For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே ஜிம் வைக்க போறீங்களா? முதல்ல இத படிச்சுட்டுப் போங்க...

By Ashok CR
|

நீங்கள் கட்டமைப்பான உடலமைப்புடன், முனைப்புடன் இருக்க வேண்டுமானால், நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும். ஆனால் உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவால் ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை என்றால் என்னாகும்? அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் தானே. உடலை கட்டமைப்புடன் வைக்க, உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க, உங்கள் வீட்டில் ஒரு சிறிய ஜிம் ஒன்றினை அமைத்திட சில வழிகள் உள்ளது.

வீட்டில் அமைக்கும் ஜிம் நன்றாக காட்சி அளிக்கவும், தொழில் ரீதியானதாக இருக்கவும் சில அத்தியாவசிய தேவைகள் அவசியமானது. ஒரு சில ஜிம் கருவிகளுக்கு குறைந்த முதலீடு இருந்தாலே போதுமானது. வீட்டில் ஜிம் அமைப்பதால் மற்றொரு பயனும் உள்ளது; வீட்டை விட்டு வெளியே செல்ல தேவையில்லை, ஜிம் நேரத்திற்கு ஓடத் தேவையில்லை. ஜிம் கருவிகளை வாங்கி வீட்டிலேயே ஜிம்மை அமைத்து விட்டால், வீட்டில் உங்கள் தோதிற்கு நீங்கள் உடற்பயிற்சி செய்து கொள்ளலாம்.

வீட்டில் ஜிம் வைப்பதற்கான அத்தியாவசிய தேவைகள் சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்டு, உங்கள் வீட்டை உடற்பயிற்சி செய்ய சிறந்த இடமாக மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புல் அப் பார்

புல் அப் பார்

உங்கள் தசைகளின் மீது கவனம் செலுத்த, உங்கள் வீட்டில் உங்கள் சொந்த புல் அப் பாறை தயார் செய்யலாம். வீட்டில் ஜிம் வைக்க தேவையான அத்தியாவசிய பொருளில் இதுவும் ஒன்று; முக்கியமாக ஆண்களுக்கு.

ஸ்கிப்பிங் கயிறு

ஸ்கிப்பிங் கயிறு

உங்கள் தொடையில் உள்ள எடையை குறைக்க ஸ்கிப்பிங் கயிற்றைப் பயன்படுத்துங்கள். பெண்களுக்கு இது சரியான உடற்பயிற்சியாகும்.

உடற்பயிற்சி பந்து

உடற்பயிற்சி பந்து

உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பந்து இருப்பதும் அவசியமாகும். ட்ரெட்மில் வாங்குவதற்கு முன்பாக இது கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.

உடற்பயிற்சி பாய்

உடற்பயிற்சி பாய்

வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் ஜிம்மில் வைக்க வேண்டிய கருவிகளில் உடற்பயிற்சி பாய் மற்றொரு அதிமுக்கிய பொருளாகும். உடற்பயிற்சி செய்வதற்கு பாய் இல்லாமல் தரையில் படுப்பது கஷ்டமாக இருக்கும். மேலும் இதனால் உங்கள் முதுகில் கூட வலி எடுக்கலாம்.

தடுப்பாற்றல் பேண்ட்

தடுப்பாற்றல் பேண்ட்

கைகளிலும், கால்களிலும் நிறத்தை பெற்றிட, வீட்டில் வைக்கப்படும் ஜிம்மில் தடுப்பாற்றல் பேண்ட்டுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும். குறைந்த விலையில் இவ்வகை பேண்ட்டுகளைப் பெறலாம்.

நற்பதமான டவல்

நற்பதமான டவல்

முகத்திலும், உடலிலும் உள்ள வியர்வையை துடைத்திட உடற்பயிற்சி செய்யும் போது நற்பதமான டவல்களை வைத்துக் கொள்ளுங்கள்.

நிறுத்தல் கடிகாரம்

நிறுத்தல் கடிகாரம்

வீட்டில் வைத்திடும் ஜிம்மிற்கு தேவையான மற்றொரு முக்கியமான கருவி இது. நிறுத்தல் கடிகாரத்தை பயன்படுத்தி நீங்கள் ஓடும் நேரம் அல்லது எவ்வளவு நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறீர்கள் என்பதை கண்டு கொள்ளலாம்.

ட்ரெட்மில்

ட்ரெட்மில்

வீட்டில் அமைக்கும் ஜிம்மிற்கு தேவையான மற்றொரு முக்கியமான கருவி தான் ட்ரெட்மில். இதயத்திற்கும் கால்களுக்கும் நல்ல கருவியாக விளங்குகிறது ட்ரெட்மில். அதனால் இது வீட்டில் அமைக்கப்படும் ஜிம்மிற்கு இது ஒரு அடிப்படை கருவியாக விளங்குகிறது.

ஸ்டீரியோ சிஸ்டம்

ஸ்டீரியோ சிஸ்டம்

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உற்சாகமாக இருக்க நல்ல இசை, அருமையான ஸ்பீக்கர்கள் மற்றும் நல்லதொரு ஸ்டீரியோ சிஸ்டம் தேவைப்படும். உங்கள் லாப்டாப் எனப்படும் மடிக்கணினியைக் கூட பயன்படுத்தலாம்.

திறந்த ஜன்னல்கள்

திறந்த ஜன்னல்கள்

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, நம் உடலில் இருந்து அளவுக்கு அதிகமான வியர்வை வெளியேறும். இதயம் அதிக அளவிலான இரத்தத்தை பம்ப் செய்வதால், உடலின் உஷ்ணமும் அதிகரிக்கும். அதனால் வீட்டில் ஜிம் வைக்க வேண்டுமானால், நல்ல காற்றோட்டம் வேண்டும். அதனால் அதற்கு திறந்த ஜன்னல்களும், லேசான திரைகளும் இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Essentials Needed For A Home Gym

The best thing about having a home gym is that there is no necessity of stepping out of your home and following gym timings. You can get fit from the comfort of your home once you buy these essentials for a home gym. ADVERTISEMENT Here are some of the essentials needed for a home gym, take a look and get ready to convert your home into a fantastic place to workout.
Desktop Bottom Promotion