For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறந்த ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

By Karthikeyan Manickam
|

கட்டில், டேபிள், பீரோ, நாற்காலி, சோஃபா உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான நவநாகரீக ஃபர்னிச்சர்களை வாங்கிப் போடுவதில் தற்கால மக்களுக்கு மிகவும் அதிகமாகவே ஆர்வம் உள்ளது. தங்கள் வசதியைக் காட்டிக் கொள்ளவும், வசதியாக இருப்பது போல் காட்டிக் கொள்ளவும் சாதாரண மக்களிடம் கூட ஃபர்னிச்சர் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் ஃபர்னிச்சர்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளது.

இப்படி ஆடம்பரத்திற்காக ஃபர்னிச்சர்களை வாங்காமல், விலை மற்றும் தரம் ஆகியவற்றைப் பார்த்து அவற்றை வாங்கிப் போடுவது தான் நம் வீட்டுக்கு நல்லது. இப்போது எப்படிப்பட்ட ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்துப் பார்க்கலாமா?

தரத்தைப் பாருங்கள்!

நாற்காலி, டேபிள், சோஃபா என்று எது வாங்கினாலும் சரி, அவற்றின் தரத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். ஃபர்னிச்சர்களுக்குத் தேவையான ஸ்ப்ரிங்ஸ், ஃப்ரேம் மற்றும் குஷன் ஆகியவை வலுவாகவும், தரமாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஃபினிஷிங் முக்கியம்!

வெளியில் பார்ப்பதற்கு ஃபர்னிச்சர் எப்படி இருந்தாலும் சரி, அதன் ஃபினிஷிங் மற்றும் பெயிண்ட்டிங் எப்படி இருக்கிறது என்பதைக் கவனமாக ஆராய வேண்டும். கூர்மையான முனைகள் பிசிறில்லாமல் மழுக்கென்று இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கண்ட இடத்திலும் ஆணிகள் நீண்டு இல்லாமல் இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

குஷன்கள் எப்படி?

சரியான குஷன்கள், சரியான வடிவத்தில் சரியான அளவில் அழகாக வெட்டப்பட்டு ஃபர்னிச்சர்களுடன் சரியான இடத்தில் சரியாகத் தைக்கப்பட்டிருக்கும். கூச்சப்படாமல் இவற்றை எல்லாம் நன்றாக அழுத்திப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

அடிப் பகுதிகள் சரியா?

ஃபர்னிச்சர்களின் அடிப் பகுதிகளையும் அக்கறையுடன் கவனித்துப் பார்க்க வேண்டும். சில ஃபர்னிச்சர்களின் அடிப்பகுதி சரியாகத் தைக்கப்படாமலிருக்கும்; ஸ்க்ரூக்கள் லூசாகத் தொங்கிக் கொண்டிருக்கும்; ஸ்ப்ரிங்குகள் பாதுகாப்பின்றி கழன்று விழுவது போலிருக்கும். இந்தக் குறைகள் இருந்தால் அத்தகைய ஃபர்னிச்சர்களைக் கடாசி விடுங்கள்.

பிசிறுகள் உள்ளனவா?

பீரோ போன்ற இரும்பு ஃபர்னிச்சர்களில் எந்தவிதமான சிறு பிசிறும் இல்லாமல் இருக்க வேண்டும். போல்ட்டுகள், நட்டுகள், ஸ்க்ரூக்கள் எல்லாம் சரியாக இறுக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். சரியான நிறங்களில் சரியாக பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.

சரியான இடத்தில்...

தரமான ஃபர்னிச்சர்களை வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை வீட்டிலோ. அலுவலகத்திலோ பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே வைக்க வேண்டும். தேவையில்லாமல் அவை இடத்தை அடைத்துக் கொண்டிருக்கக் கூடாது. வீட்டின் சுற்றுச் சூழலையும் பொறுத்து ஃபர்னிச்சர்களை வைக்க வேண்டும்.

English summary

How To Choose The Best Furniture

A good quality chair, table, sofa, or chaise will have more raw materials including springs, frame, and cushion; such pieces are usually heavier than average quality models.
Story first published: Tuesday, October 28, 2014, 15:14 [IST]
Desktop Bottom Promotion