For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழங்களை எப்படி வேகமாய் பழுக்க வைக்கலாம்?

|

நமது சமையலறையில் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியாமலே இருக்கும். சின்ன சின்ன விஷயங்கள் தான். நாம் செய்யாலம் மறந்துவிட்டிருப்போம். அல்லது அந்த பொருட்களை தூக்கி போட்டு வேற வேலையை பார்ப்போம்.

இதை படிக்கும்போது அட இதை நாம் செய்ததில்லையே என நினைப்பீர்கள். அப்படி உங்களுக்கு தெரியாத சில விஷயங்களை சொல்லப்பட்டிருக்கிறது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறிகள் அதிக நாள் நீடிக்க :

காய்கறிகள் அதிக நாள் நீடிக்க :

காய்கறிகள் அதிக ஈரப்பதத்தில் இருந்தாலும் அழுகி போய்விடும். இதனை தவிர்க்க ஃப்ரிட்ஜில் காய்களை வைக்கும்போது அவற்றில் மீது டிஸ்யூ பேப்பரை போட்டு மூடி விடுங்கள்.

இதனால் ஃப்ரிட்ஜிலிருந்து வரும் அதிக ஈரப்பதத்தை டிஸ்யூ பேப்பர் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் காய்களின் ஆயுள் நீளும்.

சர்க்கரை கட்டியாகாமல் தடுக்க :

சர்க்கரை கட்டியாகாமல் தடுக்க :

குளிர்காலத்தில் சர்க்கரை கட்டியாகிவிடும். இதனை தவிர்க்க ஒரு சிறிய ஆப்பிள்துண்டு மற்றும் புதிதான பிரட் துண்டை ஒரு கவரில் மூடி அதனை சர்க்கரை டப்பாவில் போட்டுவிடுங்கள்.

உப்பு கெட்டியாவதை தடுக்க :

உப்பு கெட்டியாவதை தடுக்க :

சில சமயம் உப்பு கெட்டிப்படும். சில அரிசிகளை உப்பு டப்பாவில் போடுங்கள். அது அதிகப்படியான ஈரத்தை உறிஞ்சிக் கொள்ளும்.

சீஸ் வறண்டு போவதை தடுக்க :

சீஸ் வறண்டு போவதை தடுக்க :

சீஸ் சிலசமயம் வறண்டு போய் பாளமாக வெடித்துவிடும். இதனை தடுக்க சீஸின் மீது சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி வைத்தால் வறண்டு போகாது.

தேனை உருக்கச் செய்ய :

தேனை உருக்கச் செய்ய :

தேன் குளிர்காலத்தில் உறைந்துவிடும். இதனை உருக்க சிலர் நேரடியாக அடுப்பில் வைப்பார்கள். அது தவறு. ஒரு வெ ந் நீர் பாத்திரத்தில் தேன் பாட்டிலை வைத்தால் சிறிது நேரத்தில் உருகி விடும்.

குழம்பில் உப்பு அதிகமானால் :

குழம்பில் உப்பு அதிகமானால் :

சில சமயம் குழம்பில் உப்பு அதிகமாகிவிடும். கவலை வேண்டாம். ஒரு துண்டு உருளைக் கிழங்கை அதில் போடுங்கள். அதிகப்படியான உப்பு உறிஞ்சிக் கொள்ளும். இதே சூப் தயாரிக்கும்போது உப்பு அதிகமானால் , உருளைக் கிழங்கு அல்லது ஆப்பிள் துண்டை போடுங்கள்.

பாத்திரம் கருகிவிட்டதா?

பாத்திரம் கருகிவிட்டதா?

அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கரிச்சட்டி மாதிரி ஆகிவிட்டதா? கவலைப் படாதீர்கள். 4 ஸ்பூன் சமையல் சோடாவை பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். மறு நாள் காலை கழுவினால் கையோடு கரி வந்துவிடும்.

பழத்தை எப்படி வேகமாய் பழுக்க வைப்பது?

பழத்தை எப்படி வேகமாய் பழுக்க வைப்பது?

வாங்கிய பழங்கள் இன்னும் பழுக்கவில்லையா? ஒரு பேப்பர் பையில் பழங்களுடன் ஒரு ஆப்பிள் பழத்தை போட்டு மூடி வையுங்கள். மறு நாள் பழுத்துவிடும். ஆப்பிளிலிருந்து வெளிவரும் எத்தலின் வாயு பழங்களை பழுக்க வைத்துவிடும்.

செம்பு பாத்திரங்களை பளிசென்று மாற்ற :

செம்பு பாத்திரங்களை பளிசென்று மாற்ற :

செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை பளிச்சென்று கழுவ கெட்ச்-அப் உபயோகப்படுத்துங்கள். அதனை பயன்படுத்தி கழுவும்போது, செம்பு பாத்திரங்கள் பளபளக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Useful kitchen tips and tricks

Useful tips and tricks for keeping our kitchen fresh and worthwhile
Story first published: Saturday, September 24, 2016, 16:51 [IST]
Desktop Bottom Promotion