For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டை அலங்கரிக்க 10 அட்டகாசமான ஃபெங் சூயி வழிகள்!!!

By Karthikeyan Manickam
|

ஃபெங் சூயி என்பது ஒரு கலை. பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் விதமாக ஒரு இடத்தை மாற்றுவது என்பதுதான் இந்தச் சீன வார்த்தைக்குப் பொருளாகும். சீனாவின் தொன்மையான இந்தக் கலை பின்னர் மேற்கத்திய நாடுகளுக்கும் பரவி பெரும் புகழ் பெற்றது.

தற்போது உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த ஃபெங் சூயி கலை மூலம் தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் அமைதி தவழும் விதத்தில், ஆனால் அட்டகாசமாக அமைத்து வருகின்றனர். இந்தக் கட்டடங்களுக்குள் நுழைந்தாலே போதும், அவ்வளவு பாஸிட்டிவ்வான எனர்ஜி கிடைக்குமாம்.

ஃபெங் சூயி கலையில் நூற்றுக்கணக்கான வழிகளில் நாம் நம் வீட்டு அமைப்புகளையும் மாற்றியமைத்து நமக்குள் உள்ள பாஸிட்டிவ் எனர்ஜிகளை அதிகரிக்க முடியும். இவற்றில் பெரும்பாலும் கொஞ்சம் கஷ்டமான, சிக்கலான விஷயங்கள் தான். அவற்றைத் தவிர்த்து விட்டு, நாம் 10 எளிய ஃபெங் சூயி வழிகளில் நம் வீடுகளைப் பிரம்மாதமாக அமைக்க முயற்சி செய்வோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகான வீட்டு முகப்பு

அழகான வீட்டு முகப்பு

நம் வீட்டின் தலை வாசல் தான் மிக முக்கியமானது. இந்த வீட்டு முகப்பு அருமையாக இருந்தால் தான் அதன் வழியாக பாஸிட்டிவ் எனர்ஜியும் உள்ளே வர முடியும். பார்த்த உடனே அது கவரும் வகையில் சுத்தமாக இருக்க வேண்டும். பழைய தட்டுமுட்டுச் சாமான்கள், உடைந்த பொருள்கள் எல்லாம் இங்கே தேங்கிக் கிடக்கக் கூடாது. செடிகள் ஏதும் அங்கு வைத்திருந்தாலும் அவற்றை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

சுத்தமான அறைகள்

சுத்தமான அறைகள்

நம் வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையையும் எப்போதுமே சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். சிறிய அறையாக இருந்தாலும் அதை பளிச்சென்று வைத்துக் கொண்டால் நம் மனமும் அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கும். குப்பை கூளமாகக் கிடந்தால் அங்கு பாஸிட்டிவ் எனர்ஜி எப்படிக் கிடைக்கும்? மண்டை காய்வதுதான் மிச்சமாக இருக்கும்.

மரச் சாமான்கள்

மரச் சாமான்கள்

நாம் கஷ்டப்பட்டு விலை கொடுத்து வாங்கிய பர்னிச்சர்களை நம் வீட்டில் அதனதன் இடங்களில் சரியாக வைத்தால் தான் வீடு அழகாக இருக்கும். நமக்கும் பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். கண்ட கண்ட இடங்களில் குண்டக்க மண்டக்க நாம் இந்த மரச் சாமான்களைப் போட்டு வைத்தால் நமக்கே கடுப்பாக இருக்கும்; அவற்றில் நம் கால்கள் தெரியாமல் பட்டு இடறி விழவும் நேரிடலாம்.

வீடு வேறு... வேலை வேறு...

வீடு வேறு... வேலை வேறு...

இப்போதெல்லாம் நிறைய பேர் தங்கள் வீட்டிலேயே ஆபிஸ் வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வேலைக்கென்று தனியாக ஒரு இடத்தை வீட்டில் செட் செய்து கொள்வதுதான் நல்லது. அதைவிட்டு, தூங்கி ஓய்வெடுக்க வேண்டிய அறைகளைத் தங்கள் வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது. அப்படி இரண்டும் ஒன்றாக இருந்தால், ஒன்று வேலை செய்து கொண்டே இருப்பீர்கள்... அல்லது தூங்கிக் கொண்டே இருப்பீர்கள்!

பழுது நீக்குதல்

பழுது நீக்குதல்

நம்மில் பெரும்பாலான வீடுகளில் நாற்காலிகள் ஸ்க்ரூ இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் அல்லது பாத்ரூம் குழாய்களில் வாசர்கள் பழுதாகி நீர் கசிந்து கொண்டிருக்கும். எந்த சிறிய பழுதையும் எவ்வளவு விரைவாக சரி செய்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் என்பது உறுதி!

முகக் கண்ணாடிகள்

முகக் கண்ணாடிகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நம் முகத்தைப் பார்க்கும் முகக் கண்ணாடிகளை சரியான இடத்தில், சரியான உயரத்தில், சரியான வெளிச்சத்தில் இருக்குமாறு சுவர்களில் தொங்க விடுங்கள். அப்படி இருந்தால் பாஸிட்டிவ் எனர்ஜி முகத்தில் நிச்சயம் பிரதிபலிக்கும்.

செடிகள், பூக்கள், பழங்கள்

செடிகள், பூக்கள், பழங்கள்

தோட்டங்களில் இருப்பதைப் போல் நம் வீடுகளுக்குள்ளும் ஆங்காங்கே செடிகளையும், பூக்களையும், பழங்களையும் (ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை) கண்களில் படுமாறு அமைக்க வேண்டும். பாஸிட்டிவ் எனர்ஜி பிய்த்துக் கொள்ளும். ஒரு கிண்ணம் நிறைய பழங்களை படுக்கையறையில் வைத்தால் நல்ல 'மூடு' வருவதற்கு உதவும்.

நீர் செய்யும் மாயம்

நீர் செய்யும் மாயம்

குறைந்த பட்சம் ஒரு வாளியில் தண்ணீரைக் கொண்டு வந்து அறையின் ஓரத்தில் வைத்தால் அந்த அறையில் ஈரப்பதம் அதிகரித்து குளிர்ச்சியோடு இருக்கும். நமக்குள்ளும் ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். கொஞ்சம் வசதி இருந்தால் வாட்டர் ஃபவுண்டெயின் வைக்கலாம்.

வண்ணமயமான அறைகள்

வண்ணமயமான அறைகள்

நம் வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையையும் மிகவும் கலர்ஃபுல்லாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு தன்மை இருக்கும். அதற்கேற்றவாறு, நமக்கும் பிடித்தவாறு ஒவ்வொரு அறைக்கும் பெயிண்ட் அடித்துக் கொண்டால், அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் பாஸிட்டிவ் எனர்ஜி பொங்கி வழியும்.

உருண்டை முனைகள்

உருண்டை முனைகள்

மேஜை, நாற்காலி, கட்டில் என்று நம் வீட்டிலுள்ள எந்தப் பொருளின் அனைத்துப் பக்கங்களும், முனைகளும் கூர்மையாக இருக்கக் கூடாது. அவை எந்த நேரத்திலும் நம்மைப் பதம் பார்த்துவிடும் என்பதால், அவை நெகட்டிவ் எனர்ஜியைப் பிரதிபலிப்பவை ஆகும். அவை உருண்டையாக, கூர்மையின்றி இருந்தால் பாஸிட்டிவ் எனர்ஜியைக் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Feng Shui To Follow

Feng shui is the art and science of organizing space to maximize positive energy, or chi. It originated in ancient China, and has become very popular in the western world. Here are 10 feng shui rules you should follow.
Desktop Bottom Promotion