For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ளீச்சிங் பவுடரின் 10 பயனுள்ள நன்மைகள்!!!

By Maha
|

அனைத்து வீடுகளிலும் ப்ளீச்சிங் பவுடர் நிச்சயம் இருக்கும். ஏனெனில் இந்த பவுடர் துணிகளில் உள்ள கறைகளைப் போக்கவும், அசுத்தமாக இருக்கும் இடங்களை சுத்தம் செய்யவும் பெரிதும் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, வீட்டின் மூலைகளில் உள்ள கடுமையான அழுக்குகளைப் போக்க வேண்டுமெனில், இந்த ப்ளீச்சிங் பவுடரைத் தான் பயன்படுத்துவார்கள்.

அத்தகைய ப்ளீச்சிங் பவுடர் சுத்தப்படுத்துவதில் வரும் போது நிறைய வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் முக்கியமானவை என்று சொன்னால், வெள்ளை உடைகளில் உள்ள கறைகளை போக்கி, அதன் வெள்ளைத் தன்மை மாறாமல், துணிகள் நீண்ட நாட்கள் வரும்படியாக வைக்கும். இதேப் போன்று நிறைய எலக்ட்ரானிக் பொருட்களான மைக்ரோ வேவ் மற்றும் வாஷிங் மிசின் போன்றவற்றையும் சுத்தப்படுத்த பயன்படுகின்றன.

எனவே வீடு சுத்தமாகவும், பளிச்சென்று இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ப்ளீச்சிங் பவுடரின் மற்ற பயன்பாடுகளை தெரிந்து கொண்டு, வீட்டை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பெறுங்கள். சரி, இப்போது ப்ளீச்சிங் பவுடரின் நன்மைகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய்க்கிருமிகளை அழிக்க

நோய்க்கிருமிகளை அழிக்க

ப்ளீச்சிங் பவுடரை சமயலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடங்களில் தெளித்து தேய்த்து கழுவினால், அங்கு தங்கியிருக்கும் கிருமிகளை அழித்துவிடலாம். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரை, நீரில் கரைத்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வேலை முடிந்த பிறகு தெளித்து, ஒரு முறை தேய்த்து விட்டால் சமையலறை சுத்தமாக இருக்கும்.

களைச் செடிகளை அழிக்க

களைச் செடிகளை அழிக்க

தினமும் தோட்டத்தில் இருக்கும் களைச்செடிகளை அழிப்பது என்பது கடினமான ஒன்று. சில நேரங்களில் 2-3 நாட்கள் நாம் மறந்துவிட்டால், அவை சுட்டின் சுவர்களில் உள்ள விரிசல்களில் வளர்ந்துவிடும். எனவே தோட்டத்தில் சிறிது ப்ளீச்சிங் பவுடரை தெளித்துவிட்டால், அவற்றின் வளர்ச்சியை தடுக்கலாம்.

மோல்டுகளை சுத்தம் செய்ய

மோல்டுகளை சுத்தம் செய்ய

மழைக் காலங்களில் வீட்டில் பல இடங்களில் மழை நீர் வழிந்த தடங்கள் ஆங்காங்கு காணப்படும். எனவே அத்தகைய மோல்டுகளை போக்க, ப்ளீச்சிங் பவுடரை அந்த இடங்களில் தூவி, தேய்த்தால், நீக்கிவிடலாம்.

வெள்ளை துணிகளுக்கு

வெள்ளை துணிகளுக்கு

வெள்ளை துணிகள் சிலருக்கு மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். எனவே வெள்ளை துணிகளின் நிறம் மாறாமல் இருப்பதற்கு, துவைக்கும் போது, சிறிது ப்ளீச்சிங் பவுடரை சேர்த்து துவைத்தால், துணிகளை எப்போதுமே வெள்ளையாகவே வைத்துக் கொள்ளலாம்.

சுவற்றில் உள்ள பாசிகள்

சுவற்றில் உள்ள பாசிகள்

சில நேரங்களில் கதவுகள் மற்றும் சுவர்களில் ஆங்காங்கு பாசிகள் காணப்படும். ஆகவே அத்தகைய பாசிகளைப் போக்க, சிறிது ப்ளீச்சிங் பவுடரை வைத்து தேய்து கழுவினால், அந்த இடங்களில் மீண்டும் பாசிகள் வராமல் இருக்கும்.

சுத்திகரிப்பான்

சுத்திகரிப்பான்

ப்ளீச்சிங் பவுடர் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக கத்திகள், முட்கரண்டி, வெட்டுக் கத்தி மற்றும் பல தோட்டத்தில் பயன்படும் கருவிகளை சுத்திகரிக்கப் பயன்படுகிறது.

பூக்கள் நீண்ட நாட்கள் வருவதற்கு

பூக்கள் நீண்ட நாட்கள் வருவதற்கு

பூ ஜாடிகளில் வைக்கப்படும் பூக்கள் நீண்ட நாட்கள் வாடாமல், புத்துணர்ச்சியுடன் காணப்படுவதற்கு, ஒரு டீஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரை நீரில் கரைத்து, பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்ய ப்ளீச்சிங் பவுடர் சிறந்ததாக உள்ளது. உதாரணமாக, வீட்டில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் உள்ள கறைகளை போக்க ப்ளீச்சிங் பவுடரை வைத்து தேய்க்க வேண்டும்.

பீங்கான் மற்றும் கண்ணாடிப் பொருட்கள்

பீங்கான் மற்றும் கண்ணாடிப் பொருட்கள்

பீங்கான் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் நன்கு பொலிவோடு மின்னுவதற்கு, முதலில் எலுமிச்சையை வைத்து தேய்த்து, பின் ப்ளீச்சிங் பவுடரை வைத்து தேய்த்தால், பளிச்சென்று இருக்கும்.

இரும்பு மற்றும் ஸ்டீல்

இரும்பு மற்றும் ஸ்டீல்

வாஷிங் மிசின் மற்றும் மைக்ரோவேவ் உள்ளே உள்ள அழுக்குகள் மற்றும் நீர்க் கறைகளைப் போக்க, ப்ளீச்சிங் பவுடரை வைத்து தேய்க்க வேண்டும். இதனால் உடனே அதில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Effective Ways To Use Bleach | ப்ளீச்சிங் பவுடரின் 10 பயனுள்ள நன்மைகள்!!!

If you want to a good home-maker, use these cleaning tips to use bleach to its fullest. If you have some other cleaning tips using bleach as an ingredient, then share it with us.
Desktop Bottom Promotion