For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிட்ரஸ் பழச் செடிகளை தோட்டத்தில் பயிரிட சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்கள் நமது வாழ்க்கையையும் மற்றும் நமது ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்த வல்லவை. இவை நல்ல சுவையை தருவதாக உள்ளன. குளிர் பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் இத்தகைய புளிப்பு நிறைந்த பழங்களை கொண்டு தயார் செய்வதுண்டு. இதுமட்டுமல்லாமல் இந்த பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலம் நமது சருமத்தையும் சீர் செய்ய வல்லதாக உள்ளது. நிறைய ஆன்டி-ஆக்சிடன்ட்களை கொண்ட இப்பழவகைகள் இதய சம்மந்தமான நோய்கள், புற்றுநோய், சரும கோளாறுகள் ஆகியவற்றை தவிர்க்கவும், குணப்படுத்தவும் உதவும் தன்மை உடையவையாகும்.

உலகில் உள்ள அனைத்து சுவைகளிலும் இத்தகைய புளிப்பு சுவை தான் மிக சிறந்த சுவையாக கருதப்படுகின்றது. ஆகையால் தான் நாமும் நமது குளிர் சாதன பெட்டியில் எலுமிச்சை பழங்களை எப்போதும் வைத்துள்ளோம். ஒரு கிளாஸ் எலுமிச்சை சாற்றை குடித்தால் வரும் சக்தியும், ஊட்டமும் நாம் எதை அருந்தினாலும் கிடைக்காத ஒன்றாகும். உடனடியாக இயற்கையான முறையில் சக்தியூட்டும் பானமாவும் இவை உள்ளன.

இதுப்போன்று வேறு சில: குளிர்காலத்தில் வீட்டில் தக்காளிச் செடியை வளர்க்க சில டிப்ஸ்...

இப்பயன்களுக்கு அப்பாற்பட்டு இம்மரங்கள் அலங்கார பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன என்றால் மிகையாகாது. இவை எளிதாக வளரும் செடிகளாக இருந்தாலும் சில தோட்ட கலைஞர்கள் இதை வளர்க்க சிரமப்படுகின்றனர். இந்த வகை செடியினை நமது வீட்டு தோட்டத்தில் வளர்க்க நாம் எப்போதும் நினைப்பதுண்டு. இத்தகைய செடிகளை வளர்க்கும் சில வழிகளை பற்றி இப்போது நாம் பார்ப்போம்.

Gardening Citrus Fruit Plants

சிட்ரஸ் பழங்களின் வகைகள்

நாம் இதைபற்றி மேலும் தெரிந்து கொள்ளும் முன்பு நாம் பள்ளிப் பருவத்தில், அறிவியல் பாடத்தில் படித்த சிட்ரஸ் பழங்களின் வகைகளைப் பற்றி பார்ப்போம். எலுமிச்சை, ஆரஞ்சு, டாங்கிலோ, திராட்சை ஆகிய பழங்களில் சிட்ரஸ் அமிலம் நிறைந்துள்ளது.

சிட்ரஸ் பழ மரங்களை வளர்க்கும் வழிகள்

மரத்தை நடுதல்

இத்தகைய மரங்களுக்கு அதிக சூரிய வெளிச்சம் தேவை. இது குறைந்தது ஐந்து மணி நேரமாவது தேவைப்படுகின்றது. ஆகையால் இந்த செடியை நடும் போது நன்கு வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் நட்டு வைத்தல் அவசியம். இளவேனிர்காலம் தான் இது வளர்வதற்கு உகந்த காலமாக அமைகின்றது. அப்போது தான் செடியும் ஆரோக்கியமாக வளரும்.

இந்த வகை செடி வளர்வதற்கு பெரிய இடம் ஒன்றும் தேவைப்படாது. இந்த சிறிய வகைச் செடிகள் மூன்றிலிருந்து ஐந்து அடி வரை உயராமாக வளரக்கூடியவையாகும். இதை நாம் ஒரு தொட்டியில் வைத்து கூட வளர்க்க முடியும். இதனால் குளிர் காலத்தில் பனியின் தாக்கம் இல்லாமல் நிழலில் வைத்து வளர்க்க முடியும்.

தொட்டி செடிகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம்

சிறிய வகை சிட்ரஸ் பழ வகை செடிகளை நல்ல சூரிய வெளிச்சத்தில் வைத்து வளர்க்க வேண்டும். இதனால் செடி நன்றாக வளரும். ஆனால் இதற்கு எப்போதும் கவனிப்பு அவசியமாகும்.

முதன் முறையாக இதை முயற்சி செய்பவர்களுக்கு சில குறிப்புகள்: செடிக்கு ஏற்ற அளவு இடம் அந்த தொட்டியில் இருக்கின்றதா என்று தெரிந்து கொண்டு நட்டு வைக்க வேண்டும். அந்த தொட்டியில் போடும் மண் நல்ல உரமிட்டு வளமாக இருப்பது அவசியம். இவையுடன் சேர்ந்து தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பழத்தோட்டத்தில் சிட்ரஸ் செடிக்களை நடுதல்

பழத்தோட்டத்தில் சிட்ரஸ் செடிகளை நட்டு வைக்க விரும்புபவர்கள் புல் தரை அதற்கு அருகில் இல்லாதவகையில் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் 'காலர் ராட்' என்ற நோய் தாக்கக் கூடும். இதுமட்டுமில்லாமல் இரண்டு மீட்டர் அளவிற்காவது தள்ளி இச்செடிகளை நட்டுவைக்க வேண்டும்.

சிட்ரஸ் பழ மரங்கள் இறப்பதற்கு பொதுவான காரணங்கள்

பனி, அதிக அளவு தண்ணீர் ஊற்றுதல், தண்ணீர் வடியாமல் இருப்பது ஆகியவை சிட்ரஸ் பழவகை மரங்கள் இறப்பதற்கு காரணமாக உள்ளன. இவை முக்கியமாக இள நிலை செடிகளில் ஏற்படுகின்றன. நல்ல முதிற்சி அடைந்த செடிகளில் 'காலர் ராட்' என்ற நோய் தாக்குவதால் இறக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

அறுவடை

ஒரு நல்ல வளர்ந்த செடியானது அழகிய மஞ்சள் மற்றும் பச்சை நிற பழங்களை தர வல்லதாய் உள்ளது. ஒரு சராசரி மூன்று அடி உயரம் உள்ள இம்மரத்தில் குறைந்தது இருபது பழமாவது ஒரு முறை கிடைக்கின்றது. இந்த குறிப்புகளை செயல்படுத்தி பயன் பெறுங்கள்.

Story first published: Monday, January 13, 2014, 19:49 [IST]
Desktop Bottom Promotion