For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் பால்கனியை அலங்கரிக்க உதவும் பொருட்கள்!!!

By Maha
|

கோடைக்காலம் ஆரம்பித்தாலே வீட்டில் உள்ள சில பொருட்களை அவசியம் மாற்றி, வீட்டையே கோடைக்காலத்திற்கு ஏற்றவாறு அலங்கரிக்க வேண்டும். இல்லாவிட்டால், வீட்டினுள்ளேயே இருக்க முடியாத அளவிற்கு வந்துவிடும். ஏனெனில் இதற்கு முன்பு குளிர்காலம் என்பதால், அனைவரும் வீட்டின் ஜன்னலுக்கு நல்ல தடிமனான திரைச்சீலைகளை தொங்கவிட்டு, தடிமனான பெட்சீட், தலையணை உறை போன்றவற்றையும் பயன்படுத்தியிருப்போம்.

இதை அப்படியே கோடைக்காலத்தில் பயன்படுத்தினால், பின் வீட்டினுள் காற்று நுழையாமல் அதிகம் வியர்க்க ஆரம்பிக்கும். மேலும் பலருக்கு மாலை வேளையில் வீட்டின் வெளியே இருக்கும் பால்கனியில் அமர்ந்து காற்று வாங்குவது மிகவும் பிடிக்கும். அப்படி காற்று வாங்க நினைக்கும் போது, அவ்விடம் குளிர்ச்சியாக, கண்களுக்கு அழகைத் தரும் வகையில் இல்லாவிட்டால் நன்றாக இருக்காது.

இதுப்போன்று வேறு: கோடைக்காலத்திற்கு ஏற்றவாறு படுக்கை அறையை அலங்கரிக்க சில டிப்ஸ்...

ஆகவே பால்கனியை கோடைக்காலத்தில் ஏற்றவாறு அலங்கரித்தால், பால்கனி அழகாக இருப்பதுடன், குளிர்ச்சியாகவும் இருக்கும். இங்கு கோடைக்காலத்தில் பால்கனியை அழகாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணியோசை எழுப்பும் திரைச்சீலைகள்

மணியோசை எழுப்பும் திரைச்சீலைகள்

மணியோசை வருமாறான திரைச்சீலைகளை வீட்டின் பால்கனியில் தொங்கவிட்டால், காற்றினால் அந்த திரைச்சீலைகள் அசையும் போது எழும் ஒலி இனிமையாக இருப்பதுடன், பால்கனியும் அழகாக இருக்கும்.

மர நாற்காலிகள்

மர நாற்காலிகள்

பால்கனியில் மரத்தாலான நாற்காலியையும், அந்த நாற்காலியில் மென்மையான குஷனையும் வைத்து அலங்கரிக்கலாம்.

செடிகள்

செடிகள்

தோட்டம் அமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், சிறு பால்கனியாக இருந்தாலும், அங்கு தொட்டி செடிகளை வளர்க்கலாம். இது பால்கனியில் உள்ள வெப்பத்தை தணித்து, பால்கனியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

சங்குகளால் ஆன திரைச்சீலைகள்

சங்குகளால் ஆன திரைச்சீலைகள்

இன்னும் வித்தியாசமாக அலங்கரிக்க வேண்டுமானால், சங்குகளால் ஆன திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.

தொங்கும் விளக்குகள்

தொங்கும் விளக்குகள்

இல்லாவிட்டால், பல வண்ணங்களால் ஆன தொங்கும் விளக்குகளால் பால்கனியை அலங்கரிக்கலாம்.

நீரூற்று

நீரூற்று

ஒருவேளை வீட்டில் பால்கனி பெரிதாக இருந்தால், அங்கு சிறு நீரூற்றை வைக்கலாம். இதனால் பால்கனி சற்று குளிர்ச்சியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Decorate Summer Balcony With Accessories

If you have a balcony in your home, then here are some ideas to decorate the balcony with summer accessories.
Story first published: Thursday, April 10, 2014, 17:35 [IST]
Desktop Bottom Promotion