For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் காய்கறித் தோட்டம் வெக்க போறீங்களா? அப்ப இது யூஸ்ஃபுல்லா இருக்கும்...

By Ashok CR
|

வீட்டுக் காய்கறித் தோட்டம் என்பது தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மிகவும் வளர்ந்து வருகிறது. நிறைய இல்லத்தரசிகள் தற்பொழுது இந்தத் தோட்டக்கலையை தங்களது பொழுதுப்போக்கிற்காகச் செய்ய ஆரம்பித்து உள்ளனர். இது நல்ல வெளியீட்டையும் அவர்களுக்குத் தருகிறது. இந்தக் காய்கறித் தோட்டத்தின் மூலம் உங்கள் வீட்டுக் கொல்லைபுறத்தில் காய்கள், பழங்கள், கரிமசாலாப் பொருட்கள் விளையும் செடிகள் போன்றவற்றையும் வளர்க்க முடியும். வீட்டுக் காய்கறித் தோட்டம் என்ற பெயரின் அடிப்படையில் இந்த தோட்டம் இருப்பதால் இதை வீட்டுச் சமையல் அறைக்கு வெளியில் மட்டும் இருக்கும் என்று எண்ண வேண்டாம். இது சமையல் அறைக்குப் பின்னால் மற்றும் அதற்கு அடுத்தும் இருக்கலாம்.

வீட்டுக் காய்கறித் தோட்டத்திற்கான சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்படுகின்றன. இந்தக் குறிப்புகள் முழுவதையும் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதன் மூலம் நீங்கள் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள், கறிவேப்பிலை, எலுமிச்சை, துளசி, பச்சிலை போன்றவற்றை வளர்க்கலாம். காய்கறித் தோட்டத்தில் அதிக அளவிலான காய்கறிகளை வளர்க்கலாம். ஆனால் இது பருவநிலை மற்றும் நம் உழைப்பைப் பொறுத்து உள்ளது.

கீழ்க்கண்ட குறிப்புகள் வீட்டுக் காய்கறித் தோட்டத்தை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். இது உங்கள் தோட்டத்தை உருவாக்கி, பொருத்தமான காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயிரிட்டுப் பராமரிக்க உதவுகின்றன.

Tips For Maintaining Kitchen Garden

சூரியக்கதிர் வரும் பகுதி

எப்பொழுதும் பின்புறத்தில் உள்ள போதுமான சூரியக்கதிர்வீச்சு வரும் இடத்தை தேர்ந்தெடுக்கவும். சூரியக்கதிர் தாவரங்கள் வளர்வதற்கும், தேவையான ஆற்றல் பெறுவதற்கும் உரிய வளங்களை தருகிறது. கண்டிப்பாகத் தாவரங்கள் தினமும் 5-6 மணிநேரம் போதுமான அளவு வெயிலில் இருக்க வேண்டும். எனவே மறைவான இடங்களில் காய்கறித் தோட்டத்தை போடக் கூடாது.

நீர் அளவு

காய்கறித் தோட்டத்திற்கு தேவையான நீர் மட்டம் உள்ள மண்ணைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது இயற்கையாகவே தண்ணீரை வடிக்கும் தன்மையுடன்னும் இருக்க வேண்டும். மிகவும் அதிக அளவு அல்லது மிகவும் குறைவான அளவு தண்ணீர் தாவரங்களுக்கு ஏதுவானது அல்ல.

மண்ணை தயார் செய்தல்

எந்த இடத்தில் நாம் காய்கறித் தோட்டம் போடா வேண்டுமோ அந்த இடத்தில் உள்ள மண்ணை முதலில் தயார் செய்யவும். மண்ணில் இருந்து முதலில் கடினமான கல் மற்றும் புல் போன்றவற்றை அகற்றவும். அதில் குப்பை உரத்தையும் சேர்த்து மண்ணை தயார் செய்யவும்.

தாவரங்களை தேர்ந்தெடுத்தல்

உங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை முன்கூட்டியே தேர்வு செய்யவும். இந்த தேர்ந்தெடுத்தல் மண்ணின் வகைக்கு ஏற்பவும், எந்த தாவரம் இந்த மண்ணிற்கு ஏதுவானது என்றும், பருவநிலைக்கு ஏற்பவும் மற்றும் நமது அன்றாட தேவைகளுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும்.

வடிவமைப்பு

சரியான வடிவமைப்பு மற்றும் திட்டத்துடன் காய்கறித் தோட்டத்தை உருவாக்கவும். எந்த தாவரம், எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யவும். இந்த திட்டம் உங்கள் தோட்டத்தின் அமைப்பை நன்கு உருவாக்குகிறது. இதன் மூலம் பராமரிப்பு வேலை குறைந்து, எளிதாகவும் உள்ளது.

பயிற்றுவிப்பு

உங்கள் தாவரத்திற்கு தொடக்கத்தில் நிறைய வளர்ச்சி தேவைப்படுகிறது. ஒவ்வொரு தவரத்திற்கும் தனித்தனி தேவைகள் இருக்கும். அததற்கு தேவையான ஊட்டப் பொருட்களை நாம் கொடுக்க வேண்டும்.

தாவரத்திற்கு தண்ணீர் ஊற்றுதல்

தினமும் தண்ணீர் என்பது அவசியமானது. நீங்கள் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் இருப்பதை நினைத்து பாருங்கள். அதேதான் தாவரத்திற்கும் தண்ணீர் இல்லையேன்றால் ஏற்படுகிறது. முக்கியமாக இளஞ்செடியில் அதன் வேருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. பரப்புக் கவர் நீரில் மட்டும் இதனால் வளர முடியாது.

சுழற்றல்

விவசாயத்தில் மேற்கொள்ளும் தாவர சுழற்சி போல, பருவநிலைக்கு ஏற்ப தாவரங்களை மாற்றி அமைக்கவும். இது மண்ணின் வளர்ச்சிக்கும் மற்றும் காய், பழ விதவிதமான உற்பத்திக்கும் உதவுகிறது.

தோட்டத்தை பராமரித்தல்

தாவரத்தை பயிரிட்டவுடன் அதை பராமரிப்பது மிகவும் நல்லது. ஒவ்வொரு தாவரமும் தனித்தனி அறுவடை காலத்தைக் கொண்டுள்ளது. அறுவடை என்பது தாவரங்களில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கப் பயன்படுகிறது. இது வீட்டுக் காய்கறித் தோட்டத்திற்கு ஒரு மிகச் சிறந்த குறிப்பு ஆகும்.

தொடர்ச்சியான செய்முறை

வீட்டுக் காய்கறித் தோட்டம் என்பது ஒரு வார பழக்கமட்டும் அல்ல. நீங்கள் தோட்டத்தை ஆரம்பித்ததற்கு அப்பறம் அதை ஒரு குழந்தையை போல் ஊட்டச்சத்துகள் கொடுத்து வளர்க்க வேண்டும்.

Story first published: Saturday, December 14, 2013, 18:41 [IST]
Desktop Bottom Promotion