For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சப்போட்டா சாகுபடி செய்வது எப்படி?

By Mayura Akilan
|

Sapota Tree
வீட்டுத்தோட்டத்தில் சப்போட்டா மரத்தை எளிதாக வளர்க்கலாம். இதன் பழங்கள் சுவையானது. அதிக சத்து நிறைந்தது. சரும வளர்ச்சியை பாதுகாக்கிறது. நம் தோட்டத்தில் சப்போட்டா பழ மரங்களை வளர்ப்பதன் மூலம் நமக்கு தேவையான சத்தான பழங்களை அன்றாடம் பறித்து சாப்பிடலாம். சப்போட்டா பழ மரம் வளர்ப்பு பற்றி வேளாண்துறை அதிகாரிகள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது.நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது.ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது. சப்போட்டா பழங்கள் ஜூலை – அக்டோபர் மாதத்தில் பயிரிட ஏற்றது

விதை & உரமிடல்

கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, உள்ளிட்ட பல ரகங்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். பயிரிடும் போது 1x1x1 மீட்டர் நீள அகல ஆழ குழிவெட்ட வேண்டும். அதில் 5:10:5 அளவுள்ள சிங்கில் சூப்பர் பாஸ்பேட், வேப்பம்புண்ணாக்கு, நுண்ணியிரி கலந்து உரமிடல் வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். பின்னர் சீரான இடைவெளியிடல தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்க வேண்டும்.சப்போட்டா மரத்திற்கு கவாத்து செய்தல் தேவை இல்லை.உயரமாக வளரக்கூடிய ஒரு சில தண்டுகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும்.

உரம், பூச்சிதாக்குதல்

சப்போட்டா பயிர் வருடத்திற்கு இரண்டு முறை பெரும்பான்மையாக காய்க்கும்.ஏப்ரல் முதல் ஜூலை வரை ஒரு முறையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஓரளவு காய்க்கும். பேரிக் அமில தழை தெளிப்பானை ஜீன் மாதத்திற்கு இடை இடையில் நான்கு முறை தெளித்தால் சப்போட்டா பழம் நன்கு காய்க்கும்.

சாப்போட்டாவில் பூச்சி தாக்குதலை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும். புழு கால் களற்று மஞ்சள் நிறமாக காணப்படும். தாய்ப்பூச்சி பழுப்பு நிற கண்ணாடி போன்ற இறக்கைகளுடன் காணப்படும். புழு பாதி பழுத்த பழங்களை தாக்கி, மரத்திலிருந்து பழங்களை விழச்செய்யும். தாக்கிய பழங்களில் நீர் வடியும். பழத்தின் மேற்பகுதியில் பழுப்பு நிறத்தில் அழகிய திட்டுகள் காணப்படும்.

பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றி விட வேண்டும். மரத்தைச் சுற்றி உழவு செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ் மற்றும் ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி புழு ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம்.

அறுவடை காலம்

சப்போட்டா பழத்தின் முதிர்ச்சியை அறிவது சிறிது கடினம். இதர பயிர்களைப் போல் இதில் நிறமாற்றம் ஏற்படுவதில்லை.ஆயினும் பழத்தின் தோலில் உள்ள சிறிய சிறிய கருநிறத்துகள்கள் மறைந்து, பழங்கள் சிறிது பளபளவென்றிருக்கும்.

பழத்தை நகத்தால் கீறிப்பார்த்தால், உள்ளே மித மஞ்சள் நிறம் தெரிய வேண்டும். பால் வடியக் கூடாது. பழத்தின் அடிப்பாகத்தில் உள்ள முள் போன்ற சிறிய நுனி, எளிதில் பிரிந்துவரும். பழத்தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகும்.

English summary

How to grow Sapota Tree | சப்போட்டா சாகுபடி செய்வது எப்படி?

The Sapota when fully ripe is delicious and is eaten as dessert fruit. The pulp is sweet and melting. Besides food values the Sapota fruits are also used in some auverda preparations. The Sapota can tolerate the presence of salts in the soil or in irrigation water to some extent.
Story first published: Monday, March 26, 2012, 17:42 [IST]
Desktop Bottom Promotion