For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையில் மறைந்திருக்கும் கிருமிகளை சுத்தம் செய்வது எப்படி?

By Maha
|

5 Dirtiest Secrets of Your Kitchen And How to Clean Them
வெளித்தோற்றத்தில் அழகாக தென்படும் சமையலறையில் கூட பெரும்பாலான பாக்டீரியா மற்றும் கிருமிகளின் பெருக்கம் நம் கற்பனைக்கு மிஞ்சியதாக இருக்கும். இந்த நுண்ணுயிரிகள், காய்கறி வெட்டும் பலகைகள், அலமாரி கைப்பிடிகள் மூலம் எளிதில் உணவு பாத்திரங்களில் பரவி, இறுதியில் நம் உடம்பில் புகுந்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை குறைத்து, ஆதிக்கம் கொண்டு நோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

பொதுவாக நுண்ணுயிரிகள் நம் கண்ணுக்கு புலப்படாத ஒன்று. உண்மையில் எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும், கிருமிகள் நம் சமையலறையிலிருந்து போய்விட்டதா என்பது ஒரு பெரிய கேள்வி. எனவே எப்போதும் அசாதாரணமாக இல்லாமல், சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் அவை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் சமயம், சமயலறையில் பரவி நிச்சயம் நோயில் ஆழ்த்தும். இதனால் பயப்பட தேவையில்லை. ஒரு சிறிய விழிப்புணர்ச்சி மற்றும் சில எச்சரிக்கையின் மூலம், பாக்டீரியா இல்லாத சமையலறையாக மாற்றலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றும் கூறுகின்றனர்.

* கோழி, பன்றி இறைச்சி மற்றும் மற்ற இறைச்சிகளை நாம் குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், அதில் வாழும் நுண்ணுயிரிகள் எப்போதும் குளிர்சாதனப் பெட்டியின் கதவின் கைப்பிடியில் தங்கிவிடும். அதை நம்முள் சிலர் கவனிப்பதில்லை. நாம் சமையலறையில் முழு நேரமும் சுத்தபடுத்தியும், இந்த குளிர்சாதனப் பெட்டியின் கைப்பிடிகளை மறந்து விடுவோம். மேலும் இறைச்சிகளுக்கு பயன்படுத்திய கத்தி அல்லது ஸ்பூன் மூலம் அலமாரியில் உள்ள பாத்திரங்களில் பரவி, பின் நம் வயிற்றை சென்றடையும்.

இதற்கு அவ்வப்போது கை கழுவுதல் சிறந்த பலனை தரும். சரியாக கையை 15 விநாடிகள் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின் ஒரு காகிதத்துண்டு அல்லது முழங்கையால் குழாயை மூடுதல் வேண்டும். இதனால் குழாய் மேல் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம்.

* சுத்தமான குடிநீரால் உணவை தயாரித்தல் அவசியம். பெரும்பாலும் தண்ணீரை உபயோகிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உதாரணமாக, நீங்கள் நல்ல தண்ணீர் பயன்படுத்த வேண்டுமானால், குறிப்பாக மழை காலங்களில் கிணற்று தண்ணீரை சமையலுக்கு பயன்படுத்தலை தவிர்க்கவும் இல்லையேல் அதனை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டும்.

* பொதுவாக ஆடைகளை மட்டுமே நாம் அவ்வபோது துவைத்து சுத்தமாக வைத்துகொள்வோம். ஆனால் நாம் சமையலறையில் பயன்படுத்தும் துண்டுகளை வழக்கமாக கவனிக்க தவறி விடுகிறோம். அதுவும் அந்த துண்டுகள் ஈரத்தன்மை கொண்டு உலராமல் இருப்பதால், சமையலின் வெப்பம் மூலம் கிருமிகள் வெகுவேகமாக பரவி விடும். அதனால் தினமும் அந்த துண்டுகளை துவைத்து உலர வைத்தல் அவசியம்.

* அன்றாடம் பத்திரங்கள் கழுவ பயன்படுத்தும் ஸ்பாஞ்ச்களில் கிருமிகள் தங்கும் வாய்ப்பு உள்ளது. எப்படியெனில் நாம் அவற்றை பாத்திரங்கள் கழுவவும் பயன்படுத்தி, பின் அந்த சிங்க்கை கழுவவும் பயன்படுத்துகிறோம். இதனை நீங்களே யோசித்து பாருங்கள். இதனால் கிருமிகள் பரவாதா என்ன? இந்த ஸ்பாஞ்ச் ஒன்றும் விலை உயர்ந்த ஒரு பொருள் அல்ல. அதனால் புதிய நார் அல்லது ஸ்பாஞ்ச்சை வாங்கி உபயோகியுங்கள். அதை அன்றாட உபயோகிக்க மைக்ரோ வேவ் மூலம் வெப்பப்படுத்த அது சுத்தமாகும். ஏனெனில் உயர் வெப்பம் அதில் உள்ள நுண்ணுயிரிகளை பெரும்பாலும் அழிஙததுவிடும்.

* எப்போதும் பாத்திரம் கழுவும் பாத்திரத் தொட்டியை மட்டும் கழுவுவது வழக்கம். ஆனால் அதன் வழி போகும் பைப்புகளை அவ்வாப்போது சுத்தம் செய்யாமல் இருப்பின், அந்த இருட்டு பகுதியில் கிருமிகள் தங்கி, அழகாகவும் சுத்தமாகவும் கழுவி வைத்துள்ள பத்திரங்களிலும் வேகமாக பரவும்.

பொதுவாக இந்த நோய்க்கிருமிகள் மடு பகுதியில் மெதுவாக வாசம் செய்து, பின் எந்த சுத்தமான உணவுகளின் மீதும் பரவி உங்கள் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, கரப்பான் பூச்சி, எறும்புகள் மற்றும் பாக்டீரியா போன்றவை ஈரப்பதம் மற்றும் இருட்டு நிறைந்த இடங்களில் கவர வாய்ப்புள்ளது. ஆகவே அந்த பைப்-களை வாரத்திற்கு ஒரு முறை சூடான நீர் கொண்டு கழுவுவதால் நுண்ணுயிர்கள் மறையும்.

மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், நம்மை அறியாமல் பரவும் கிருமிகளை, சமையலறையை சுத்தம் செய்வதின் மூலம் நாமும் நம் குடும்பத்தினரும் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். மேலும் இது போன்ற உங்களது வேறு கருத்துகளையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.

English summary

5 Dirtiest Secrets of Your Kitchen And How to Clean Them | சமையலறையில் மறைந்திருக்கும் கிருமிகளை சுத்தம் செய்வது எப்படி?

If you have actually disinfected your kitchen or merely spread the germs around. There's no need to fret: Experts say that with a little awareness and preparation, you can keep your kitchen and its contents bacteria-free.
Desktop Bottom Promotion