For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோட்டத்துல பாதை அமைக்க சில ஐடியா!!!

By Maha
|

Garden path ideas
வீட்டில் ஆசையாக வளர்க்கும் தோட்டத்தில் அழகாகவும், கண்களுக்கு குளிர்ச்சியை தரும் வகையிலும், மனதிற்கு அமைதியையும் தரும் செடிகளை வைத்துவிட்டு, அவற்றை அருகில் சென்று காண, சரியான பாதை இல்லாமல், செடிகளை மிதித்துக் கொண்டே சென்றால் நன்றாக இருக்குமா என்ன? ஆகவே அத்தகைய தோட்டத்தில் அழகான செடிகளுக்கு ஏற்ற பாதைகளை அமைத்து, சென்றால் எவ்வளவு அழகாக இருக்கும். அதிலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களை கொஞ்சம் அசத்துவதற்காக, தோட்டத்தில் அழகான பாதைகளை அமைக்க ஒரு சில வழிகள் இருக்கிறது.

அழகான பாதைகளை அமைக்க...

* தோட்டத்தில் பாதைகளை அமைக்கும் போது, பாதைகளின் இடது மற்றும் வலது புறத்தில் பூச்செடிகளான லாவண்டர், ரோஸ் மற்றும் மாரிகோல்டு போன்றவற்றை வைக்கலாம். இதனால் நடைபாதையில் பூக்கள் மலர்ந்து, மிகவும் அழகாக இருக்கும். இது தோட்டத்தில் பாதைகளை அமைக்கும் போது அழகாக வைக்க ஒரு சிறந்த ஐடியா. வேண்டுமென்றால் இரண்டு மூன்று பூக்களை கலந்து வைத்தும் அழகாக்கலாம். இதில் லாவண்டர்-மல்லிகை அல்லது வெள்ளை மற்றும் சிவப்பு ரோஸ் செடிகள் என்று வைத்தால் நன்றாக இருக்கும்.

* கூழாங்கற்களை வைத்தும் பாதைகளை அமைக்கலாம். இந்த முறை மிகவும் எளியது. கூழாங்கற்கள் வாங்கும் போது நீள்வட்ட வடிவத்தில் இருக்கும் கற்களை வாங்கி போடலாம். அதிலும் சற்று வித்தியாசமாக, பாம்பு போன்ற டிசைனில் இருக்கும் கற்களை வாங்கி பயன்படுத்தலாம். இல்லையென்றால் வேண்டிய டிசைனில் கற்களை வாங்கி போட்டு பாதைகளை அழகுப்படுத்தலாம்.

* பெரிய செங்கற்களை வாங்கி ஒரு அடி இடைவெளி விட்டு, அழகாக அடுக்கி வைத்தும் அலங்கரிக்கலாம். அதிலும் ஆமை அல்லது பூ போன்ற வடிவத்தில் இருக்கும் கற்களை வாங்கி அழகுப்படுத்தலாம். அதிலும் சற்று வித்தியாசமாக யோசித்து எப்படி வைத்தால் நன்றாக இருக்கும் என்பதை பார்த்தும் கற்களை அடுக்கலாம்.

* மிகவும் ஈஸியான, விலை குறைவான முறையில் அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மொசைக் டைல்ஸ் வைத்து செய்யலாம். இந்த மொசைக் டைல்ஸில் நிறைய டிசைன்கள் இருக்கிறது. மேலும் இதில் கூழாங்கற்கள் டிசைனில் கூட மொசைக் டைல்ஸ் இருக்கிறது. இது சற்று அழகாக இருக்கும்.

* இல்லையென்றால் பழைய ஃபேஷனான, பாதையின் இரு ஓரங்களிலும் செங்கற்களை வைத்து அடுக்கியும் அலங்கரிக்கலாம். இதுவே பெரும்பாலும் அனைவராலும் பின்பற்றப்படுகிறது.

எனவே இத்தகைய வழிகளில் தோட்டத்தில் இருக்கும் பாதைகளை அழகாக அலங்கரித்து, மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம்.

English summary

great garden path ideas | தோட்டத்துல பாதை அமைக்க சில ஐடியா!!!

A garden path should always be beautiful and approachable. It is an inviting route to your garden and home. A garden path usually links the front yard to the back yard area. It also sometimes criss-crosses the garden diagonally. So let your guests stroll on the garden path and enjoy the view. There are various affordable ideas to decorate your garden.
Story first published: Thursday, August 16, 2012, 13:50 [IST]
Desktop Bottom Promotion