For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் வீட்டில் தக்காளிச் செடியை வளர்க்க சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

உலகிலேயே அதிக அளவில் உட்கொள்ளும் பழங்களில் தக்காளியும் ஒன்று. சாறு நிறைந்த சிவப்பு நிறம் கொண்ட இப் பழம் உலகமெங்கிலும் உள்ள பல உணவு வகைகளின் மூலப்பொருளாக விளங்குகின்றது. சிறிது புளிப்பாகவும், சிறிது இனிப்பாகவும் இருக்கும் தக்காளி வெயில் காலத்தில் தான் அதிகம் வளர்கின்றது.

தக்காளி வளர்ப்பிற்கு அதிக அளவு வெயிலும் சூடான சுற்றுச் சூழலும் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில் மார்க்கெட்களில் கிடைக்கும் தக்காளி இரசாயனத்தாலும், ஹைபிரிட் நுட்பத்தை சேர்ந்ததாகவும் உள்ளன. இவற்றில் இயற்கையான சத்தோ அல்லது சுவையோ இருப்பதில்லை.

Tips For Growing Tomatoes: Winter Special

குளிர்காலத்தில் தக்காளி செடிகளை உங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம். குளிர் காலத்தில் தக்காளி செடிகளை வளர்ப்பது சிறிது கடினம் தான். இதற்காக, பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அதிக அளவு வேலையும் முயற்சியும் செய்ய வேண்டியதாக இருக்கும். ஆனால் இந்த குறிப்புகளை பயன்படுத்தினால் தக்காளி வளர்ப்பது அவ்வளவு கடினமாக இருக்காது.

எனவே, குளிர்காலத்தில் தக்காளி பயிரிட்டு வளர்ப்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். நீங்கள் செய்யும் வேலையும் முயற்சியும், நீங்கள் புதிதாக அறுவடை செய்த தக்காளிகளை ருசி காணும் போது உங்களுக்குத் தெரியும். தக்காளிகளை குளிர்காலத்தில் வளர்ப்பதற்கு பல வழிகள் உள்ளது. அவற்றில் சிலவற்றை காண்போம்:

வெளிச்சம்: தக்காளி பழத்தை வளர்ப்பதற்கு நிறைய வெளிச்சம் தேவை. குளிர் காலத்தில் வரும் சூரிய வெளிச்சம் போதுமானதாய் இருக்காது. தக்காளி செடி துளிர் விடும் காலத்தில் அதிக அளவு சூரிய வெளிச்சம் தேவைப்படும். நாம் இதை வளர்க்கும் போது செயற்கை முறையை கொண்டு ஒளியை 10-12 மணி நேரம் வெளிச்சம் கொடுக்க வேண்டும். மிகுதியான அளவு ஒளியில் இருக்கும் செடிகள் நல்ல விளைச்சலை தருகின்றன. நன்கு வளர்ந்து கன்று நிலைக்கு வந்த உடன் அதை தோட்டத்திற்கு மாற்றி, நல்ல அளவு சூரிய வெளிச்சம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் கிரீன் ஹவுஸில் இதை வளர்க்க நேரினால் செயற்கை முறையில் அமைத்த ஒளி தேவைப்படாது.

நிலத்தின் சூட்டு தன்மை: நல்ல சூடான மற்றும் கதகதப்பான சூழலில் தக்காளிகள் நன்கு வளர்கின்றன. குளிர்காலத்தில் மண்ணின் தன்மை சூடாக இருக்காது. செடிக்கு இதமூட்டும் வகையில் மண்தரையில் இன்சுலெட்டிங் சீட்டை விரித்து வைப்பது நல்லது. சாதாரணமான பிளாஸ்டிக் சீட்டை கூட பயன்படுத்தலாம். இந்த செயலை நாம் பயிரிடும்போதே செய்ய வேண்டும். பிளாஸ்டிக்குகள் நிலத்தின் சூட்டை அதிலேயே தங்க செய்கின்றது. இவை தக்காளி செடிகளை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றன.

ஆழமாக புதைப்பது: இதமான மண்பாங்கு வேண்டியதால் நன்கு ஆழமாக குழிகளை தோண்டி விதைகளையோ அல்லது முளைகளையோ புதைக்க வேண்டும். மேலிருக்கும் இலைகளை மட்டும் வெளியே விட்டால் போதுமானதாய் இருக்கும். இவை தக்காளி செடிகள் குளிர் காலத்தில் வளர்வதற்கு உதவியாக இருக்கின்றன. இத்தகைய முறையை கையாளும் போது செடிகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைக்க வேண்டாம். ஏனெனில், செடிகள் ஒன்றோடு ஒன்று நெரிசலில் சிக்கி வளர்ச்சி தடைபட்டு போய்விடும் வாய்ப்புக்கள் உள்ளது.

நேரம் பார்த்து நிலப்போர்வையிடுதல்: இந்த போர்வையானது நிலத்தின் மேல் பரப்பில் போடப்படுகின்றது. அது தேங்காய் நார், அல்லது உதிர்ந்த இலைகள் போன்றவற்றால் ஒரு உர அடுக்கு போல செய்யப்படுகின்றது. இவை தண்ணீரை தக்க வைக்கவும் உரமாகவும் உதவுகின்றன. இந்த செயலை நாம் சரியான நேரத்தை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். இவை மண்ணின் தன்மையை மேம்படுத்தும் ஆனால் மண்ணில் உள்ள சூட்டை குறைக்கும். இத்தகைய போர்வைகளை நாம் போடும்போது பொதுவாக சூடான பருவத்தில் வளரும் தக்காளிகள் வளர சிறிது கடினமாக இருக்கும். இதை தவிர்பதற்காக முளையிலேயே இதை போடாமல் நன்கு முளைத்த பின் இந்த அடுக்கை போட வேண்டும்.

வேறு வேறு வகைகளை ஒன்றாக பயிரிடுதல்: பல வகையான தக்காளி பழ செடிகள் உள்ளன. இவற்றிலிருந்து 3 அல்லது 4 வகையான செடிகளை ஒன்றாக பயிரிடலாம். பொதுவாக தக்காளி செடிகள் சுற்றத்திற்கும் அதன் வெப்பநிலைக்கும் பொருந்தி தான் வாழும். இப்படி நாம் பல வகைகளை பயிரிடுவதன் மூலம் எந்த வகை நமது மண்பாங்கை ஏற்று நமது இயற்கையான வளங்களை ஏற்று வளர்கின்றது என்பதை நாம் அறிய முடியும்.

English summary

Tips For Growing Tomatoes: Winter Special

During winters you can try to grow tomatoes in your backyard garden. Growing tomatoes during winters is a tough job. A lot of precautions need to be taken when growing tomatoes during winters. There is a lot of hard work and efforts required to grow tomatoes during winters.
Story first published: Thursday, December 26, 2013, 11:32 [IST]
Desktop Bottom Promotion