For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ண ஜெயந்தி 2022: கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணனை அலங்கரிக்க சில வழிகள்!!!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண ஜெயந்தி வந்துவிட்டது. பூஜை அறையை அலங்கரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

|

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண ஜெயந்தி வந்துவிட்டது. பூஜை அறையை அலங்கரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிலும் நன்கு அழகாகவும், பளிச்சென்றும், சற்று வித்தியாசமான வகையிலும் அலங்கரித்து, கண்ணனை வீட்டிற்கு வரவேற்றால் இன்னும் சூப்பராக இருக்கும்.

MOST READ: கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா? இத படிங்க...

பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி என்பது விஷ்ணு பிறந்த நாள் ஆகும். இந்த விஷ்ணுவை கிருஷ்ணன், கண்ணன் போன்ற பல பெயர்களில் அழைப்பார்கள். மேலும் இந்நாளன்று வீட்டில் உள்ள குழந்தைகளை கிருஷ்ணனாக நினைத்து, அவர்களுக்கு கண்ணன் போன்று அலங்காரம் செய்து விடுவார்கள்.

MOST READ: கிருஷ்ணரின் ராசலீலை பற்றிய அதிர்ச்சியூட்டும் தொன்மங்கள்!!!

அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள கிருஷ்ணன் சிலையை பலவாறு வித்தியாசமாக அலங்கரிக்கலாம். இதனால் வீட்டிற்கு வருபவர் அனைவரிடமும் நல்ல பாராட்டுக்களை பெறுவதோடு, வீட்டிற்கு வரும் கிருஷ்ணனும் சந்தோஷப்படுவார். சரி, இப்போது பூஜை அறையில் உள்ள கண்ணன் சிலையை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூக்கள்

பூக்கள்

பூஜை அறையில் இருக்கும் கண்ணன் சிலையை பூக்களால் அலங்கரிக்கலாம். அதிலும் நல்ல அடர் நிறத்தில் உள்ள செவ்வந்தி மற்றும் ரோஜா போன்றவற்றால் பூஜை அறையை அலங்கரிப்பது இன்னும் அழகாக இருக்கும்.

திரைச்சீலைகள்

திரைச்சீலைகள்

பூஜை அறையின் சுவர்களில் நன்கு மின்னும் படியான திரைச்சீலைகளை தொங்கவிடலாம். குறிப்பாக சிவப்பு, மஞ்சள், நீலம் போன்றவை சிறந்ததாக இருக்கும்.

மல்லிகை

மல்லிகை

வேண்டுமெனில், கண்ணன் மற்றும் ராதையை நறுமணமிக்க மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கலாம்.

கல் பதித்த கிரீடம்

கல் பதித்த கிரீடம்

கிருஷ்ணன் ஒரு ஆடு மேய்க்கும் இளவரசராதலால், அவர் எப்போதும் கிரீடம் அணிந்திருப்பார். எனவே கிருஷ்ணன் பிறந்த நாளன்று சற்று ஸ்பெஷலாக அலங்கரிக்க விரும்பினால், கல் பதித்த ஸ்பெஷலான கிரீடம் போட்டு, அதற்கு மேட்ச்சாக ஆடையை அணிவிக்கலாம்.

மயில் தோகை

மயில் தோகை

கண்ணனின் சிலையை வேண்டுமானால், மயில் தோகையால் கூட அலங்கரிக்கலாம். அதிலும், கண்ணன் சிலைக்கு பின்னால், மயில் தோகையை விரித்துவிட்டால், இன்னும் அழகாக இருக்கும்.

குளிர்கால ஸ்பெஷல் அலங்காரம்

குளிர்கால ஸ்பெஷல் அலங்காரம்

இது குளிர்காலம் என்பதால், பல வீடுகளில் கிருஷ்ணன் சிலைக்கு உல்லனைப் போர்த்தி விட்டு அலங்கரிப்பார்கள்.

பலவண்ண பூக்கள்

பலவண்ண பூக்கள்

சிம்பிளாக பூக்கள் கொண்டு அலங்கரிக்க விரும்பினால், மஞ்சள். சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூக்களால் கண்ணன் சிலையை அலங்கரிக்கலாம்.

மாடுகள்

மாடுகள்

இயற்கையான தோற்றத்தில் அலங்கரிக்க வேண்டுமானால், கண்ணன் சிலையைச் சுற்றி புல்லை தூவி, மாடுகளின் சிலையை ஆங்காங்கு வைத்துவிடலாம்.

மங்களகரமான தோற்றம்

மங்களகரமான தோற்றம்

மங்களகரமான நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களால் ஆன ஜொலிக்கும் துணியை கூட கண்ணனுக்கு உடுத்தி அலங்கரிக்கலாம்.

சந்தன் பிரிண்ட் (Chandan Prints)

சந்தன் பிரிண்ட் (Chandan Prints)

இல்லையெனில், படத்தில் காட்டியவாறு கண்ணனின் பின்புறத்தில் சந்தன் பிரிண்ட் கொண்டு அலங்கரிக்கலாம்.

பல்லக்கு

பல்லக்கு

பெரும்பாலான வட இந்திய வீடுகளில், கண்ணனை நன்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அலங்கரிப்பார்கள்.

மெட்டல் பல்லக்கு

மெட்டல் பல்லக்கு

கண்ணனை சிறிய பல்லக்கில் அமர வைக்க வேண்டுமெனில், இந்த மாதிரியான பல்லக்கை தேர்ந்தெடுக்கலாம்.

வைரம்

வைரம்

வசதி இருப்பவர்கள், கோபால கிருஷ்ணனை வீட்டில் உள்ள வைர நகைகளால் அலங்கரிக்கலாம்.

யசோதாவுடன்...

யசோதாவுடன்...

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனை அலங்கரிக்க ஒரு சூப்பர் ஐடியா வேண்டுமென்றால், யசோதாவுடன் இருக்குமாறு அலங்கரிப்பது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Decorate Krishna For Janmashtami

If you have a Bal Gopala at home and want to deck Him up for Janmashtami celebrations, then here are few best ways to decorate the idol for this Hindu festival.
Desktop Bottom Promotion