For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டை ஓழுங்குப்படுத்த ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்!!!

By Ashok CR
|

வீட்டை கசகசவென இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது கடினமான வேலையே! பல நேரங்களில், உங்கள் அலமாரியில் இருக்கும் இடத்தை தாண்டியும் அதற்குள் பொருட்களை குவித்து வைத்திருப்பீர்கள். அதனை சரியாக ஒழுங்குப்படுத்தினால், தேவையான பொருட்களை குவிந்து கிடக்கும் பொருட்களுக்கு மத்தியில் கண்டுபிடிப்பது சுலபமாகிவிடும்.

ஆனால் அதனை எப்படி ஒழுங்குப்படுத்துவது என்பது தான் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதுவும் இடம் சின்னதாக இருந்தால். அது இன்னமும் சிரமமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அனைத்தையும் ஒழுங்குப்படுத்த சிறந்த வழியை நாம் யோசிப்பதை தவிர வேறு வழியே இல்லை.

கோடைக்காலத்திற்கு ஏற்றவாறு படுக்கை அறையை அலங்கரிக்க சில டிப்ஸ்...

புதிய ஃபர்னிச்சர்கள் வாங்கினால் உங்கள் பிரச்சனை தீரும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது பிரச்சனையை தீர்க்குமா இல்லையா என்பது தான் உண்மையான வினாவே. அனைத்தும் ஓழுங்குபடுத்தும் போது, உங்கள் இடம் அனைத்தும் நிரம்பி விட கூடாது. இருக்கும் இடத்தை சீரான சிறந்த முறையில் பயன்படுத்த பல வழிகள் உள்ளது.

உங்கள் இடத்தை ஒழுங்குப்படுத்தி கசகசவென ஆக்காமல் இருக்க பல ஐடியாக்கள் இருக்கிறது. அதற்கு இட நிர்வாகத்தில் நீங்கள் ஈடுபட வேண்டியிருக்கும். வீட்டை ஒழுங்குப்படுத்தும் இவ்வகை வழிமுறைகளில் அனைத்து பெண்களும் ஈடுபட வேண்டும். இது உங்கள் இடத்திற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லமால், உங்களுக்கு தேவையான பொருட்களை எடுப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவர்களை பயன்படுத்துங்கள்

சுவர்களை பயன்படுத்துங்கள்

உங்கள் வீட்டில் அலமாரிகள் போட இடமில்லை என்றால், கண்ணுக்குத் தெரியும்படியாக இருக்க வேண்டிய பொருட்களை மாட்ட சுவற்றை பயன்படுத்தலாம். கருமையான பின்புலத்தில், பலகைகளை சுவற்றில் மாட்டி, அதன் மேல் தட்டுக்கள் அல்லது தினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்திடலாம். இது இடத்தை சேமித்து உங்கள் வீட்டையும் அழகாக காண்பிக்கும்.

ஒழுங்குப்படுத்தப்பட்ட ட்ராயர் (அலமாரி பெட்டி)

ஒழுங்குப்படுத்தப்பட்ட ட்ராயர் (அலமாரி பெட்டி)

சரிசமமாக பிரிக்கப்பட்ட மோல்ட்டட் ட்ராயர்களை பயன்படுத்துங்கள் அல்லது கட்டில் பக்கமாக உள்ள ட்ராயர் கொண்ட மேஜையை பயன்படுத்துங்கள். கட்டில் பக்கமாக வைக்க வேண்டிய பொருட்களை இதில் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்வதால், இரவு நேர இருட்டில் கூட உங்கள் பொருட்களை சுலபமாக எடுத்துக் கொள்ளலாம்.

உருளுகின்ற தட்டு அடுக்குகள்

உருளுகின்ற தட்டு அடுக்குகள்

நீளமாக இருக்கும் தட்டு அடுக்குகள் வைத்திருந்தால், உங்கள் பொருட்களை எடுப்பதற்கு சிரமம் ஏற்படலாம். மேலும் பொருட்கள் குளறுபடியாக காட்சியளிக்கும். அதனால் படுக்கை போர்வைகள் மற்றும் இதர போர்வைகளை வைக்க உருளுகின்ற தட்டு அடுக்களை பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் உன்கள் இடம் சுத்தமாகவும் கசகசவென இல்லாமலும் இருக்கும்.

சிறு தொட்டியில் பொருட்களை போடலாம்

சிறு தொட்டியில் பொருட்களை போடலாம்

அனைத்திற்கும் ஒரு காலம் உண்டல்லவா? நம் பருவத்துக்குரிய பொருட்களை வைக்க ஏன் பிரிவுகளுடன் கூடிய ஒரு சிறு தொட்டியை பயன்படுத்தக்கூடாது? இந்த தொட்டியை வைக்க அதிக இடம் தேவைப்படாததால் எந்த சிறு தொட்டியை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது பொருட்களை சுத்தமாக வைக்க உதவி செய்வதோடு அதிக இடத்தையும் உங்களுக்கு ஒதுக்கி தரும்.

விளையாட்டு பொருட்களை ஒழுங்குப்படுத்துதல்

விளையாட்டு பொருட்களை ஒழுங்குப்படுத்துதல்

விளையாட்டு பொருட்களை ஒழுங்குப்படுத்தும் போது ஏற்படும் ஒரு பிரச்சனை - கொள்கலன்களை மாற்றுதல். அதற்கு நீங்கள் இதனை கடைப்பிடிக்கலாம் - உங்கள் கொள்கலன் மீது ஒரு தட்டி ஒன்றை இணைத்து கொள்ளுங்கள். இதனால் எந்த ஒரு இடர்பாடின்றி உங்கள் விளையாட்டு பொருட்களை அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.

ஒரே மாதிரியான பொருட்களை ட்ராயரில் வைத்தல்

ஒரே மாதிரியான பொருட்களை ட்ராயரில் வைத்தல்

ஒரே மாதிரியான பொருட்களை ஒரு ட்ராயரில் வைத்துக் கொள்ளலாம். இதனால் பொருட்கள் ஒழுங்குப்படும். மேலும் வீட்டிற்கு ஒரு அழகிய தோற்றத்தை அளிக்கும். இந்த விஷயத்தில் ஒரே மாதிரியான பொருட்களை கண்டுபிடிப்பது எளிய வேலையாகத் தான் இருக்கும்.

டப்பாவில் அடைத்தல்

டப்பாவில் அடைத்தல்

உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை டப்பாவில் போட்டு வைத்தால் என்ன? எனவே டப்பாவை பட்டியலிட்டு, எந்த டப்பாவில் என்ன இருக்கிறது என்பதை குறித்துக் கொள்ளுங்கள். இதனால் எதில் என்ன இருக்கிறது என்பது சுலபமாக தெரியும்.

டி-ஷர்ட்களை ட்ராயரில் வைத்திடவும்

டி-ஷர்ட்களை ட்ராயரில் வைத்திடவும்

உங்கள் டி-ஷர்ட்களை சுருட்டி ட்ராயரில் வைத்தால், அவை இடத்தை அடைக்காது. மேலும் இது உங்கள் அறையை கசகசவென காட்டாமல் அழகாக வைத்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Home Organizers Every Woman Should Follow

There are many ideas that will help you make your space organised and clutter free. It will help you indulge in space management.
 
Desktop Bottom Promotion