For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரட் பயிரிடப் போகிறீர்களா? முதல்ல இத படிங்க...

By Boopathi Lakshmanan
|

குளிர்காலத்தின் போது காய்கறிகளை வளர்ப்பது ஒரு நல்ல டைம் பாஸாக மட்டுமல்லாமல், பூச்சுக்கொல்லி பயன்படுத்தாத காய்கறிகளை உருவாக்கவும் உதவும். குளிர்காலத்தில் வளரும் காய்கறிகளை ஒப்பிடும்போது சிறந்த காயாக, மிகுந்த வெகுமதியை ஈட்ட கூடிய காயாக கேரட் விளங்குகிறது. இதை தேர்ந்தெடுத்து வளர்ப்பது சிறந்ததாகும். உங்களது தோட்டத்தில் கொஞ்சம் நேரத்தையும், உழைப்பையும் நீங்கள் செலவு செய்தால் நல்ல கேரட்டுகளை அறுவடை செய்ய முடியும். இதை செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

வீட்டில் வளர்க்கப்படும் கேரட்டுகள் உங்கள் வேலைக்கேற்ப உங்களை திருப்திபடுத்தி மகிழ்விக்கும். கடைகளில் விற்பனை செய்யப்படும் கேரட்டை காட்டிலும் இவை அழகாகவும் குண்டாகவும் இருக்காது. ஆனால் நிச்சயம் உங்களின் உழைப்பின் அடையாளத்திற்கு ஏற்ப நன்றாக இருக்கும். இத்தகைய கேரட்டுகள் சூப்பர் மார்கெட்டிலும் கிடைக்காது. இது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு காயான கேரட், உங்களுடைய தலை முடி, கண்கள், தோல் ஆகியவற்றில் ஊட்டம் சேர்த்து வலுவூட்டும் சத்துக்களை கொண்டிருக்கிறது.

சரியான வேர் அளவை கொண்ட கேரட் செடிகளை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான விஷயமாக உள்ளது. இதனால் நமக்கு சிறந்த கேரட்டுகள் கிடைக்கும். கேரட் வளர்ப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கீழ்காணும் பகுதியில் இதை பற்றிய விவரங்களை காண்போம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயாரிப்பு

தயாரிப்பு

கேரட் பயிரிடுதலில் மிக முக்கியமான காரியம் தயாரிப்பு தான். உங்களுக்கு நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், கேரட்டை பயிரிட நினைக்கும் இடத்தை சிறிது உயர்த்தி வைக்கவோ அல்லது நிலத்தில் இரண்டு குழியளவு தோண்டியோ பயிரிடல் வேண்டும். தளர்வான மணற்பாங்கை கொண்டு பாறைகளில்லாத இடத்தில் அழகான மெல்லிய மற்றும் நீளமான கேரட்டுகள் வளரும்.

சரியான அளவில் தளர்வு செய்யப்பட்ட மண்

சரியான அளவில் தளர்வு செய்யப்பட்ட மண்

மண்ணை நல்ல முறையில் தளர்வு (உழவு) செய்த பின் பயிரிடுதல் மிக அவசியமானதாகும். இதை செய்யும் போது நமக்கு பெரிய, சிறந்த கேரட்டுகள் கிடைக்கும். மண் இறுகி இருந்தால் செடியின் வேர்கள் படர்ந்து செல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விடும். ஆகையால் அதனால் அதன் உண்மையான உயரத்திற்கு வளர முடியாது.

விதைகளை விதைக்கும் முறை

விதைகளை விதைக்கும் முறை

12-ல் இருந்து 20 மிமீ ஆழத்திற்கு வரிசைப்படுத்தி 150மிமீ தள்ளி விதைத்தால் கேரட்டுகள் சீக்கிரம் வளரும். விதைகளை மண்ணாலும், உதிர்ந்த இலைகலாலும் நன்கு மூடி வைப்பது நல்ல பலனைத் தரும். நல்ல விதை படுக்கை இருந்தால் சிறந்த விளைச்சலைத் தரும்.

நீர் பாய்ச்சுதல்

நீர் பாய்ச்சுதல்

விதைகள் முளை விடுவதற்கு போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். இவ்வாறு செய்யும் போது கேரட்டுகள் சிறந்த முறையில் வளரும். விதைகள் மண்ணில் மேலோட்டமாக காணப்படுவதால் மண் சீக்கிரம் வரண்டு போகும் குளிர்காலத்தில் அடிக்கடி நீர்ப்பாய்ச்சுவது சிறந்தது.

கோணியை பயன்படுத்துங்கள்

கோணியை பயன்படுத்துங்கள்

விதை படுக்கையில் சணலால் செய்த கோனியை வைத்து மூடி வைத்து, 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினால் போதுமானதாக இருக்கும். இது ஈரப்பதத்துடன் விதைகளை வைப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். முதல் முளை வந்தவுடன் கோணியை எடுத்து விட்டு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

வேரை மணலால் மூடுங்கள்

வேரை மணலால் மூடுங்கள்

கேரட் மேலோட்டமாக வளர்வதால் அதன் வேர்கள் வெளியே வர வாய்ப்புக்கள் அதிகம். அதை அவ்வப்போது கவனித்து மண்ணை கொண்டு மூடிவிட வேண்டும். சூரிய ஒளி நேரடியாக அதன் மீது பட்டால் கேரட்டுகளின் மேல் பகுதியில் பச்சை நிறம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அருகருகே பயிரிடுதல்

அருகருகே பயிரிடுதல்

பெரிய வரிசைகளில் அதாவது 4 அடி அகலமாகவும் 10 அடி நீளமாகவும் வைப்பது ஒரு சிறந்த யோசனையாகும். தோட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி ஒன்று அல்லது இரண்டு விதைகளை ஒரே குழியில் போடலாம். மண் புழுக்களை அங்கு சுற்றி வளர விடுவது நல்லது.

உரமிடுதல்

உரமிடுதல்

பாஸ்பரஸ் குளிர்கால காய்கறிகளை வளர்க்க உதவியாக இருக்கும். செடியை நடுவதற்கு முன் எலும்புச் சத்துகளை கொண்ட உரத்தை போட்டால் பயிர்கள் மிகவும் செழுமையாக வளரும். இது மட்டுமல்லாமல் மீன் மற்றும் கடற் பாசி ஆகியவற்றின் கலவையை நன்கு நொதிக்கச் (Fermentation) செய்த பின்னர் பின்னர் பயன்படுத்த வேண்டும்.

வேறு தாவரங்களோடு வளர விடுவது

வேறு தாவரங்களோடு வளர விடுவது

கேரட்டுகள் தனியாக மட்டுமல்லாமல் ரோஸ்மேரி, சேஜ் அல்லது சிவ்ஸ் ஆகிய செடிகளுடனும் சேர்த்து வளர்க்கலாம். ஆனால் அம்பெல்லிபெரே குடும்பத்தை சேர்ந்த தாவரங்களுடன் மட்டும் இவ்வாறு வளர்க்க கூடாது. உதாரணத்திற்கு தில், கொத்தமல்லி போன்ற தாவரங்களுடன் கேரட்டுகள் வளரும் போது அவை குறுக்கு மகரந்த சேர்க்கைக்கு வழிசெய்யும்.

பூச்சிக்களை கட்டுப்படுத்துதல்

பூச்சிக்களை கட்டுப்படுத்துதல்

உயிரி அல்லது அவிந்து என அழைக்கப்படும் லீப் ஹாப்பர் என்ற பூச்சி மணலில் கட்டியை உருவாக்கும் பாக்டீரியத்தை பரப்பி பொட்டு போன்ற பாதிப்புகளை கேரட்டில் உருவாக்கும். ஓட்டுண்ணி பாக்டீரிககளால் பாதிக்கப்படும் செடிகளிலிருந்து சற்று தொலைவில் கேரட்டை வளர்க்க வேண்டும். வரிசையில் கவர்களை கொண்டு மூடி வைத்தால் பூச்சிக்கள் வராமல் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Carrot Gardening: 10 Effective Tips

One of the most important carrot gardening tips is to select the best type of carrot with the right root size and shape to suit your soil. Do you want to know other interesting carrot gardening tips? Here, we have some excellent tricky carrot gardening ideas.
Story first published: Tuesday, December 17, 2013, 20:22 [IST]
Desktop Bottom Promotion