For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளியை அட்டகாசமாக்க உதவும் அலங்காரக் குறிப்புகள்!

விளக்குகள், தீபங்கள் மற்றும் பிற அலங்கார பொருட்களால் சிறப்பாக அலங்கரிக்கப்படுகின்றன. மக்கள் புதிய மற்றும் அழகான ஆடைகளை அணிந்து, இந்த பண்டிகையின் போது மிகவும் அழகாக காட்சி அளிக்கின்றனர்.

By Super Admin
|

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் அனைத்து இந்தியர்களுக்குமான பண்டிகை மாதங்களாக இருக்கின்றன. பண்டிகை காலம் விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி பாய்-தோஜ் இல் முடிவடைகிறது. இந்த இரு பண்டிகைக்கு இடையில், இந்தியர்கள் இரண்டு முக்கிய விழாக்களான நவராத்திரி மற்றும் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

ஒன்பது நாள் நீடித்த கொண்டாட்டத்திற்கு பிறகு, நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். நீங்கள் உங்களின் இயல்பு வாழ்க்ககைக்கு திரும்பி உங்களின் வாழ்க்கை உங்களுக்கே மீண்டும் சலிக்கத் தொடங்கும் சமயத்தில் தீபாவளி பண்டிகை வருகின்றது. அதை உங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து விளக்குகள் ஏற்றி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ காத்திருப்பீர்கள்.

Amazing Diwali Decoration Tips

இந்த தீபாவளி தருணத்தில்தான் நீங்கள் உங்களின் வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து அனைவரையும் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வீர்கள். தீபாவளி நேரத்தில் சந்திக்கும் நபர்களை மீண்டும் நீங்கள் எப்பொழுது சந்திப்பீர்கள் என்று உங்களுக்கே தெரியாது.

மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று முழுமையாக திருவிழாவை அனுபவிக்கின்றனர். அதன் காரணமாக ஒவ்வொரு வீடும் விளக்குகள், தீபங்கள் மற்றும் பிற அலங்கார பொருட்களால் சிறப்பாக அலங்கரிக்கப்படுகின்றன. மக்கள் புதிய மற்றும் அழகான ஆடைகளை அணிந்து, இந்த பண்டிகையின் போது மிகவும் அழகாக காட்சி அளிக்கின்றனர்.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடுவது, தனிநபர்கள் துட்டுக்கு சீட்டாட்ட கச்சேரி நடத்துவது போன்ற அரிய காட்சிகள் தீபாவளி அன்று மட்டுமே நம்மால் காண இயலும். தீபாவளில், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, மற்றும் முக்கியமான பண்டிகையாக விளங்குகின்றது. ஏனெனில், அன்று மட்டும் தான் அவர்களால் பட்டாசு வெடித்து மகிழ முடியும்.

இந்த ஆண்டின் தீபாவளி கொண்டாட்டம் இன்னும் 0 நாட்களுக்குள் தொடங்க உள்ளது. எனவே, நீங்கள் உங்களின் வீட்டை அலங்கரிக்கும் வேலையை தொடங்கி இருப்பீர்கள்? தீபாவளி அன்று உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மெய் மறந்து நிற்கும் அளவிற்கு உங்களின் வீட்டை அலங்கரிக்க விரும்புகிறீர்களா?

இங்கே நீங்கள் இந்த ஆண்டு தீபாவளியை மறக்க முடியால் செய்யக்கூடிய சில பிரத்தியேக அலங்காரக் குறிப்புகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். தீபாவளிக்கு ஒரு சில நாட்கள் முன்பு இதைத் தொடங்கி நீங்கள் உங்களின் வீட்டை ஒளி மிகுந்ததாக மாற்றுங்கள்.

1. வீட்டிலேயே தயாரித்த மெழுகுவர்த்திகள்:

தீபாவளி தீபங்களின் திருவிழா ஆகும். நீங்கள் உங்கள் வீட்டை மெழுகுவர்த்தி கொண்டு அலங்கரிக்க முடிவெடுத்த பின்னர் அதற்கு தேவைப்படும் மெழுகுவர்த்திகளை கடையில் வாங்காமல் வீட்டிலேயே தயாரித்துப் பாருங்கள். நீங்கள் வீட்டில் மெழுகுவர்த்தி செய்ய, உப்பு மாவு, முட்டை கூடுகள், முதலியவற்றை பயன்படுத்தலாம்.

2. நறுமண மெழுகுவர்த்திகள்:

நீங்கள் இதை எந்த ஒரு பரிசுக் கடைகளில் இருந்தும் வாங்கலாம். நீங்கள் இந்த வகை மெழுகுவர்த்தியை ஏற்றும் பொழுது உங்கள் அறையில் ஒரு நறுமணத்தை உணர்வீர்கள். தீபாவளி அன்று நீங்கள் உங்களின் வீட்டில் லட்சுமி பூஜை செய்வீர்கள் அல்லவா? அப்பொழுது இந்த வகை மெழுகுவர்த்தியை ஏற்றினால் வீட்டில் ஒரு தெய்வீக நறுமணம் கமழ்வதை நீங்கள் உணர்வீர்கள்.

3. மிதக்கும் மெழுகுவர்த்தி:

உங்களின் வீட்டின் நடுவே ஒரு பெரிய கிண்ணத்தில் மிதக்கும் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் உங்களின் வீட்டிற்கு ஒரு தெய்வீக கலை வருவதை நீங்கள் உணரலாம். மெழுகுவர்த்தி மிதக்கும் நீரில் நீக்கள் ரோஜாக்கள் மற்றும் தாமரைகள் போன்ற மலர்களின் இதழ்கள் மிதக்கும் படி செய்தால் அது அழகுக்கு மேழும் அழகு சேர்க்கும்.

4. சாக்லேட் மரம்:

தீபாவளி அன்று உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் நிச்சயமாக குழந்தைகள் இருப்பார்கள். இந்த வகை சாக்லேட் மர அலங்காரம் அவர்கள் இன்னும் உங்கள் வீட்டின் மீது அதிக பாசம் கொள்ளும் படி செய்து விடும். ஒரு உறுதியான கிளையை எடுத்து மண் நிரப்பப்பட்ட ஒரு பானையில் நட்டு வையுங்கள். இப்போது அதில் வண்ணமயமான காகிதங்களை சுற்றுங்கள். அதனுடன் அந்தக் கிளையில் வண்ணக் காகிதங்களால் சுற்றப்பட்ட சாக்லேட்களை தொங்க விடுங்கள். அந்த சாக்லேட் மரத்தை உங்கள் வாழ்க்கை அறையின் மையத்தில் வைக்கவும்.

5. கண்ணாடி விளக்குகள்:

விளக்குகள் தீபாவளி அன்று ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெறும். நீங்கள் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய விரும்புகின்றீர்களா? விளக்குகளுக்கு பதிலாக கண்ணாடி விளக்குகள் உபயோகித்துப் பாருங்கள். கண்ணாடி பாட்டில்கள் மீது வெவ்வேறு வண்ணங்களை தீட்டுங்கள். அதன் உள்ளே மெழுகுவர்த்திகள் அல்லது LED விளக்குகள் பொருத்துங்கள். உங்கள் வீட்டை சுற்றி இதை தொங்க விடுங்கள். இது உண்மையிலேயே உங்களின் வீட்டிற்கு வேறொரு தோற்றத்தை தரும்.

6. ரங்கோலிகள்:

தீபாவளி அலங்காரங்கள் ரங்கோலி இன்றி பூர்த்தி அடையாது. ரங்கோலிக்கான வண்ணங்களுடன் சேர்த்து, ரங்கோலியை அலங்கரிக்க மலர்களின் இதழ்கள், இலைகள் மற்றும் அகல் விளக்குகளை பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டின் வரவேற்பு அறை, நுழைவு வாயில், அல்லது நடு அறைல்யை ஒரு பெரிய ரங்கோலி கொண்டு அலங்கரியுங்கள்.

7. தீபாவளி தோரணம்:

தீபாவளி அன்று, நீங்கள் உங்கள் வீட்டிற்கு வரும் அன்னை லட்சுமி, மற்றும் விநாயகரை வரவேற்க வேண்டும் அல்லவா? பிரதான நுழைவு வாயில் மற்றும் பூஜை அறையை வண்ணமயமான தீபாவளி தோரணம் கொண்டு நீங்கள் அலங்கரிக்கலாம். இது உங்களின் வீட்டிற்கு ஒரு தெய்வீகமான மற்றும் சிறப்பான தோற்றம் தரும் .

8. பாட்போரி:

உங்கள் வீட்டை சுற்றி சிறிய பாட்போரிகளை வைத்திடுங்கள். பாட்போரியில் இருந்து வரும் நறுமணம் உங்களுக்கு குதூகலத்தை தந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாட வழி வகுக்கும். பாட்போரிகளை நீங்கள் சந்தையில் இருந்து வாங்கி வரலாம். அல்லது அதை நீங்கள் வீட்டிலேயே சிறப்பாக தயாரிக்கலாம். எதுவாகினும் தேர்வு உங்களுடையதே.

English summary

Amazing Diwali Decoration Tips

Amazing Diwali Decoration Tips
Story first published: Monday, October 24, 2016, 18:18 [IST]
Desktop Bottom Promotion