For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுல சிலந்தி வலைகள் அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...

By Maha
|

Spider
நிறைய மக்கள் அரக்னோபோபியா (Arachnophobia) என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதன் காரணம் சிலந்தி வலைகள் வீட்டிலேயோ அல்லது எங்காவது வெளியில் காணப்படுவதுதான். அவ்வாறு பயமுறுத்தும் சிலந்தி வலைகளை மூலை முடுக்குகளிலிருந்து விட்டொழிக்க சில வழிகள் உள்ளன.

அதற்கு முதலில் வலைகளில் சிலந்திகள் உள்ளதா, இல்லை வலையை சுற்றி வேறு எங்காவது உள்ளதா என்று பார்த்து, பின் சுத்தம் செய்ய வேண்டும். பூச்சிகள் மற்றும் சிலந்திகள் முழுமையாக வெளியேற்றாவிட்டால், அவை உங்கள் வேலையை மிக கடினமாக்கிவிடும். மேலும் சுத்தம் செய்யும் போது, சிலந்திகள் வலையை விட்டு ஓடி விடும். ஆகவே அவைகளை அடித்து நசுக்கவும், இல்லையேல் அதை வீட்டின் வெளியே வெளியேற்ற வேண்டும். அதனை விரட்ட சுத்தம் செய்யும் முன், தேவையான பொருட்களான - நிற்க ஒரு நாற்காலி, கையுறைகள் மற்றும் காகித துண்டுகள் போன்றவற்றை ஒரு இடத்தில் வைத்து கொள்ள வேண்டும். இல்லையேல் நாற்காலி மீது ஏறி நின்ற பின், ஒன்று ஒன்றாக எடுப்பது மிகவும் கடினமாகும்.

முக்கியமாக சிலந்தி வலைகளை நீக்கும் போது, எந்த முறையைப் பயன்படுத்த போகிறோம் என்பதை முடிவு செய்து கொண்டு, அதற்கு தகுந்தவாறு பொருள்களை, கைக்கு எட்டுமாறு வைத்து கொண்டு, பின் செயலில் இறங்க வேண்டும். அதனால் வேலை சுலபமாகும். மேலும் சிலந்திகளை சுத்தம் செய்ய நான்கு முறைகள் உள்ளன. இப்போது அந்த முறைகள் என்னவென்று பார்ப்போமா!!!

முறை: 1

காகித துண்டை பயன்படுத்துவது. எப்படியெனில் சிலந்தியானது, வலையின் உள்ளே இருந்தால், அதனை காகிதத்தால் பிடித்து வேகமாக வெளியே போட வேண்டும் இல்லையெனில் நசுக்க வேண்டும். பின்னர் அதே காகிதத்தால் அந்த வலையையும் சுத்தம் செய்யவும். இது கடினமாக இருந்தால், கைக்கு உறையை அணிந்து கொண்டு செய்யலாம்.

முறை: 2

சுத்தம் செய்யும் இடத்தை பொருத்து உபயோகிக்கும் பொருள் உள்ளது. அதாவது சிலந்தி வலைகள் சுவற்றில் அதிக தூரத்தில் இருந்தால், அதற்கு நீண்ட பண ஓலை கொண்ட ஒட்டடை குச்சிகளை உபயோகப்படுத்தலாம். இல்லையெனில் துடைப்பங்களை, நீளமான ஒரு குச்சியில் கட்டிக் கொண்டு, சுத்தம் செய்யலாம். அதுவே ஒரு சைக்கிள் அல்லது டேபிளின் கீழே ஒட்டடை அடிக்கும் போது, ஒரு சிறு டிஸ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்தால் போதுமானது.

முறை: 3

வேக்யூம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம். வேக்யூம் க்ளீனரை உபயோகப்படுத்தும் போது, இடத்திற்கு தகுந்தவாறு அதன் ப்ரஷ்களை மாற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

முறை: 4

ஒட்டடை அடிக்கும் நேரத்தில் ப்ளீச்சிங் பவுடர் கரைசல்களை உபயோகப்படுத்தலாம். அதை விட்டு, சாதாரண தண்ணீரில் சுத்தம் செய்தால் அது அந்த அளவிற்கு பயன் தராது. ஆகவே இது போன்ற ப்ளீச்சிங் கரைசல்கள் அல்லது மண்ணெண்ணெய் போன்றவைகளை உபயோகப்படுத்தும் போது, அது வேறு வகையான பூச்சிகளையும் விரட்டும். அந்த வாசனையால் சிலந்திகளும், கொசுக்களும் வராமல் இருப்பதோடு, வீடும் சுத்தமாக இருக்கும்.

English summary

How to Get Rid of Spider Webs | வீட்டுல சிலந்தி வலைகள் அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...

Since a lot of people suffer from arachnophobia, getting rid of spider webs can be frightening. Fortunately, there are ways of getting a web out of nooks and crannies without the surprises and scares.
Story first published: Tuesday, January 1, 2013, 16:23 [IST]
Desktop Bottom Promotion