For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திறந்தவெளி எரிவாயு க்ரில் அடுப்பை சுத்தப்படுத்துவது எப்படி?

By Super
|

சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் பயன்படுத்தப்பட்ட திறந்தவெளி எரிவாயு க்ரில் அடுப்பை (outdoor gas grill) வாங்கினார். அதை சுத்தப்படுத்துவது எப்படி என்று என்னிடம் கேட்டார். அவருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் இதை சுத்தப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி கூறுகிறேன். அதனை படித்து தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.

வழிமுறைகள்:

1. க்ரில்லில் உள்ள கட்டங்கள் மிகவும் அழுக்காக இல்லையென்றால், சுத்தம் செய்ய எதையும் பயன்படுத்த வேண்டாம். ஒரு சில நிமிடங்கள் பர்னர்களை ஆன் செய்து விடவும். அதிலிருக்கும் சூடே அவற்றை தூய்மையாக்கிவிடும். மேலும் கடைசியாக உறைந்திருக்கும் கொழுப்புகளை எரித்து விடும்.

How to Clean an Outdoor Gas Grill
2. வேண்டுமெனில் எரித்து சாம்பலாகும் முறையை பயன்படுத்தலாம். அதாவது தீயை அதிகமாக்கவும். பின்பு ஒரு அலுமினிய தகட்டின் பளபளப்பான பகுதியை உள்ளேயுள்ள உணவுத் துகள்கள் சிந்தியிருக்கும் தட்டின் மீது மூடி வைக்கவும். இவ்வாறு 20 நிமிடங்கள் வைத்தால், உணவுத் துகள்கள் அனைத்தும் வெள்ளை நிற சாம்பலாகி விடும். க்ரில் குளிர்ந்தவுடன், அச்சாம்பலை ஒரு பிரஷ் மூலம் எளிதாக துடைத்து விடலாம்.

3. குளிர்ந்த கேஸ் க்ரில் மீது சமையல் எண்ணெயை தெளிக்கவும். பிறகு மூடிவிட்டு தீயை பெரிதாக்கவும். 2௦ முதல் 3௦ நிமிடங்கள் கழித்து தீயை அணைக்கவும். பிறகு அனைத்து எஞ்சிய அழுக்குகளையும், ஒரு க்ரில் ப்ரஷ் கொண்டு சுத்தம் செய்யலாம்.

4. திறந்தவெளி எரிவாயு க்ரில் அடுப்பின் உள்ளே உள்ள உணவு துகள்களை எடுத்த பின்பு ஓவன் க்ளீனரை வைத்து மிகவும் வேகமாக காற்றையும், நீரையும் உள்ளே அடித்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். பின்பு மறுநாள் எடுத்தால், அது சுத்தமாகிவிடும்.

5. க்ரில்லின் உள்பகுதியை சோப்பு தண்ணீர் விட்டு கழுவலாம். ஒருவேளை இதன்மூலம் க்ரில்லிலுள்ள சாயம் நீங்குவதாக தெரிந்தால், புதிதாக சாயம்(பெயிண்ட்) பூசலாம். பின்பு அதன் மீது எந்த பொருளையும் வைக்காமல் சிறிது நேரம் எரிய விடவும். இதனால் ஏதாவது சோப்புத் தண்ணீர் ஒட்டிக் கொண்டிருந்தால், சுத்தமாக எரிக்கப்பட்டு விடும். பின்பு வழக்கம் போல சமைக்கலாம்.

6. க்ரில்லிலுள்ள ஆணிகளை கழற்ற முடியும் என்றால், பர்னர்களை க்ரில்லிலிருந்து வெளியே எடுக்கவும். பின்பு அடைத்து வைக்கப்பட்டுள்ள காற்று அல்லது குழாய் சுத்திகரிப்பை பயன்படுத்தி அடைப்புகளை நீக்கலாம்.

7. க்ரில்லின் வெளிப்பகுதி எஃகுவால் (stainless steel) ஆனவை என்றால் அதை சோப்பு பொடிகள் அல்லது வேறு ஏதாவது போட்டு தேய்த்து துடைக்கலாம். ஆனால் இவற்றின் மீது தண்ணீர் பட்டால் துரு பிடிக்கவும் வாய்ப்புள்ளதால், இவ்விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அது உபயோகப்படுத்தும் பொருளைப் பொறுத்தது.

8. க்ரில்லை சுத்தப்படுத்த முடியாத அளவு மோசமாக இருந்தால், அதை மாற்றி விட்டு புது க்ரில்லை போடுங்கள். இதுதான் எல்லாவற்றையும் விட சிறந்த வழியாகும். பாதுகாப்பான வழியும் இதுதான். ஏனெனில் சில நேரம் அதில் உள்ள உணவுத் துகள்களை சாம்பலாக்கும் முயற்சியானது இவ்விஷயத்தில் அபாயகரமானதாக முடியலாம்.

English summary

How to Clean an Outdoor Gas Grill | திறந்தவெளி எரிவாயு க்ரில் அடுப்பை சுத்தப்படுத்துவது எப்படி?

Outdoor grills should be cleaned after every use in order to maintain them.
Desktop Bottom Promotion