For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புது வீடு வாங்கப் போறீங்களா? இதைக் கொஞ்சம் படிச்சுட்டுப் போங்க...

By Karthikeyan Manickam
|

நீங்கள் கூடிய சீக்கிரம் ஒரு புதிய வீட்டை வாங்க உள்ளீர்களா? வீடு வாங்கும் ஆர்வத்திலும், உற்சாகத்திலும், பரபரப்பிலும் வீட்டிற்குத் தேவையான மற்றும் அடிப்படையான சில விஷயங்களை நீங்கள் மறந்துபோக நேரிடலாம்.

அது ஒரு சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால் லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டி வீட்டை வாங்கிய பின், அந்தச் சின்ன விஷயமே பூதாகரமாக எழுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில முக்கிய விஷயங்களை மனத்தில் வைத்துக் கொண்டு வீடு வாங்கச் செல்லுங்கள். அவை எல்லாம் சரியாக இருந்தால், வீட்டை வாங்கிய மகிழ்ச்சியுடன் திருப்தியாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொறுப்புணர்ச்சி

பொறுப்புணர்ச்சி

வீடு வாங்குவது ஒரு சாதாரண விஷயமல்ல; அது ஒரு ஜோக்கும் கிடையாது. லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டியிருப்பதால், உங்களுக்கு நிறையப் பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். வீடு வாங்குவதில் உள்ள 'அ' முதல் 'ஃ' வரை அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் எந்த சந்தேகம் இருந்தாலும் சரி, வீட்டை விற்பவரிடம் அது குறித்துக் கேட்டு, நோண்டி நொங்கை எடுத்து விட வேண்டும். தயக்கம் என்பதே இருக்கக் கூடாது.

ஏரியா

ஏரியா

அடுத்த முக்கிய விஷயம், நீங்கள் வாங்கப் போகும் வீடு இருக்கும் இடம். உங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் ஈடு கொடுக்கும் விதமாக அந்தப் புது வீடு அமைந்திருக்க வேண்டும். உங்கள் ஆபீஸ் ஓரளவு பக்கத்தில் இருக்க வேண்டும்; உங்கள் குழந்தைகளின் பள்ளி/கல்லூரி இன்னும் வெகு அருகில் இருக்க வேண்டும். அப்புறம், உங்கள் வீட்டுக்குத் தேவையான அன்றாட பொருட்களை (பலசரக்கு, காய்கறிகள், பால், etc.) வாங்க வேண்டிய கடைகளும் பக்கத்திலேயே இருக்க வேண்டும். மேலும், அந்த வீடும் அதன் சுற்றுப்புறமும் அமைதியாகவும், தூய்மையாகவும் இருப்பது அவசியம்.

வீட்டின் உட்புறம்

வீட்டின் உட்புறம்

நீங்கள் வாங்கப் போகும் வீட்டின் உட்புற அமைப்புகளையும் சோதித்துக் கொள்வது அவசியமாகும். மேலோட்டமாக வீட்டைப் பார்த்து விட்டு, அதை வாங்க முடிவெடுத்து விடாதீர்கள். அந்த வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையும் நீங்கள் மனத்தில் நினைத்தது போலவே இருக்கிறதா என்பதை நன்றாக உற்றுக் கவனியுங்கள். அப்புறம் உங்கள் முடிவைத் தெளிவாக எடுங்கள்.

டாக்குமெண்ட்ஸ்

டாக்குமெண்ட்ஸ்

வீடு முழுவதுமாகப் பிடித்துப் போய், அதை வாங்க வேண்டுமென்று முடிவு செய்த பின் கடைசியாக ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் சட்ட ரீதியிலான பத்திரங்களைப் பதிவு செய்வது. அந்த வீடு உங்களுடையதுதான் என்பதை உறுதிப் படுத்தும் அனைத்து விதமான ஆவணங்களும் (பட்டா, பத்திரம், etc.) பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின் உங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Remember While Buying A New Home

In this article, we take a look at the important things that need to be kept in mind while buying a new house.
Story first published: Saturday, September 27, 2014, 15:33 [IST]
Desktop Bottom Promotion