For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வசந்த காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

வறண்ட மற்றும் கடுமையான குளிர்காலம் முடியப் போகிறது. இது வசந்த காலத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் காலம். வெப்பாமான பருவநிலை விரைவில் வந்தடையப் போகிறது. உங்களுடைய அலமாரிகள் வசந்தகாலத்திற்கான உடைகளை கொண்டு நிரம்பி வழியப் போகிறது.

அலமாரி மட்டுமல்லாமல், உங்கள் வீட்டு தோட்டம், வீடு மற்றும் பிற அலங்காரங்களையும் கூட நீங்கள் மாற்ற வேண்டியிருக்கும். குளிர்காலத்தில் வீட்டை பராமரிப்பது பற்றிய குறிப்புகளை நாம் விவாதித்தது போலவே, வசந்த காலத்திற்கும் ஏற்ற குறிப்புகளை இங்கே விவாதிக்கப் போகிறோம்.

இதுப்போன்று வேறு: சிறிய வீட்டையும் பெரியதாக காட்சியளிக்க சில டிப்ஸ்...

வசந்த காலத்திற்காக சுத்தம் செய்வது என்பது தலைவலியைத் தரும் வேலை தான். ஆனால் கீழ்வரும் குறிப்புகள் இந்த தலைவலியை குறைக்கும் என்று நம்புவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவை ஒரு பட்டியல்

தேவை ஒரு பட்டியல்

வசந்த காலத்திற்காக சுத்தம் செய்வதற்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்ய என்னென்ன தேவை என்று பட்டியலிடுங்கள். இந்த பட்டியலில், வீட்டில் மாற்றி வைக்க வேண்டிய பொருட்களையும் குறிப்பிடுங்கள். இவ்வாறு பட்டியலிட்டு வேலை செய்வதால் நமது தலைவலி குறையும். ஒரு முறை உட்கார்ந்தபடி வீட்டை கவனமாக சுற்றிப் பாருங்கள், தேவையான பொருட்களை பட்டியலில் சேருங்கள், வாங்க வேண்டிய பொருட்களையும் மனதில் கொள்ளுங்கள். இதுதான் வசந்த காலத்திற்கு வீட்டை தயார் செய்யத் துவங்கும் போது செய்ய வேண்டிய முதல் படியாகும்.

சுத்தம் செய்வதற்கான நேரம்

சுத்தம் செய்வதற்கான நேரம்

வசந்த காலத்தில் எங்கெங்கிலும் ஒளி பரவியிருக்கும். இந்த ஒளியை மேலும் மெருகூட்ட விரும்பினால் குஷன் கவர்கள், பெட் சீட்கள் மற்றும் அலங்கார பொருட்களையும் இந்த பருவத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி வையுங்கள். உங்கள் வீட்டிலுள்ள குளிர்கால கலெக்ஷன்களை எடுத்து விட்டு, ஒளிமயமான மற்றும் குளிர்ச்சியான வண்ணங்களை மாற்றி வையுங்கள். நீங்கள் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களை பயன்படுத்தினால் வெப்பமான பருவத்திலும் குளிர்ச்சியை உணர முடியும். அதே போல, வண்ணங்களையும், வீட்டின் அமைப்பிலும் சில மாற்றங்களை செய்து அலங்காரம் செய்வதும் அவசியமான விஷயமாக இருக்கும்.

அலமாரிகளை சுத்தம் செய்யுங்கள்

அலமாரிகளை சுத்தம் செய்யுங்கள்

ஒவ்வொரு சீசனின் போதும் உங்களுடைய அலாமாரிகளில் மாற்றம் செய்ய வேண்டும். துணிகைள மாற்றும் போது, அலமாரிகள் மற்றும் அதன் உள்பகுதிகளை சுத்தம் செய்யத் தவறாதீர்கள். சோப்பு கொண்டு சுத்தம் செய்வதும், குப்பைகளை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதும் அலாமாரிகளில் உள்ள குப்பைகளை முழுமையாக நீக்கும் வழிமுறைகளாகும். இதன் மூலம் உங்களுடைய அலமாரிகள் மட்டுமல்லாமல் வீடும் கூட வசந்த காலத்தை வரவேற்கத் தயாராகி விடும். அனைத்தையும் சுத்தமாக துடைத்து வைத்து பளிச் என்று இருக்குமாறு வைத்திருங்கள்.

தோட்டம்

தோட்டம்

குளிர்காலத்தின் காரணமாக வறண்ட இலைகள் உங்கள் தோட்டத்தில் எங்கெங்கும் விழுந்து அதன் அழகை ஒரு வழி செய்திருக்கும். எனவே, வசந்த காலம் தொடங்கும் முன்னர் உங்கள் வீட்டின் உள்புறத்தை அழகு படுத்தியதைப் போலவோ, வெளிப்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். தோட்டத்தில் விழுந்து கிடக்கும் காய்ந்த இலைகள் அனைத்தையும் சுத்தம் செய்யுங்கள். புதர்கள் மற்றும் செடிகளை வெட்டி விடுங்கள். செடிகளில் இருக்கும் வறண்ட பகுதிகளை அனைத்தையும் நீக்கி விடுங்கள். இதன் மூலம் செடியின் வளர்ச்சியையும், தோட்டத்தின் அழகையும் வளர்க்க முடியும். இது தான் உங்களுடைய தோட்டம் மற்றும் வீட்டை சுத்தம் செய்து வசந்த காலத்தை வரவேற்கும் குறிப்பாகும்.

வீட்டு உபயோக பொருட்கள்

வீட்டு உபயோக பொருட்கள்

வசந்த காலத்தின் துவக்கத்தை இனிதே வைத்திருக்க முயற்சி செய்து வந்தால் அதற்கான வீட்டு உபயோ பொருட்கள் மற்றும் கருவிகள் உள்ளனவா என்று ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் பயன்படுத்திய வெப்பப்படுத்தும் கருவிகளை இப்பொழுது ஏர்-கன்டிஷனர்கள் கொண்டு மாற்ற வேண்டியிருக்கும். அவை சரி வர வேலை செய்கின்றனவா என்பதை பார்க்க வேண்டியதும் வசந்த காலத்தை வரவேற்க பயன்படுத்தும் குறிப்பாகும்.

துடைத்தல்

துடைத்தல்

வீட்டின் அனைத்து இடங்களையும் மற்றும் பொருட்களையும் சுத்தமாக துடைத்து பளபளபாக்கி வையுங்கள். இதற்காக கிளீனர்களையும், டிடர்ஜன்ட்களையும் பயன்படுத்தலாம். வீட்டிலுள்ள பொருட்களையும், குப்பைகளையும் சுத்தமாக துடைத்து வைப்பது தான் வீட்டை பராமரிப்பதற்கான சிறந்த குறிப்பாக இந்த இடத்தில் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Preparing Your Home For Spring: Tips

To prepare the home for spring there are a lot of things required. Spring cleaning is a hectic job, but is an be made easier using one of the following tips.
Desktop Bottom Promotion