For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரமிக்க வைக்கும் மைகேல் ஜாக்சனின் "ஃபேண்டசி ஐ-லேன்ட்" வீட்டைப் பற்றிய தகவல்கள்!!!

By John
|

பாப் இசையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைகேல் ஜாக்சனின் நெவெர்லேன்ட் வீட்டை, வீடு என்பதை விட ஓர் தனி உலகம் என்று தான் கூற வேண்டும். உலகில் எல்லாரும் சலிப்பு ஏற்பட்டால் தான் கேளிக்கை மற்றும் பொழுபோக்கு இடங்களுக்கு செல்வார்கள்.

"பாப் மன்னன்" மைகேல் ஜாக்சனின் வினோதமான குணாதிசயங்கள்!!!

ஆனால், மைகேல் ஜாக்சனின் "நெவெர்லேன்ட் ராஞ்ச" வீடே ஓர் கேளிக்கை இடம் தான். அனைத்து பொழுபோக்கு அம்சங்களும் கொண்ட ஓர் இடம் தான் "நெவெர்லேன்ட் ராஞ்ச".

அரண்மனை போல் கட்டமைக்கப்பட்ட ஷாருக்கானின் "மன்னத்" இல்லம்!!

இங்கு பூங்கா, ஃபெர்ரிஸ் வில், பைரேட் ஷிப், ஸ்விங் ரைட், ரோலர் கோஸ்டர், பம்பர் கார்ஸ் என அனைத்து கேளிக்கை விளையாட்டுகளும் அமைந்திருந்தது அந்த வீட்டில். இனி, மைகேல் ஜாக்சனின் "நெவெர்லேன்ட் ராஞ்ச" வீட்டைப் பற்றியும் அதன் பிரமிக்க வைக்கும் தகவல்கள் குறித்தும் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபேண்டசி ஐ-லேன்ட்

ஃபேண்டசி ஐ-லேன்ட்

"பீட்டர் பேன்" என்ற பொம்மை படத்தில் வரும் "நெவெர்லேன்ட் ராஞ்ச" என்னும் ஐ-லாண்டின் பெயரையே தனது கனவு இல்லத்திற்கு பெயராக சூட்டினார் மைகேல் ஜாக்சன். இவர் பொம்மை படங்களுக்கு அடிமை என்பது குறிப்பிடத்தக்கது.

நிலப்பரப்பு

நிலப்பரப்பு

அந்நாட்டு மாநாகராட்சி "நெவெர்லேன்ட் ராஞ்ச" வீட்டின் பரப்பளவு மொத்தம் 3,000 ஏக்கர் என்று கூறகிறது. இதை ஹெக்டர் அளவில் கூறவேண்டும் எனில், 1214 ஹெக்டர்கள் ஆகும். நம்ம ஊரில் கேளிக்கை பூங்காக்கள் கூட இவ்வளவு பெரிதாக இருக்காது.

அதிக விலைக் கொடுத்து வாங்கினார் மைகேல்

அதிக விலைக் கொடுத்து வாங்கினார் மைகேல்

இந்த வீட்டை வில்லியம் போனே என்னும் ஓர் தொழிலதிபரிடம் இருந்து மைகேல் ஜாக்சன் ஏறத்தாழ 16.5 - 30 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியிருக்கிறார். 1980களில் இது மிகப் பெரிய விலை ஆகும்.

மைகேல் ஜாக்சன் இங்கு வாழ்ந்த காலம்

மைகேல் ஜாக்சன் இங்கு வாழ்ந்த காலம்

தான் ஆசை ஆசையாக வாங்கிய இந்த நெவெர்லேன்ட் ராஞ்ச இல்லத்தில், கடந்த 1988-2005ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தார் மைகேல் ஜாக்சன்.

பூ கடிகாரம்

பூ கடிகாரம்

இந்த வீட்டின் முகப்பில் ஓர் பெரிய பூ கடிகாரம் இருக்கும். வானில் பறப்பவர்கள் கூட மணி பார்க்கும் அளவு பெரிய பூ கடிகாரம் அது.

இரண்டு இரயில் பாதைகள்

இரண்டு இரயில் பாதைகள்

வீட்டிற்கு இரயிலில் போகலாம். ஆனால், மைகேல் ஜாக்சனின் வீட்டிற்குள்ளேயே இரண்டு இரயில் பாதைகள் இருக்கின்றது. அந்த ரயில் பாதைகளுக்கு நெவெர்லேன்ட் வேலி ரயில் ரோடு மற்றும் காத்ரைன் என்றும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

 பொழுதுபோக்கு அம்சங்கள்

பொழுதுபோக்கு அம்சங்கள்

ஃபெர்ரிஸ் வில், பைரேட் ஷிப், ஸ்விங் ரைட், ரோலர் கோஸ்டர், பம்பர் கார்ஸ் என அனைத்து கேளிக்கை விளையாட்டுகளும் அமைந்திருக்கிறது, இந்த "நெவெர்லேன்ட் ராஞ்ச" வீட்டில்.

மிருகக்காட்சி சாலை

மிருகக்காட்சி சாலை

மைகேல் ஜாக்சனின் "நெவெர்லேன்ட்" இல்லத்தில் ஓர் மிருகக்காட்சி சாலையும் அமைந்திருக்கிறது. இதில் மிருங்கங்கள் வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றன.

 குழந்தைகள் சிலைகள்

குழந்தைகள் சிலைகள்

இந்த வீட்டை சுற்றிலும் நிறைய குழந்தைகள் சிலைகளை நிறுவியிருந்தாராம் ஜாக்சன்.

கடன் விவகாரத்தில் மூடப்பட்டது

கடன் விவகாரத்தில் மூடப்பட்டது

கடன் விவகாரத்தில் இந்த வீடு சிறுது காலம் பூட்டிவைக்கப்பட்டிருந்தது. இதற்காக மைகேல் கடந்த 2008 ஆம் ஆண்டு $2,45,25,906 டாலர் கட்டியுள்ளார்.

ஜாக்சனின் உடல் அடக்கம்

ஜாக்சனின் உடல் அடக்கம்

இதே வீட்டில் தான் மைகேல் ஜாக்சினின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரது ரசிகர்கள் வந்து பார்ப்பதற்காகவே ஓர் தனி வழி அமைக்கப்பட்டிருக்கிறது.

சீரமைப்பு

சீரமைப்பு

மைகேல் இறந்த பிறகு இந்த வீடு சிறிது காலம் சீரமைக்கப்பட்டு வந்தது. பிறகு 2013 ஆண்டு இந்த வீட்டை மைக்கேலின் மகள் மீண்டும் திறந்தார். மைகேலுக்கு பிடித்தமான "பீட்டர் பேன்" பொம்மை கதாபாத்திரத்தின் உருவ சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts Michael Jacksons Amusement Home Neverland Ranch

Do You Know Facts About Michael Jacksons Amusement Home Neverland Ranch? Read Here.
Desktop Bottom Promotion