For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைக்காலத்திற்கு ஏற்றவாறு படுக்கை அறையை அலங்கரிக்க சில டிப்ஸ்...

By Babu
|

கோடைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. குளிர்காலத்தில் படுக்கை அறையில் பயன்படுத்திய அடர்த்தியான திரைச்சீலைகள், தரை விரிப்புக்கள் போன்றவற்றை எடுத்துவிட்டு, கொளுத்தும் கோடைக்கு ஏற்றவாறு படுக்கை அறையை அலங்கரித்து பயன்படுத்தினால், படுக்கை அறை அழகாக இருப்பதுடன், சற்று குளிர்ச்சியாகவும், மனதிற்கு இதமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கோடைக்காலத்தில் படுக்கை அறையை அழகாகவும், மனதிற்கு இதம் தரும் வகையிலும் அலங்கரிக்க ஆசையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கோடைக்காலத்திற்கு ஏற்றவாறு படுக்கை அறையை அலங்கரிக்க சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. அதன்படி அலங்கரித்தால், கோடையில் உங்கள் படுக்கை அறை உங்களுடைய விருப்பமான அறையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செடிகளை வைக்கவும்

செடிகளை வைக்கவும்

படுக்கை அறையில் உள் அலங்கார செடிகளை வைத்தால், அறையில் உள்ள தூசிகள் வெளியேற்றப்படுவதுடன், அறையினுள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியம்.

திரைச்சீலைகள்

திரைச்சீலைகள்

குளிர்காலத்தில் எவ்வளவு அடர் நிறங்களைக் கொண்ட கடினமான திரைச்சீலைகளைப் பயன்படுத்தினாலும், கோடையில் லைட் நிறங்களைக் கொண்ட லேசான திரைச்சீலைகளைப் பயன்படுத்தினால், காற்றானது அறையில் தடையின்றி நுழையும். அதிலும் வெள்ளை மற்றும் நியான் நிற திரைச்சீலைகளைப் பயன்படுத்தினால், அறையானது நன்கு பளிச்சென்று இருக்கும்.

படுக்கை விரிப்புக்கள்

படுக்கை விரிப்புக்கள்

கோடைக்காலத்தில் தலையணை மற்றும் மெத்தைக்கு, பூப் பிரிண்ட் போடப்பட்ட தலையணை உறை மற்றும் படுக்கை விரிப்புக்களை பயன்படுத்தலாம்.

இயற்கையான தோற்றம்

இயற்கையான தோற்றம்

படுக்கை அறையில் உள்ள டேபிளில் பூ ஜாடிகளை வைத்து, அதில் நவ்வ நறுமணமிக்க பூக்களை வைத்தால், படுக்கை அறையில் நல்ல நறுமணம் வீசுவதுடன், படுக்கை அறை அழகாகவும் இருக்கும்.

மீன் தொட்டி

மீன் தொட்டி

கோடையில் படுக்கை அறையினுள் சிறு மீன் தொட்டியை வைத்தும் கூட படுக்கை அறையை அலங்கரிக்கலாம்.

பல வண்ணங்கள்

பல வண்ணங்கள்

கோடையில் கருப்பு நிறத்தை தவிர்த்து, மற்ற வண்ணங்களை படுக்கை விரிப்பு மற்றும் குஷன் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

காட்டன் பயன்படுத்தவும்

காட்டன் பயன்படுத்தவும்

கோடைக்காலத்தில் பெட்சீட், தலையணைக் கவர் போன்றவற்றிற்கு காட்டன் பயன்படுத்துவது சருமத்திற்கு இதமாக இருக்கும். மாறாக சில்க், லெனின் போன்றவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் எரிச்சலை ஏற்படுவதுடன், மற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Your Bedroom Ready For Summer?

If you were waiting to get your bedroom ready for the summer season, then check out some bedroom decoration ideas that will help keep up with the seasonal trend.
Story first published: Friday, March 28, 2014, 15:40 [IST]
Desktop Bottom Promotion