For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் உள்ள காய்கறி தோட்டத்தை மேம்படுத்துவதற்கான சில டிப்ஸ்கள்!!!

By Boopathi Lakshmanan
|

நீங்கள் செடிவளர்ப்பில் மிகுந்த பிரியமுள்ளவர்களாக இருந்தால் இயற்கை முறையில் காய்கறிகளை வளர்க்க விரும்புபவர்களாக இருந்தால் இந்த பகுதி முற்றிலும் உங்களுக்கு தான்! குளிர் காலம் முடிந்து வெயில் வெளீரென்று வரும் இந்த நேரத்தில் உங்கள் வீட்டுக்கான காய்கறி தோட்டத்தை நீங்களே உருவாக்குங்கள்.

ஆனால் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு பெரிய இடம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இது தவறான எண்ணமாகும். வீட்டுத் தொட்டங்கள் அமைப்பதற்கு பெரிய இடம் ஏதும் தேவைப்படாது. பெரிய இடங்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமும் கிடையாது.

தோட்டத்திற்கு தகுந்த வளமான மண்ணை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

அருகில் உள்ள தோட்டக்கலை பண்ணைக்குச் சென்று அல்லது இணையதளத்தின் மூலம் விதைகளை வாங்கி பயிரிடத் தயாராகுங்கள். உங்களுக்கு பிடித்த காய்கறிகளை வளர்த்து மகிழுங்கள். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழித்திருங்கள்.

Tips For Kitchen Garden

காய்கறித் தோட்டத்தை அமைப்பதற்கு சில எளிய வழிகளை இந்த பகுதியில் கொடுத்துள்ளோம். இதை எல்லாம் பயன்படுத்தி உங்கள் சொந்த காய்கறித் தோட்டத்தை உருவாக்கி இயற்கையாக மற்றும் ஊட்டமுள்ள காய்களை உருவாக்குங்கள்.

திட்டமிட வேண்டியது அவசியம்

மிக முக்கியமான குறிப்பு என்ன தெரியுமா? இந்த வேலையை செய்ய நினைப்பவர்கள் முன்பாகவே யோசித்து திட்டம் தீட்டி வைத்திருக்க வேண்டியது அவசியம். எங்கு இதை அமைப்பது என்பதையும், விதைகள் மற்றும் உரம் ஆகியவற்றை தயார் நிலையில் வாங்கி வைப்பதும் திட்டத்தில் இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அதற்காக தினமும் எவ்வளவு நேரத்தை செலவு செய்ய முடியும் என்பதை கணக்கிட்டு பின்னர் அதற்கேற்ப பயிரிட வேண்டும். இது இயற்கையான முறையில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான ஒரு முக்கிய குறிப்பாகும்.

சிறியதாயினும் அழகானது

இந்த தோட்டத்தை உருவாக்க நினைப்பது தவறு கிடையாது. ஆனால் இதில் அனுபவம் இல்லாதவர்கள் சிறிது சிறிதாக அமைத்து கற்றுக் கொள்வது அவசியம். செடிகளில் நிறைய வகைகள் உண்டு. எளிய முறையில் வளரக்கூடிய செடியை தேர்வு செய்து நல்ல ஆரோக்கியமான விதை அல்லது முளைகளை வாங்கி பயிரிட வேண்டும். நீங்கள் மேம்படுத்தும் வகையில் அதை அமைக்க வேண்டியது அவசியம். மிகவும் ஆர்வத்துடன் அமைக்க வேண்டும் என்று எண்ணி பாதியில் விட்டு விடக் கூடாது.

விளைச்சலை தரும் பயிர்கள்

முன்பு கூறியது போல் நல்ல உற்பத்தி தரும் செடிகளாக பார்த்து வாங்க வேண்டியது அவசியம். அந்த அந்த காலத்திற்கேற்ப வளரும் செடிகளை தேர்வு செய்து வாங்கி பயிரிட்டால் அவை நல்ல விளைச்சலைத் தரும். உங்களுக்கு ஏற்ற, நீங்கள் விரும்பக்கூடிய மற்றும் உங்கள் தோட்டத்திற்கு ஏற்ற சிறந்த பயிர்களை வாங்கி பயிரிட்டு வளர்த்து நல்ல விளைச்சலை பெற முடியும். அது மட்டுமல்லாமல் இவைகளை எந்த வித இரசாயன உரங்களின் துணை இல்லாமலும் வளர்க்க முடியும்.

இத்தகைய பயிர் செய்பவருடன் பேசுங்கள்

உங்களுக்கு இருக்கும் நண்பர்களுடன் இதை பற்றி பேசி அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். இது குறித்த புத்தகங்கள், மற்றும் இணைய தளங்களில் உள்ள நண்பர்களுடனும் பேசி தெரிந்து கொள்ளலாம். இதை எல்லாம் தெரிந்து கொண்டு அழகான தோட்டத்தை அமையுங்கள்.

தோட்டக்கலை பொருட்கள்

இந்த வேலையை செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கும் போது நல்ல தரமுள்ள மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் பொருட்களாக பார்த்து வாங்குவது அவசியம். இது மிக முக்கிய குறிப்பாகும். பணத்தை பார்த்தால் நல்ல தரமுள்ள பொருட்களை வாங்க முடியாது. இதுவே நல்ல தோட்டத்தை அமைக்க உதவுகின்றது.

English summary

Tips For Kitchen Garden

Here we bring to you some kitchen garden tips, that you can make best use of in decorating your kitchen garden. Make your kitchen garden beautiful with these organic kitchen gardening tips.
Desktop Bottom Promotion