For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரத்தாலான ஃபர்னிச்சர்களை பாதுகாக்க சில டிப்ஸ்...

By Super
|

காலம் மாற மாற மரத்தாலான நாற்காலி, கட்டில் போன்ற பொருள்களிலும் சில மாற்றங்கள் செய்து விற்கப்படுகின்றது. இருப்பினும் மரத்தாலான சாமான்களுக்கு இன்றளவிலும் மதிப்பு உள்ளது. இன்றைய மக்கள் பலர் மரச் சாமான்களை வாங்கவே விரும்புகின்றனர். மரச் சாமான்களை பராமரிப்பதென்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் நம் பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் கலை நயமிக்க இவ்வகை பொருட்களை காப்பதென்பது நம் கடமை. அதை பாதுகாக்க வேண்டிய சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பார்த்து பின்பற்றி பயன்பெறுங்கள்.

* முதல் கட்டமாக மரத்தாலான பொருட்கள் மீது பிசுப்பிசுப்பு தன்மைக் கொண்ட திரவியம் விழுந்தால், உடனே துடைத்து விட வேண்டும். அதன் மீது லாக்குயர் (lacquer) இருப்பதால் தண்ணீர் பட்டால் கூட உடனே துடைத்து விட வேண்டும். இல்லையெனில் சற்று நேரத்தில் வெள்ளை திட்டுக்கள் காணலாம். ஆகவே கவனமாக துடைத்து விடுங்கள்.

How to Take Care of Wooden Furniture?

* டீ அல்லது மற்ற திரவியம் ஏதேனும் சிந்தினால் உடனே வெஜிடேபிள் எண்ணெய் கொண்டோ அல்லது ஆல்கஹால் கொண்டோ துடைத்து விடுங்கள். ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட திரவியம், இவ்வகை கறைகளை எளிதில் நீக்கும். மேலும் துடைக்கும் போது மென்மையான துணியை கொண்டு துடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

* சூரிய வெளிச்சத்திற்கு நேராகவோ அல்லது மழையிலோ மரத்தாலான பொருளை வைக்காதீர்கள். ஏனெனில் சூரிய வெளிச்சம் அதன் மீதுள்ள லாக்குயர் படிமத்தை போக்கி, சேதம் விளைவிக்கும்.

English summary

How to Take Care of Wooden Furniture?

With changing times, wooden furniture is often replaced by furniture made of some other materials. However, wood still holds its place because of its quaint appeal. Hence, many people opt for woodenfurniture in today’s day and age. However, maintaining such furniture is a difficult task, more difficult than the rest.
Desktop Bottom Promotion