For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புது வீட்டுக்கு போறீங்களா? முதல்ல சுத்தம் பண்ணுங்க...

By Maha
|

வீட்டை மாற்றுவது என்பது மிகவும் கடினமாக விஷயம். அதிலும் வீட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வது என்பது அதைவிட கடினமானது. அதிலும் வீட்டை 2-3 தடவை மாற்றயவர்களுக்குத் தெரியும், அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது. அவ்வாறு மாறும் போது வீட்டில் உள்ள பொருட்களை முதலில் பேக் செய்து, அதனை புது வீட்டிற்கு கொண்டு செல்வது என்பது மட்டும் தான் என்று தெரியும். ஆனால் அவ்வாறு பொருட்களை புது வீட்டிற்கு கொண்டு செல்லும் முன், அந்த புதுவீட்டை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இப்போதுஅந்த புது வீட்டில் எந்த இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி, வீட்டை மாற்றும் முன் தெரிந்து கொள்ளுங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கதவுகள் மற்றும் ஜன்னல்கள்

கதவுகள் மற்றும் ஜன்னல்கள்

புது வீட்டிற்கு செல்லும் முன் முதலில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், ஏனெனில் ஜன்னல் மற்றும் கதவுகளில் சிலந்தி வலைகள் மற்றும் தூசிகள் அதிகம் இருக்கும். அதிலும் புதிய வீடு நிறைய நாட்கள் பூட்டியிருந்தது என்றால், அப்போது சோப்பு நீரை வைத்து கழுவ வேண்டும்

அறைகள் மற்றும் ஷெல்ப்கள்

அறைகள் மற்றும் ஷெல்ப்கள்

புதிய வீடுகள் மாற்றும் போது சிலவீடுகளில் ஷோபாக்களோடு இருக்கும். அப்போது அந்த ஷோபாக்களை நிறைய பேர் பயன்படுத்தியிருப்பார்கள்

தரைகள்

தரைகள்

தரைகளில் உள்ள அழுக்குகளை நீக்க, நீரில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது பேக்கிங் சோடாவை கலந்து, சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக புது வீட்டிற்கு வந்ததும், அடிக்கடி பேக்கிங் சோடாவை வைத்து சுத்தம் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக சிறிது வெள்ளை வினிகரை கலந்து வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தால் நல்லது

குளியலறை

குளியலறை

உடல் ஆரோக்கியமாக இருக்க, முதலில் குளியலறை மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு முன்னாடியே சுத்தம் செய்வது நல்லது

ரூம் ப்ரஸ்னர்

ரூம் ப்ரஸ்னர்

வீட்டை முழுவதும் சத்தம் செய்த பின்னர், வீட்டை மூடும் முன்பு, ஏதேனும் ரூம் ப்ரஸ்னரை தெளிக்க வேண்டும். இதனால் மறுநாள் வீட்டை திறந்தால், நன்கு வாசனையுடன் இருக்கும். இதனால் அந்த வீடு மிகவும் விருப்பமுடையாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
* கதவுகள் மற்றும் ஜன்னல்கள்: புது வீட்டிற்கு செல்லும் முன் முதலில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், ஏனெனில் ஜன்னல் மற்றும் கதவுகளில் சிலந்தி வலைகள் மற்றும் தூசிகள் அதிகம் இருக்கும். அதிலும் புதிய வீடு நிறைய நாட்கள் பூட்டியிருந்தது என்றால், அப்போது சோப்பு நீரை வைத்து கழுவ வேண்டும். கண்ணாடி ஜன்னல்கள் அல்லது கதவுகள் என்றால், அப்போது சோப்பு நீரை வைத்து கழுவியதும், மென்மையான துணியை வைத்து சுத்தமாக துடைத்துவிட வேண்டும்.

* அறைகள் மற்றும் ஷெல்ப்கள்: புதிய வீடுகள் மாற்றும் போது சிலவீடுகளில் ஷோபாக்களோடு இருக்கும். அப்போது அந்த ஷோபாக்களை நிறைய பேர் பயன்படுத்தியிருப்பார்கள். எனவே அத்தகையவற்றை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் அந்த ஷோபாக்கள் நகரக்கூடியதாய் இருந்தால், அவற்றை 2-3 மணிநேரம் வெயிலில் வைத்து எடுத்தால், அதில் உள்ள பாக்டீரியா மற்றும் இதர கிருமிகள் இறந்துவிடும். மேலும் ஷெல்ப்களில் பொருட்களை வைக்கும் முன், பேப்பரை வைத்து, அதன் மேல் பொருட்களை வைக்க வேண்டும். வேண்டுமென்றால் சிறிது இரசக் கற்பூரத்தை மூலைகளில் வைத்தால், பூச்சிகள் வராமல் இருக்கும்.

* தரைகள்: தரைகளில் உள்ள அழுக்குகளை நீக்க, நீரில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது பேக்கிங் சோடாவை கலந்து, சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக புது வீட்டிற்கு வந்ததும், அடிக்கடி பேக்கிங் சோடாவை வைத்து சுத்தம் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக சிறிது வெள்ளை வினிகரை கலந்து வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தால் நல்லது.

* குளியலறை: உடல் ஆரோக்கியமாக இருக்க, முதலில் குளியலறை மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு முன்னாடியே சுத்தம் செய்வது நல்லது. அதிலும் கரப்பான் பூச்சி கொல்லி, எறும்புக் கொல்லிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்தால், எந்த பூச்சியும் வராமல் தடுக்கலாம். மேலும் சுத்தம் செய்தபின் ரூம் ப்ரஸ்னரைப் பயன்படுத்துவது நல்லது. அவ்வாறு தெளித்தால், மறுநாள் அந்த அறையை திறக்கும் போது, ஒரு நல்ல மணத்தோடு இருக்கும்.

* ரூம் ப்ரஸ்னர்: வீட்டை முழுவதும் சத்தம் செய்த பின்னர், வீட்டை மூடும் முன்பு, ஏதேனும் ரூம் ப்ரஸ்னரை தெளிக்க வேண்டும். இதனால் மறுநாள் வீட்டை திறந்தால், நன்கு வாசனையுடன் இருக்கும். இதனால் அந்த வீடு மிகவும் விருப்பமுடையாகிவிடும்.

English summary

Clean New House Before Shifting | புது வீட்டுக்கு போறீங்களா? முதல்ல சுத்தம் பண்ணுங்க...

Shifting homes can be a really tiring task. Moving and setting down in a new house is not easy. Anyone who has shifted 2-3 times can tell you how difficult the task is. From packing all big to minute things and then taking them to an all new house is just one side. Before arranging your things in the new house, you have to clean it and make sure that the smell of the paint and the strong musty smell from the house is gone. Thus, here are few simple tips to clean your new house and help you make this task easier.
Desktop Bottom Promotion