For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகை தவிர நெயில் பாலிஷால் ஏற்படும் 12 நன்மைகள்!!!

By Super
|

அழகை மேம்படுத்த பெண்கள் எடுத்துக் கொள்ளும் சிரம் லேசுப்பட்டது அல்ல. அதற்கு பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்றைய அதிநவீன உலகத்தில், பல நூற்றுக்கணக்கான அழகு சாதனங்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவைகளில் மிகவும் முக்கியமாக ஒன்றாக கருதப்படுவது தான் நெயில் பாலிஷ்.

நெயில் பாலிஷ் எதற்கு என்று கேட்டால், நகத்தை அழகுப்படுத்த பயன்படுகிறது என்று தான் பலரும் சொல்வார்கள். நெயில் பாலிஷ் என்பது பொதுவாக நகத்தை அழகாக காட்டுவதற்கு என்பது தான் ஒருமித்த கருத்தாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி பலவற்றுக்கும் இது பயன்படுகிறது. அதனைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டு சாவிகளுக்கு வர்ணம் பூசுங்கள்

வீட்டு சாவிகளுக்கு வர்ணம் பூசுங்கள்

உங்களுக்கு சாவிகளின் மீது தனி ஈடுபாடு இருக்கலாம். வீட்டில் உள்ள வாசல் கதவு சாவிகள், அலமாரி சாவிகள், டேபிள் சாவிகள் என அனைத்திற்கும் வர்ணம் பூச விரும்பலாம். ஒவ்வொரு சாவியையும், ஒவ்வொரு நிற நெயில் பாலிஷால் வர்ணம் பூசுங்கள்.

மசாலா பொருட்களின் டப்பாவில் பெயர் எழுதுவது

மசாலா பொருட்களின் டப்பாவில் பெயர் எழுதுவது

சீரகம், கொத்தமல்லி மற்றும் கரம் மசாலாக்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். அப்போது ஏன் நீங்கள் உங்கள் மசாலா பாட்டில்களில் பெயர் எழுதக்கூடாது? அந்த பாட்டில்களில் நெயில் பாலிஷ்களை கொண்டு பெயர் எழுதினால், அவை தண்ணீரில் படும் போது அழியாமல் இருக்கும்.

கடிதத்தை அடைத்து சீல் வைக்க பயன்படுத்தலாம்

கடிதத்தை அடைத்து சீல் வைக்க பயன்படுத்தலாம்

கடிதத்தை அடைத்து சீல் வைக்க பசையை பயன்படுத்தும் போது, ஒழுங்காக ஒட்டாமல் தூக்கி கொண்டு வருகிறதா? அப்படியானால் கொஞ்சம் நெயில் பாலிஷை எடுத்து, கடிதத்தின் மூலைகளில் தடவி ஒட்டி பாருங்கள்.

ஊசியில் நூலை கோர்க்க ஒரு வழி

ஊசியில் நூலை கோர்க்க ஒரு வழி

ஊசியில் நூலை கோர்ப்பதற்கு நாம் பாடுபடுகிறோம் தானே? அதற்கு ஒரு தீர்வு! நூலின் நுனியை லேசாக நெயில் பாலிஷில் முக்கி கொள்ளுங்கள். இது நூலின் நுனியை இறுகச் செய்வதால், அது சுலபமாக ஊசிக்குள் நுழைந்துவிடும்.

நகைகளுக்கு பாதுகாப்பு

நகைகளுக்கு பாதுகாப்பு

பலருக்கு கவரிங் நகைகள் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் அனைவரின் சருமத்திற்கும் அது ஒத்துப் போவதில்லை. கவரிங் மோதிரம் அல்லது நெக்லெஸ் அணியும் போது, சருமம் நிறம் மாறி பொறி பொறியாக மாறுவதை நாம் கண்டிருப்போம். அதனை தடுக்க நம் சருமத்தின் பக்கம் படும் நகையின் மறுபுறத்தில் நெயில் பாலிஷை கொண்டு ஒரு கோட்டிங் ஒன்று கொடுங்கள்.

ஷூ கயிறுகளை ஒட்ட உதவும்

ஷூ கயிறுகளை ஒட்ட உதவும்

ஷூ கயிறுகளின் நுனிகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்து, ஒரு நேரத்தில் உபயோகமில்லாமல் போய்விடும். அதன் நுனிகளை சற்று எரிக்க வேண்டும் அல்லது அதனை நெயில் பாலிஷை கொண்டு ஒரு கோட்டிங் கொடுக்க வேண்டும். கொஞ்சம் வண்ணமயமாக வேண்டும் என்றால் தூய்மையான நெயில் பாலிஷை பயன்படுத்தாமல், கலர் நெயில் பாலிஷை தேர்ந்தெடுங்கள்.

லூசான திருகாணியை இறுக்கமாக்கும்

லூசான திருகாணியை இறுக்கமாக்கும்

நீங்கள் பயன்படுத்தும் பெட்டியின் கைபிடியில் உள்ள திருகாணி நாளடைவில் லூசாகும். அடிக்கடி இது நடக்காமல் இருக்க, அந்த திருகாணியை இறுக்கமாக திருகி, அதன் மீது நெயில் பாலிஷை பூசி விடுங்கள். இது நீண்ட நாளைக்கு அதனை இறுக்கமாகவே வைத்திருக்கும்.

ஷூக்களுக்கு வர்ணம் பூசுங்கள்

ஷூக்களுக்கு வர்ணம் பூசுங்கள்

எந்த ஒரு வண்ணம் இல்லாத பழைய ஷூக்களை வண்ணமயமாக புதியது போல் காட்ட, அதன் மீது பல வண்ணத்தில் நெயில் பாலிஷ்களை பூசுங்கள். குறிப்பாக நீலம், ஆரஞ்சு மற்றும் சிகப்பு வண்ணங்களை பயன்படுத்தலாம்.

சிராய்ப்புகளை பாதுகாக்கும்

சிராய்ப்புகளை பாதுகாக்கும்

சில நேரம் ஆடை அலமாரி அல்லது பர்னிச்சரில் இருந்து நீட்டி கொண்டிருக்கும் மர துண்டுகள் மீது பட்டு நூல்கள் பிரியும் நிலை ஏற்படும். அதன் மீது நிறமற்ற நெயில் பாலிஷை இரண்டு கோட்டிங் கொடுங்கள். இது தையல்காரர் அதை சரிசெய்யும் வரை பாதுகாப்பாக, மேலும் கிழியாமல் இருக்கும்.

கிழிசலில் இருந்து பாதுகாக்கும்

கிழிசலில் இருந்து பாதுகாக்கும்

வீட்டை விட்டு கிளம்பிய பின் தான், பேண்ட்டில் சிறு ஓட்டை இருப்பதை காண்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்ய போகிறீர்கள்? ஒரு பாட்டில் நிறமற்ற நெயில் வார்னிஷை எடுத்துக் கொண்டு கிழிசல் ஏற்பட்ட இடத்தில் தடவுங்கள். இது மேலும் கிழிசல் ஏற்படாமல் தடுக்கும்.

கறையை நீக்கும்

கறையை நீக்கும்

நிறமற்ற நெயில் பாலிஷை பெல்ட் பக்கிலில் ஒரு கோட்டிங் தடவுங்கள். இது கறைகள் அண்டாமல் தடுக்கும்.

பாதுகாப்பான பட்டன்கள்

பாதுகாப்பான பட்டன்கள்

சட்டையில் உள்ள பட்டன் திடீரென அறுந்துவிட்டால், அதனால் பெரிய சங்கடமே ஏற்பட்டுவிடும். அதனை தடுக்க, பட்டன் மீது ஒரு கோட்டிங் நெயில் பாலிஷை தடவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Non-Beauty Uses For Nail Polish

They are commonly applied to beautify your talons, but nail varnish can serve other purposes as well. Take a look...
Story first published: Wednesday, October 2, 2013, 16:56 [IST]
Desktop Bottom Promotion