For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்றாழை செடி ஆரோக்கியமாக வளர அவசியம் செய்ய வேண்டியவைகள்!!!

By Maha
|

அனைவரது வீட்டிலும் கற்றாழை செடியானது இருக்கும். ஏனெனில் இது ஒருவகையான அலங்கார செடி. இத்தகைய செடி வீட்டை அலங்கரிக்க மட்டுமல்லாமல், பல்வேறு உடல் மற்றும் சரும பிரச்சனைகளையும் போக்கும் சக்தி கொண்டது. அதுமட்டுமின்றி, இந்த செடியை அதிகம் பராமரிக்க தேவையில்லை என்ற ஒரு கருத்தின் காரணமாகவும், பலர் இந்த செடியை வளர்த்து வருகின்றனர்.

இந்த செடியை வீட்டில் வளர்க்க ஆரம்பிக்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் நாட்கள் போக போக, கற்றாழை செடிக்கும் சரியான பராமரிப்புக்களை மேற்கொள்ளாவிட்டால், கற்றாழை செடி பாழாகிவிடும். குறிப்பாக கற்றாழை செடிக்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும்.

Caring & Looking After An Aloe Vera Plant

அப்படி தண்ணீர் அதிகம் ஊற்றினால், கற்றாழையில் உள்ள ஜெல்லின் அளவு அதிகரிக்கும். சரி, இப்போது கற்றாழை செடியை பராமரிக்கும் போது என்னவெல்லாம் மனதில் கொள்ள வேண்டுமென்று பார்ப்போம்.

தண்ணீர் அவசியம்

பெரும்பாலானோர் கற்றாழை செடிக்கு தண்ணீர் அவசியம் ஊற்ற தேவையில்லை என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் கற்றாழைக்கு நாட்கள் போக போகத்தான் தண்ணீர் அதிகம் தேவைப்படும். அப்படி தண்ணீர் ஊற்றினால், அதன் இலைகள் நன்கு மென்மையாக இருப்பதுடன், ஜெல்லும் அதிகம் கிடைக்கும்.

சூரிய வெளிச்சம் வேண்டும்

கற்றாழையின் வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் இன்றியமையாதது. எனவே கற்றாழையை வீட்டின் உள்ளே வளர்க்காமல், சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வளர்க்க வேஷ்டும். ஆனால் அளவுக்கு அதிகமான சூரிய வெளிச்சமும் கற்றாழையின் மீது படக்கூடாது. எனவே அளவாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்து வளர்த்து வாருங்கள்.

குறிப்பு

கற்றாழைக்கு காலநிலைக்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்ற வேண்டும். உதாரணமாக, கோடைக்காலம் என்றால் கற்றாழைக்கு சற்று அதிகப்படியான தண்ணீர் ஊற்ற வேண்டும். குளிர்காலம் என்றால் அளவாக ஊற்றினால் போதும்.

மேற்கூறியவற்றை மனதில் கொண்டு கற்றாழையை வீட்டில் வளர்த்து வந்தால், கற்றாழை நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

English summary

Caring & Looking After An Aloe Vera Plant

If you have an aloe vera plant at home and if it is slowing drying up and dying, here are some of the ways in which you can care and look after the plant. These gardening care tips for looking and caring for an aloe vera plant is simple and easy to follow.
Story first published: Wednesday, March 5, 2014, 16:56 [IST]
Desktop Bottom Promotion