For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் வீட்டை அலங்கரிக்க அவசியமானவைகள்!

By Boopathi Lakshmanan
|

ஜில்லென்று பருவக்காற்று நரம்புகளினூடாக செல்லும் குளிர்காலம் வந்து விட்டது. வருடத்தின் இந்த பருவத்தில் உங்கள் வீடு அல்லது அலுவலகம் எதுவாக இருந்தாலும் அலங்காரம் செய்து மகிழுங்கள். சிறிதளவு அலங்காரம் போதும் உங்கள் உறைவிடத்தை பளபளக்கச் செய்வதற்கு. இந்த குளிர்காலத்தில் அலங்காரம் செய்ய உங்களுக்கு எண்ணற்ற ஐடியாக்கள் காத்திருக்கின்றன. குளிர்காலம் டல்லாக இருக்கும் பருவம், எனவே வெளியே செல்லவும் உங்களுக்கு விரும்பமாட்டீர்கள். எனினும், இந்த சோர்வை போக்க உங்கள் இடத்தை நீங்கள் அலங்கரித்து மகிழுங்கள்.

விடுமுறை நாட்களை நீங்கள் வீடுகளில் இருந்து ஓய்வாக கழிக்கவும் மற்றும் வசதியான அலங்கார யோசனைகளை பயன்படுத்தவும் நினைப்பீர்கள். குளிர்காலத்தில் செய்யும் அலங்காரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பருவங்களில் வெளிவரும் லேட்டஸ்ட் அலங்காரங்கள் பலவற்றையும் பார்த்து தெரிந்து கொண்டு, அவற்றில் உங்களுடைய வீடு அல்லது அலுவலகத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட சிறந்த குளிர்கால அலங்கார யோசனைகளுக்காக மண்டைய பிய்த்துக் கொண்டிருந்தால், கவலையை விடுங்க, நாங்க வந்துட்டோம்!

Winter Decor Items: Essentials

அழகிய ஓவியங்கள்

கலைநயமிக்க குளிர்கால அலங்காரம் வேண்டும் என நீங்கள் நினைத்தால், நீங்கள் ஓவியங்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் வீட்டில் அருமையான, அழகான ஓவியங்களை மாட்டுங்கள். இது உங்கள் வீட்டிற்கு உண்மையாகவே மெருகூட்டும். குளிர்காலத்தில் அலங்காரம் செய்ய நீங்கள் பயன்படுத்த வேண்டிய சிறந்த யோசனைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஐஸ் தோரணங்களின் மேஜிக்

அலங்காரங்கள் வீட்டின் உட்பகுதியுடன் முடிந்து விடுவதில்லை. வீட்டின் வெளிப்பகுதிக்கும் அலங்காரங்கள் உள்ளன. ஆனால், வீட்டின் வெளிப்பகுதி என்று வரும் போது நீங்கள் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய வெளிப்புறத்தை உண்மையான அழகு மற்றும் ஈர்ப்புடன் அலங்காரம் செய்யலாம். இது தான் உங்களுடைய எண்ணம் என்றால், சில ஐஸ் வலையங்களை தோரணங்களாக வீட்டின் வெளியை வையுங்கள். இது உங்கள் வீட்டின் அழகை உண்மையாகவே கூட்டி விடும்.

தலைவாயில்

குளிர்கால அலங்காரத்தை நீங்கள் உண்மையிலேயே தீவிரமாக எடுத்துக் கொண்டு செய்ய விரும்பினால் கொஞ்சம் முயற்சியும் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள ஒரு அறையை அலங்காரம் செய்வது போல வீட்டின் தலைவாயிலை அலங்காரம் செய்யுங்கள். இது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சிறந்த யோசனை தான். இது உங்கள் வீட்டை அழகு படுத்தும்.

பூந்தொட்டிகளை மாற்றுங்கள்

உங்கள் வீட்டிலுள்ள செடிகள் வைக்கப்பட்டுள்ளன பூந்தொட்டிகளை மாற்றுங்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் வீட்டு தோட்டத்தின் உள் மற்றும் வெளிப் பகுதிகள் அழகு பெறும். மேலும், சில செடிகளை உட்பகுதிக்கு நகர்த்தி வைப்பதால், கொடுமையான பருவ நிலையிலிருந்து அவற்றைப் பாதுகாக்க முடியும்.

முன்வாயிலை அழகுப்படுத்துங்கள்

வருடத்தின் குளுமையான பருவமான குளிர்காலத்திற்கு நீங்கள் சற்றே தயாராக இருக்க வேண்டும். இதுதான் உங்கள் எண்ணம் என்றால், உங்கள் வீட்டு முகப்பு வாயிலில் இருந்து அழகுபடுத்தத் தொடங்குங்கள். ஒரு ஜோடி ஐஸ் ஸ்கேட்ஸ்களை எடுத்து உங்கள் வீட்டு முகப்பு வாயிலில் தொங்க விட்டு, தயாராக காத்திருங்கள்.

வண்ணங்ளை வார்த்தெடுங்கள்

கோடை காலத்தைப் போலவே குளிர் காலத்தையும் அழகுற வைக்க விரும்பினால், சில அடிப்படை மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டும். உதாரணமாக, உங்கள் தோட்டத்தை அழகுபடுத்தவும், வண்ணமயமாக வைத்திருக்கவும் கவனமாக வண்ணங்களை தேர்ந்தெடுங்கள். குளிர்காலத்தைப் போலவே குளிர்கால தோட்டங்களும் தனித்தன்மை வாய்ந்தவை. இவற்றில் சிறிதளவு அதிக அக்கறை காட்டினால் போதும், பலன் கிடைத்து விடும்.

இறுதியாக

நீங்கள் குளிர்காலத்தில் அலங்காரம் செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பும் போது, கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் உங்களுடைய பட்ஜெட். உங்களுடைய நிதி நிலையை நன்றாக கவனித்து, உங்கள் வசதிக்கேற்ப எளிமையாக அலங்காரம் செய்யுங்கள். அலங்காரம் செய்வதற்காக உங்களுடைய பாக்கெட்டை ஓட்டை போடத் தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நீங்கள் அலங்காரம் செய்ய முடியும். அழகான, அற்புதமான குளிர்கால அலங்காரங்களை செய்வதற்கு எளிமையான மாற்றங்கள் மற்றும் முதலீடுகளே போதும். விடுமுறைக்கான பருவமாக இருக்கும் குளிர்காலத்தில் உங்கள் வீட்டை அற்புதமாக அழகுபடுத்தி மகிழுங்கள்.

English summary

Winter Decor Items: Essentials

The best way to plan a winter décor is to check out some seasonal updates from which you can grab some of the best décor ideas that best suit your home or office. If you are breaking your head on the best décor ideas then here are some for you to choose.
Desktop Bottom Promotion