம்.

பொதுவாக வீட்டை அலங்கரிக்க பல வழிகள் உள்ளன. ஒருவேளை வீட்டில் உள்ள அறைகள் சிறியதாக இருந்தால், அந்த அறையை பெரியதாக காட்டுவதற்கு என்று ஒருசில வழிகள் உள்ளன. இப்போது அந்த சிறிய அறையையும் பெரியதாக காட்டுவதற்கான வழிகளைத் தான் பார்க்கப் போகிறோம்.

5 Tips to Make a Small Room Look Bigger

1. கூடுதலாக இருக்கும் இடத்தை பயன்படுத்த தெரிய வேண்டும்

அறைகளானது மாடங்களோடும், கூடுதலான இடத்தோடும் இருந்தால், அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இடையில் இருக்கும் சுவரை அகற்றி அறையை பெரிதாக்கிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் இடையே திரைச்சீலைகளைப் பொருத்திக் கொண்டு, வேண்டிய நேரத்தில் மூடியும் திறந்தும் வைத்திருந்தால், செளகரியமாக இருக்கும்.

2. சரியான மரச்சாமான்களை தேர்வு செய்யவும்

ஆசைக்காகவும் ,பகட்டுக்காகவும் பெரிய பெரிய மரச்சாமான்களை பொருத்தி கொள்ளாமல், சிரியதாகவும், செளகரியமாகவும் இருக்கும் பொருட்களை, இடத்தின் வசதிக்கேற்ப சேகரித்து பொருத்திக் கொண்டால், வசதியாகவும் இடத்தின் அகலத்தை கூட்டும் விதமாகவும் அமைத்துக் கொள்ள முடியும்.

3. பொருட்களை சிதர வைப்பதை தவிர்க்கவும்

பல சமயங்களில் ஆரம்ப காலத்தில் விசாலமாக தெரிந்த இடம், நாட்கள் போகபோக இடம் இல்லாதது போன்று தெரியும். இதற்கு காரணம் இடம் சுருங்குவது என்று அர்த்தம் இல்லை. அதற்கு பல பொருட்களை ஒழுங்காக வைக்கவில்லை என்று அர்த்தம். எனவே பொருட்களை ஒழுங்காக வைப்பதால், இடத்தின் அகலத்தை அதிகரிக்க முடியும்.

4. நிறங்கள் தேவை

நிறங்கள் தான் அறையை நிர்ணயம் செய்கின்றது. அடர்த்தியான நிறங்கள் அழகாக இருக்கும் என்றாலும், அவை அறையை சிறியதாக காட்டும். ஆனால் வெளிர் நிறங்கள் இடத்தை அகலமாக காட்டும்.

5. கண்ணாடிகளையும் விளக்குகளையும் தெளிவாக தேர்ந்தெடுக்கவும்

அறைக்குத் தேவையான விளக்குகளையும், கண்ணாடிகளையும் தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இவை அறையின் அழகை மேலும் கூட்டும் விதமாக அமையும். கண்ணாடிகளானது, இயற்கை மற்றும் செயற்கை வெளிச்சத்தை பிரதிபலித்து, அறையை மேலும் பெரிதாகவும் அழகாகவும் காட்டக்கூடியவை. அதுவும் பகல் வேளை என்றால் சொல்லவே வேண்டாம். அறையில் இயற்கை வெளிச்சம் உள்ளே வரும் அதை தடுக்காமல் வரவிட வேண்டும். இல்லையெனில், அறையின் மிகச் சரியான இடங்களில் செயற்கை ஒளியை ஏற்படுத்தி சிறிய அறையின் அழகை பெரிதாக்கிக் காட்டலாம்.

இவ்வாறு அறையை பெரிதாகவும், அழகாகவும் வெளிக்காட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. சிலவற்றை கூட்டியும், சிலவற்றை குறைத்தும் அறையை விரும்பிய படி அமைத்துக் கொள்ளலாம்.

English summary

5 Tips to Make a Small Room Look Bigger

If you have accommodated yourself in a small room but wish to be in a bigger one, you can actually do so by following the tips mentioned here to make small room bigger.
Desktop Bottom Promotion