For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்லப் பிராணிகளுடன் நட்புடன் பழக சில டிப்ஸ்...

By Super
|

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் குழந்தைகள் போன்று சில நேரங்களில் நடந்து கொள்ளும். அதிலும் பூனை, நாய் போன்ற விலங்குகள் தான் அதீத அன்பை எதிர்பார்க்கின்றன. சில செல்லப்பிராணிகள் தங்கள் எஜமானருடைய உயிரையே கூட காப்பாற்றியுள்ளன. மேலும் அவை செய்யும் விளையாடுத் தனங்கள், சேட்டைகள், வேடிக்கைகள் போன்றவை சிரிக்க வைக்கின்றன. செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், மனநிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும், நீண்ட நாள் வாழ்வதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு பக்கவாத நோய் வருவது மிகக்குறைவு என்றும், அவற்றை வளர்க்காதவர்களுக்கு பக்கவாதம் அதிகம் வருவதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது. ஏனென்றால் அவை எண்ணிலடங்கா மணி நேரம் நமக்கு பொழுதுபோக்கை வழங்குகிறது.

ஆகவே அத்தகைய செல்லப் பிராணிகளிடம் மிகவும் அன்பாகவும், நட்புடனும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்போது செல்ல பிராணிகள் மற்றும் பிற விலங்குகளுடன் நல்லவிதமாக நடந்து கொள்வது எப்படி என்பதற்கு சில குறிப்புகள் உள்ளன.

How to Be Nice to Your Pets

1. முயல், நாய் அல்லது பூனையை வளர்க்கும் போது அதை பராமரிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். பல செல்லப்பிராணிகள் அலங்கரிப்பதையும், தடவிக் கொடுப்பதையும் விரும்பும்.

2. அவற்றிற்கு மிகக்குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ உணவு அளிக்ககூடாது. மேலும் அவை உண்மையான பசியுடன் இருக்கிறதா அல்லது உணவு பெறுவதற்கான முயற்சியில் உள்ளதா என்பதை நன்கு தெரிந்து கொண்டு பின்பு கொடுக்க வேண்டும்.

3. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது அவற்றின் உணவு மற்றும் நீரருந்தும் பாத்திரங்களை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும்.

4. செல்லப் பிராணிகளுக்கு முறையான கவனிப்பைத் தார வேண்டும். செல்லப்பிராணிகளில் குறிப்பாக நாய்கள் தான் அதிகமான பாசத்தை எதிர்பார்க்கும். ஆகவே எங்கு வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்தாலும், அதற்கு ஒரு "ஹாய்" சொல்லி, அதனுடன் சிறிது விளையாடினால், அதற்கும் உங்கள் மீது பாசம் அதிகரிக்கும்.

5. நாய்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள். பெரும்பாலான நாய்களுக்கு ஒரு வீட்டில் அல்லது வீட்டின் பின்புறத்தில் நாள் முழுவதும் நீண்ட நேரம் தங்கியிருப்பது பிடிக்காது. அவைகள் வெளியே செல்வது மற்றும் ஆராய்வதை விரும்பும். எனவே அவைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே அழைத்து செல்ல வேண்டும்.

6. விலங்குகளின் சமூகப்பார்வையில், அதனுடன் சந்தோஷமாக விளையாடுவது, ஏதேனும் சொல்லிக் கொடுப்பது போன்றவை, மிகுந்த நட்படையச் செய்கிறது.

7. ஒரு நாயை குழந்தை போல நடத்தாதீர்கள். நாய் என்பது ஒரு மிருகம் மற்றும் மேலும் அதற்கு தலைமை தேவை. தீயவற்றிற்கு துணையாக இருப்பதை விட, வலிமையுடனும், எடுத்துக்காட்டுக்கு வழிவகுக்கு மாறும் நடக்க சொல்லிக் கொடுக்க வேண்டும்.

8. செல்லப் பிராணிகளை உதைப்பது அல்லது அடிப்பது போன்றவற்றை செய்து அவற்றை காயப்படுத்தினால், பின் அது உங்களை வெறுக்க ஆரம்பித்துவிடும்.

9. அவ்வப்போது கால்நடை மருத்துவரிடம் தவறாமல் அழைத்துச் செல்ல வேண்டும்.

10. செல்லபிராணிகளிடம் பொறுமையில்லாமல் நடக்க வேண்டாம். அவற்றால் வாய்மொழிச் சொற்களை புரிந்து கொள்ள முடியாது.

English summary

How to Be Nice to Your Pets | செல்லப் பிராணிகளுடன் நட்புடன் பழக சில டிப்ஸ்...

Everyone needs to know how to be nice to their own pets! Here are a few tips to being nice to your pets and other animals.
Desktop Bottom Promotion