For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தின் போது ரோஜா செடியை பராமரிக்க சில டிப்ஸ்...

By Ashok CR
|

பொதுவாக குளிர்காலத்தின் போது கடுமையான குளிர் காற்றும் தென்றலும் வீசிக் கொண்டிருக்கும். நம்மை போலவே செடிகளும் புதர்களும் கூட குளிர் காலத்தால் பாதிக்கப்படுகின்றன. வறட்சியாக வீசும் குளிர்ந்த காற்று செடிகளையும் சேர்த்து தான் பாதிக்கும். ஆனால் சில செடிகளோ குளிர் காலத்தை சமாளிப்பதில் பெரும் பாடுபடும். ரோஜா, தக்காளி, செம்பருத்தி மற்றும் இதர அலங்கார செடிகள் அனைத்தும் குளிர் காலத்தின் போது எதிர்ப்புத் திறனற்று விளங்கும் செடிகளுக்கான உதாரணங்கள்.

குளிர்காலத்தில் மற்ற அனைத்து செடிகளை விட ரோஜா செடிகளை பராமரிக்கவும் பாதுகாக்கவும் கூடுதல் கவனம் தேவை. ரோஜா என்ற அழகிய பூஞ்செடியை விரும்பாதவர்களே இருக்க முடியாது. ஒவ்வொருத்தரின் வீட்டு தோட்டத்தில் கண்டிப்பாக ரோஜா செடிகளை பார்த்து விட முடியும். மென்மையாக விளங்கும் ரோஜா செடி கடுமையான வெப்பநிலை மற்றும் கால மாறுதலில் சுலபமாக பாதிக்கப்பட்டு விடும்.

Gardening Of Rose Flower: Winter Tips

குளிர்காலம் தொடங்கும் போது உங்கள் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை பாதுகாப்பது என்பது அவசியமான ஒன்றாகும். மற்ற காலங்களை காட்டிலும் குளிர்காலத்தில் அதற்கு கூடுதல் பராமரிப்பு தேவை. குளிர்காலத்தின் போது உங்கள் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை பராமரிக்க சில பயனுள்ள டிப்ஸ்கள் உள்ளது. இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், குளிர்காலத்தில் உங்கள் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை பராமரிக்க அது பெரிதும் உதவியாக இருக்கும்.

சரி, அப்படிப்பட்ட சில டிப்ஸ்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

செடிகளை மூடி வையுங்கள்:

குளிர்காலத்தின் போது வீசும் குளிர் காற்று ரோஜா செடிகளின் மீது வீசும் போது அதனை வெகுவாக பாதிக்கும். வறண்ட நிலையில் வீசும் குளிர் காற்றினில் இருந்து உங்கள் ரோஜா செடிகளை பாதுகாக்க அவைகளை அதன் ஓரமாக மூடி வையுங்கள். அட்டை பெட்டி அல்லது பிளாஸ்டிக் பெட்டியை பயன்படுத்தி ரோஜா செடிகளை மூடி வையுங்கள். கடுமையான காற்றில் இருந்து இது உங்கள் ரோஜா செடிகளை பாதுகாக்கும். சூரிய ஒளியை பயன்படுத்த செடியின் மேல் பகுதியை திறந்தே வையுங்கள்.

சுற்றுப்புற இடத்தை சுத்தப்படுத்துங்கள்:

குளிர்காலத்தின் போது மரங்கள் மற்றும் செடிகளில் இருந்து இலைகள் உதிரும். அப்போது உங்கள் தோட்டம் மரங்கள் மற்றும் செடிகளில் இருந்து விழுந்த காம்புகள் மற்றும் இலைகளால் சூழ்ந்து இருக்கும். பொதுவாக தொற்றுக்கள் மற்றும் நோய்களினால் வெகுவாக பாதிப்படையும் ரோஜா செடிகள். உதிர்ந்த இலை மற்றும் காம்புகளில் பூச்சிக் கூட்டங்களை காண நேரிடலாம். அதனால் ரோஜா செடிகளுக்கு அருகில் உள்ள இடத்தை சுத்தமாக வையுங்கள். அப்போது தான் அது கிருமிகள் மற்றும் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். அது போக உங்கள் தோட்டம் சுத்தமாக இருந்தால் அதன் தோற்றமும் அழகாகத் தானே இருக்கும்.

தண்ணீர்:

குளிர்காலத்தின் போது ரோஜா செடிகள் வேகமாகவே வறண்டு நீர் வரத்து இல்லாமல் போகும். அதனால் ரோஜா செடிகளுக்கு சீரான முறையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனால் அது நற்பதத்துடன் நீர் வரத்து நிறைந்து காணப்படும். உங்கள் தோட்ட மண்ணிற்கு சீரான முறையில் தண்ணீர் ஊற்றி வந்தால் ரோஜா செடிகளின் வேர் வரைக்கும் தண்ணீர் செல்லும் அளவிற்கு அதற்கு நீர் ஊற்ற தேவையில்லை. அனைத்து உயிரினங்களும் செயல்படுவதற்கு மூலமாக விளங்குவது தண்ணீரே. அதனால் ரோஜா செடிக்கும் போதுமான அளவு தண்ணீர் தேவைப்படும். அப்போது தான் அது வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

அடிப்பாகத்தை மூடுங்கள்:

குளிர்காலத்தின் போது ரோஜா செடிகளின் அடி பாகத்தை மண் மற்றும் உரத்தை கொண்டு மூடி வையுங்கள். இது செடிகளுக்கு ஆதரவும் வெப்ப உணர்வும் ஏற்படுத்தும். செடியின் தொடக்க நிலை தண்டு பகுதியை அடுக்குகளாக மூடி வையுங்கள். சிறப்பான தோட்டக்கலை டிப்ஸாக இது விளங்கினாலும் கூட இதை பின்பற்றும் போது கூடுதல் கவனம் தேவை. குளிர் காலம் தீவிரமாக இருக்கும் போது, செடியின் தண்டு பகுதியை மேலும் ஒரு அடுக்குக்கு உயர்த்தி மூடவும். சில நேரம் குழி தோண்டி பள்ளம் அமைத்து அதில் ரோஜா செடியை மறைத்தும் வைக்கலாம். அப்படி வைக்கும் போது மேல் பகுதியில் உள்ள இலைகளும் மொட்டுக்களும் மொட்டுமே வெளியே தெரியும்.

வீட்டினுள் தோட்டம்:

குளிர்காலத்தின் போது குளிர் மிகவும் தீவிரமாக இருக்கும் போது, ரோஜா செடிகளால் அதனை தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவைகளை வீட்டிற்குள் மாற்றி விடலாம். ஆனால் வீட்டிற்குள் மாற்றும் போது அதன் பராமரிப்பு இன்னமும் அதிகரிக்கும். ஆனால் அவைகளை வீட்டிற்குள் மாற்றினால் சில போன்களும் உள்ளது - அதற்கு தேவையான வெப்பம் கிடைத்து குளிர் காற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். சூரிய ஒழி படும் இடமாக பார்த்து ரோஜா செடிகளை வையுங்கள். அவைகளை ஜன்னலருகிலோ அல்லது கதவின் அருகிலோ வைக்கலாம். ஆனால் அப்படி வைக்கும் போது அது குளிர் காற்றில் தென்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

English summary

Gardening Of Rose Flower: Winter Tips

Rose gardening in winter needs extra efforts compared to other seasons. There are some useful tips for rose gardening in winters. These tips would definitely help you to maintain the rose plants in your garden.
Story first published: Friday, December 20, 2013, 17:02 [IST]
Desktop Bottom Promotion