For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்ல ஆரோக்கியத்திற்கான 11 வாஸ்து டிப்ஸ்...

By Ashok CR
|

'உடல் ஆரோக்கியமே செல்வம்' என்பது நீங்கள் கேட்டிருக்கக்கூடிய மிகவும் பொதுவான கூற்றாகும். நீங்கள் ஜங்க் உணவுகளை உட்கொண்டால் அல்லது இரவில் நீண்ட நேரம் விழித்திருந்தால், இந்த கூற்று உங்களுக்கு பொய்யாகி போய்விடும். இருப்பினும், இது உண்மையே; நல்ல ஆரோக்கியம் இல்லாமல் அனைத்துமே மிகுதியானவையாகும்.

வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்...

நாம் வாழும் சுற்றுச்சூழல் அல்லது நம் வீடு/பணியிடத்தில் காணப்படும் சுற்றுப்புறம் ஆகியவற்றை பொறுத்தும் நம் உடல்நல ஆரோக்கியம் அமையும். டென்ஷன், பகைமை அல்லது காண முடியாத பிரச்சனை போன்றவைகள் இருந்தால், இவைகளை போக்க வாஸ்து சாஸ்திரங்கள் உதவிடும்.

இங்கு நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான எளிமையான மற்றும் சிறப்பான வாஸ்து டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாஸ்து டிப்ஸ்: 1

வாஸ்து டிப்ஸ்: 1

படுக்கையில் தூங்கும் போது, உங்கள் தலை தெற்கை நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வடா அல்லது கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பி தூங்கவே பரிந்துரைக்கப்படுகிறது. அதேப்போல் பிடா தோஷம் உடையவர்கள் தங்களின் வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.

வாஸ்து டிப்ஸ்: 2

வாஸ்து டிப்ஸ்: 2

வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். படிக்கட்டு வைக்க வேண்டிய அவசியம் இருந்தால் அவற்றை ஓரமாக வைத்திட வேண்டும்.

வாஸ்து டிப்ஸ்: 3

வாஸ்து டிப்ஸ்: 3

வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது. அதற்கு காரணம், வீட்டின் மைய பகுதி தான் பிரம்மஸ்தானம்.

வாஸ்து டிப்ஸ்: 4

வாஸ்து டிப்ஸ்: 4

பிரம்மஸ்தானத்தில் ரெய்கி படிகங்களை வைக்கலாம். அது வீட்டிற்கு நேர்மறையான ஆற்றலை அளிக்கும்.

வாஸ்து டிப்ஸ்: 5

வாஸ்து டிப்ஸ்: 5

தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.

வாஸ்து டிப்ஸ்: 6

வாஸ்து டிப்ஸ்: 6

நல்ல ஆரோக்கியத்திற்கு வீட்டிலுள்ள அக்னி தனிமங்கள் சமநிலையுடன் இருப்பது முக்கியமாகும். உங்கள் வீடு தெற்கு திசையை நோக்கியிருந்தால் அல்லது இத்திசையில் சரிவு இருந்தால், அல்லது வட கிழக்கு திசையை நோக்கி ஜெனரேட்டர் இருந்தால் அல்லது தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியிலான தண்ணீர் தொட்டி இருந்தால், உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வாஸ்து டிப்ஸ்: 7

வாஸ்து டிப்ஸ்: 7

இப்பிரச்சனைக்கு தீர்வு காண, தெற்கு சுவற்றில் ஒரு கதவை வைத்திட வேண்டும். அது எப்போதும் மூடியிருக்க வேண்டும். கூடுதலாக, அது மரக்கதவாக இருக்க வேண்டும். அதேப்போல் வெளிப்புற சாலை தெரியாமல் அது உயர்ந்த கதவாக இருக்க வேண்டும்.

வாஸ்து டிப்ஸ்: 8

வாஸ்து டிப்ஸ்: 8

அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிடுங்கள்.

வாஸ்து டிப்ஸ்: 9

வாஸ்து டிப்ஸ்: 9

வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்த்திடவும். இது நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வாஸ்து டிப்ஸ்: 10

வாஸ்து டிப்ஸ்: 10

உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய விடுங்கள்.

வாஸ்து டிப்ஸ்: 11

வாஸ்து டிப்ஸ்: 11

தென் திசையை நோக்கியுள்ள வீட்டில் நல்ல ஆரோக்கியம் பெருகிட ஆஞ்சநேயர் படத்தை வைத்திடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eleven Vastu Tips for Good Health

Here are some simple yet effective Vastu tips for good health.
Desktop Bottom Promotion