For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!!

By Srinivasan P M
|

பெண்கள் தங்கள் நாளின் பெரும்பாலான நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. எனவே அதை இட வசதியுடனும், சௌகரியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலோ (பிளாட்) அல்லது வாடகை வீட்டிலோ இருந்தால், அங்கே நீங்கள் விரும்பியதைப் போல சமையலறை அமையாது. ஆனால் அதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இதற்காக சில புத்திசாலித்தனமான வழிகள் உள்ளன.

துர்நாற்றம் வீசும் பாத்திரம் கழுவும் தொட்டியை புத்தம் புதிது போல் மின்ன வைக்க சில டிப்ஸ்...

நீங்கள் சற்று யோசித்தால் உங்கள் வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் நன்கு பயன்படுத்த முடியும். ஒரு சுத்தமான நன்கு சீரமைக்கப்பட்ட சமையலறை அதை வைத்திருக்கும் பெண்ணின் அல்லது நபரின் குணாதிசயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். எனவே அளவில் சிறியதாக இருந்தாலும், சமையலறையை சீராக வைப்பதில் கவனமுடன் இருங்கள். உங்கள் சமையலறை மேஜைகள் மற்றும் மேடைகளை சுத்தமாக வைத்தால், அதிக இடவசதியுடன் காணப்படும்.

அழுக்குப் படிந்த ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

பழைய சமையலறை சீர்முறைகள் பெரும்பாலும் அதிகம் இடமுள்ள சமையலறைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் அவற்றை பின்பற்ற வேண்டாம். தைரியமாக புதிய முறைகளை முயன்று பாருங்கள். சிறிய சமையலறையில் எவ்வாறு இதை செய்வது என்ற கவலை உங்களுக்கு இருந்தால் கவலையை விடுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவத் தயார். இந்த சிறிய உத்திகளால் இடமில்லாப் பிரச்சனையுடன் நீங்கள் போராட வேண்டியதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமையலறை சுவர்களை உபயோகியுங்கள்

சமையலறை சுவர்களை உபயோகியுங்கள்

எல்லா பொருட்களையும் உங்கள் சமையலறை மேடையிலோ அல்லது திறப்புகளிலோ அடைக்க நினைக்காதீர்கள். துடைக்கும் துணிகள், ஸ்பூன்கள், வெட்டும் பலகை, மாட்டும் வசதியுள்ள கடாய் (பாண்), கத்திகள் மற்றும் லைட்டர்கள் போன்றவற்றை சுவற்றில் மாட்டும் வகையில் சுவரை அதிகமாகப் பயன்படுத்த முயலுங்கள்.

சமையலறைப் பொருட்களை சீராக வையுங்கள்

சமையலறைப் பொருட்களை சீராக வையுங்கள்

உங்கள் சமையலறையில் தினமும் பயன்படக்கூடிய பலவிதமான பொருட்கள் இருக்கலாம். எனவே சிறிய சமையலறையில் அவற்றின் உபயோகத்தின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தி வைப்பது நல்லது.

சிங்கிற்குக் (Sink) கீழே உள்ள இடத்தைப் பயன்படுத்துங்கள்

சிங்கிற்குக் (Sink) கீழே உள்ள இடத்தைப் பயன்படுத்துங்கள்

பொதுவாக சிங்கிற்குக் கீழே உள்ள இடத்தை நாம் கவனிப்பதில்லை. நன்கு யோசித்தால் அதன் கீழ் ஒரு சிறிய கேபினெட்டை செய்து பொருத்தலாம். சுத்தம் செய்ய உதவும் பிரஷ், லோஷன்கள் உள்ளிட்ட பல்வேறு சுத்தப்படுத்தும் பொருட்களை அவற்றில் அடுக்கி வைக்கலாம்.

தலை உயர கேபினட்கள்

தலை உயர கேபினட்கள்

சிறிய சமையலறையில் கீழே பொருட்களை வைப்பது இயலாத காரியம். இதனை சமாளிக்க எளிய வழி சமையலறை சுவற்றில் உயரத்தில் பொருத்தக்கூடிய கேபினட்கள். இதில் பெருட்களை சவுகரியமாக வைத்துக் கொள்ளவும் இடப் பிரச்சனையை சமாளிக்கவும் முடியும்.

கூடைகள் மற்றும் கொக்கிகள்

கூடைகள் மற்றும் கொக்கிகள்

சமையலறை அலமாரி அல்லது கேபினட்களில் கொக்கிகள் அல்லது கூடைகளை மாட்டுவதன் மூலம் சிறிய சமையலறை பொருட்களை அவற்றில் போட்டு வைக்கலாம். இதன் மூலம் கேபினட்களில் எஞ்சியிருக்கும் இடங்களை நன்கு பயன்படுத்த முடியும். கேபினட் அல்லது அலமாரி கதவுகளிலும் இவற்றைப் பொருத்தலாம்.

லேசி சுசன் கேபினட்

லேசி சுசன் கேபினட்

இது ஒரு சுவாரசியமான விஷயம். உங்கள் கேபினட்களின் மூலைகளில் இவற்றைப் பொருத்துவதன் மூலம் சமையலறைகளில் பெரிய பொருட்களை வசதியாக வைக்க முடியும். இடமிருந்தால் இதனை இரு பிரிவுகளாகப் பிரித்து பொருட்களை அடுக்க வசதியாக வைக்க முடியும்.

மடிக்கக்கூடிய மேஜைகள்

மடிக்கக்கூடிய மேஜைகள்

சிறிய சமையலறை என்பதால் அதில் டைனிங் அல்லது சிற்றுண்டி மேஜையை வைக்க முடியாது என எண்ண வேண்டாம். மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மேஜையையும் நாற்காலியையும் வங்கி வைத்து தேவையான போது உபயோகித்தும், இல்லாதபோது மடித்தும் வைத்து விடலாம். இது குடும்பத்தோடு சமையலறையில் நேரம் செலவிடவும் உகந்த வழி.

என்ன இதையெல்லாம் முயற்சி செய்து சமையலறையை ஒரு மகிழ்ச்சியான இடமாகக நீங்க ரெடியா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Manage Things In A Small Kitchen

Check out the how to manage things in a small kitchen in this article today. Read on to know more about how to manage things in a small kitchen.
Desktop Bottom Promotion