For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோட்டத்தில் உள்ள எறும்புகளால் தோட்டத்திற்கு கிடைக்கும் நன்மைகள்!!!

By Ashok CR
|

உங்கள் தோட்டத்தை ஊடுருவும் பொதுவான பூச்சிகளில் தான் எறும்புகள். உங்கள் தோட்டத்திற்குள் நுழையும் பூச்சிகளின் எண்ணிக்கையில் எறும்புகள் தான் முதலிடத்தை பிடிக்கும். சில நேரங்களில் அதன் எண்ணிக்கைகளை கட்டுப்படுத்துவது இயலாத விஷயமாகி விடும். அதற்கு காரணம் அவர்கள் எண்ணிக்கையில் மிக வேகமாக அதிகரிப்பதே.

இருப்பினும் ஒரு தோட்ட பராமரிப்பாளராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம், எறும்புகளால் உங்கள் தோட்டத்திற்கு பல பயன்களும் அடங்கியுள்ளது. இப்போது எறும்புகளால் நம் தோட்டத்திற்கு கிடைக்க போகும் பயன்களை பற்றி தான் பார்க்க போகிறோம். தொடர்ந்து படியுங்கள்...

Benefits Of Having Ants In Your Garden

முதலில் எறும்புகளின் குணத்தை நாம் புரிந்து கொள்வோம். எறும்புகள் பொதுவாக கூட்டமாக தான் வாழும். அதிலும் இனப்பெருக்கம் செய்யாத பெண் எறும்புகளின் எண்ணிக்கை தான் அதிகம். அவர்களின் முக்கிய பங்கே உணவுகளை சேகரிப்பது, கூடுகள் கட்டுவது மற்றும் ராணி எறும்பின் முட்டைகளைப் பாதுகாப்பது.

சில நேரங்களில், சிறகு முளைத்த ஆண் மற்றும் பெண் எறும்புகள் இனப்பெருக்கம் செய்வதற்காக அழைக்கப்படுவார்கள். ஆண் எறும்புகள் சீக்கிரமாகவே இறந்தாலும் கூட பெண் எறும்புகள் தங்கள் வேலையை தொடர்ந்து செய்து வரும். இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண் எறும்புகள் தங்களின் சிறகை இழந்துவிடும். அதன் பின் அவர்கள் வேறு கூட்டத்தோடு இணைந்துவிடும்.

சரி, எறும்புகளால் உங்கள் தோட்டத்திற்கு உண்டாகும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்...

செடியின் வளர்ச்சியில் தாக்கத்தை உண்டாக்குவதால் ஃபயர் எறும்பு மற்றும் கார்பன்டர் எறும்பு உட்பட சில எறும்பு வகைகள் அழிவு செய்யம் உயிரினங்களாக கருதப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட, பல எறும்பு வகைகள் செடிகளுக்கு நன்மையை உண்டாக்குகிறது. எறும்புகள் மண்ணில் கூடு கட்டினால், அவைகள் சிக்கலான வழிகளை கொண்ட சுரங்கங்களாக குழி தோண்டும். இதனால் காற்றையும் ஈரப்பதத்தையும் பூமி நன்றாக ஈர்த்துக் கொள்ளும். இதனால் செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதற்கு இது உதவியாக அமையும். எறும்புகள் கொண்டு வந்து போடும் இலைகள் சிதைந்து போவதால், அதுவே செடிகளுக்கு முனைப்புடன் செயல்படும் இயற்கை உரமாக அமையும்.

ப்ரீடேட்டர் எறும்புகள் தங்களுக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும் பிற சிறிய பூச்சிகளை உண்ணும்; குறிப்பாக உங்கள் தோட்டத்தில். உணவுகளை சேகரிக்கும் முயற்சியில் விதிகளை பல இடங்களில் பரப்பி விடும் பாலினேட்டராக செயல்படும்.

பிற பூச்சிகளை கையாளு வேண்டும் என்றால், அவைகளை தாக்க எறும்புகள் தங்களின் உணர்ச்சிக் கொம்பு பயன்படுத்தும். இதனால் அதிலிருந்து வெளிவரும் இனிப்பான திரவம் செடிகளின் ஆரம்ப கட்ட வளர்ச்சி நிலைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அதனால் சில வகைகளை தவிர்த்து பார்க்கையில், எறும்புகள் உங்கள் தோட்டத்திற்கு பயனுள்ளதாகவே உள்ளது.

English summary

Benefits Of Having Ants In Your Garden

In this article, we look at the benefits of ants in your garden. Read on...
Story first published: Saturday, August 23, 2014, 17:01 [IST]
Desktop Bottom Promotion