For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளை நிற சுவர்களை அலங்கரிப்பதற்கான சில வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

வெள்ளை நிறம் அனைத்து நிறங்களை காட்டிலும் மிக சிறந்த நிறமாக அமைகின்றது. இந்த நறத்தை வீட்டில் எந்த பகுதியிலும் நாம் பயன்படுத்தலாம். வெள்ளை சுவர்கள், வெள்ளை நாற்காலிகள் மற்றும் வெள்ளை நிற தரை ஆகியவை உயர் தரத்தை குறிப்பதாக விளங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் நாம் வெள்ளை நிற சுவர்களை பல வழிகளில் அலங்கரித்து அழகுபடுத்த முடியும். எந்த ஒரு அலங்கார பொருளையும் மேலும் அழகூட்டும் வகையில் வெள்ளை நிற சுவர்கள் அமைகின்றன.

வெள்ளை நிற சுவர்களில் பல்வகை அலங்காரங்களை வீட்லும் வீட்டின் உட்புறத்திலும் செய்ய முடியும். இந்த காலத்தில் வீட்டை அழகுபடுத்தவும் உட்புற அலங்காரங்களையும் செய்யவும் பலரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆகையால் புதுப்புது யோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதுப்போன்று வேறு சில: பொங்கலுக்கு செய்யக்கூடிய அலங்காரங்கள்!!!

வெள்ளை நிற சுவர்களே எப்போதும் சிறந்த மற்றும் பாதுகாப்பான சுவர் வண்ணமாகவும் உள்ளன. இதில் ஒரு வகை அலங்காரம் சரி வரவில்லை என்றால் வேறு அலங்காரத்தை முயற்சி செய்ய முடியும்.

குறிப்பிட்ட மையக்கருத்துகளைக் கொண்டும், வண்ண ஓவியங்கள் மற்றும் படங்களை கொண்டும் வெள்ளை நிற சுவர்களை அலங்கரிக்க முடியும். இதை செய்யும் போதை வீட்டின் பரப்பளவையும் கணக்கில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். வெள்ளை நிற சுவர்களை அலங்கரிக்கும் வழிகள் குறித்து நாம் கீழ் வரும் பகுதியில் பார்ப்போம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணாடிகள்

கண்ணாடிகள்

கண்ணாடிகளை கொண்டு பெருமளவில் அலங்காரங்களை செய்ய முடியும். அவை மிகவும் அழகாக இருக்கும். இவை எளிமையாகவும் அழகு சாதனமாகவும் இருக்கும். படுக்கை அறை, ஓய்வெடுக்கும் அறை மற்றும் விருந்தாளிகள் தங்கும் அறை ஆகிய அறை சுவர்களில் நிறைய கண்ணாடிகளை நாம் பயன்படுத்தி அலங்கரிக்க முடியும். வேறு வேறு வடிவங்கள் மற்றும் அளவு கொண்ட கண்ணாடிகளை ஒன்று சேர்த்து பல வடிவங்களை அமைத்து தொங்க விடலாம். அது மட்டுமல்லாமல் கண்ணாடி ஓவியங்களை வாங்கியோ அல்லது நீங்களாக வரைந்தோ கூட வெண்சுவர்களில் தொங்க விடலாம். இவை எளிதாக அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

 படங்கள்

படங்கள்

ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை சுவர்களில் தொங்க விட முடியும். உங்கள் குடும்பப் படங்கள், வெளியூர் சென்று எடுத்த நினைவு படங்கள், உங்கள் நண்பர்களின் படங்கள், சிறு வயதில் எடுத்த படங்கள் ஆகியவற்றை தொங்க விடுங்கள். ஒரு தீமை மையமாக கொண்டு இதை செய்யலாம். பல வடிவ ஃபிரேம்களை வாங்கி அதில் உங்கள் புகைப்படங்களை வைத்து உங்கள் அறையை அழகாக்க முடியும். உங்கள் தீமிற்கேற்ப இவைகளை செய்தால் நலமாக இருக்கும். உங்கள் வீட்டில் மரத்தாலான நாற்காலிகள் இருந்தால் மரத்தாலான ஃபிரேம் பொருத்தலாம் அல்லது உங்கள் குழந்தைகள் அறையில் பளிச்சென்று இருக்கும் வண்ணங்களை கொண்டு ஃபிரேம்களை அமைத்து மாட்டலாம். மிகவும் அருமையாக இருக்கும் இந்த வேலைப்பாடுகள் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

பாரம்பரிய பொருட்கள்

பாரம்பரிய பொருட்கள்

இந்திய கலாச்சாரத்தை கொண்டு வருவது சிறந்த கலையாக உள்ளது. நமது நாட்டின் கலைகள், கைவினைப் பொருட்களுக்கு நிகராக வேறெதுவும் இருக்க முடியாது. உங்கள் வெள்ளை நிற சுவர்களை ஓவியங்கள் மற்றும் மரத்தாலான தொங்கல் ஆகியவற்றை பொருத்தி நமது பாரம்பரியத்தை குழந்தைகளுக்கும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் காண்பிக்க முடியும். இந்திய கலாச்சார அலங்காரங்கள் எளிதில் எங்கும் கிடைக்கும் மற்றும் இத்தகைய அலங்காரம் எளிமையாகவும் அமைகின்றது. சுவர் மாட்டி, மணி அலங்காரம், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், கண்ணாடி அலங்காரம் மற்றும் பல அலங்காரப் பொருட்களை வாங்கி வீட்டை அழகுப்படுத்தலாம். இதை எல்லாம் செய்யும் போது நமது வீட்டின் அமைப்பிற்கேற்ப மற்றும் நமது மையக்கருத்திற்கு ஏற்ப இருக்குமாறு செய்ய வேண்டும்.

ஓவியம்

ஓவியம்

அழகான மற்றும் பிரம்மிப்பூட்டும் ஓவியங்களை நமது சுவர்களில் மாட்டும் போது அவை மிகுந்த இன்ப அதிர்ச்சியை கொடுக்கின்றன. ஓவியங்கள் பல கலைக்கூடங்களில் கிடைக்கின்றன. அங்கு சென்று அலங்கரிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகள் வரைந்த எளிய ஓவியத்தையும் ஃபிரேம் செய்து மாட்டலாம். மேலும், சிறந்த ஓவியர்களின் ஓவியங்களையும் வாங்கி வெள்ளை சுவர்களை வண்ண மயமாக்க முடியும்.

விளக்குகள்

விளக்குகள்

விளக்குகள் வைத்தும் வெள்ளைச் சுவர்களை அழகுபடுத்த முடியும். சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய வண்ணங்களில் விளக்குகளை பொருத்தி மாலை மற்றும் இரவில் ஏற்றி வைத்தால் மிகவும் அழகாக இருக்கும். அதிலும் சர விளக்குகளை தேர்ந்தெடுத்த இடங்களில் வடிவமைத்து பொருத்துவதன் மூலமாகவும் வீட்டை அலங்கரிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Decorate White Walls

Ways to decorate white walls are plenty. We give you the best ways to decorate you white walls. Follow these tips to decorate white walls.
Story first published: Saturday, January 11, 2014, 12:48 [IST]
Desktop Bottom Promotion