For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வளமான தீபாவளிக்கான சில வாஸ்து டிப்ஸ்...

By Super
|

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. ஒளியின் பண்டிகையான தீபாவளி நமக்கு மகிழ்ச்சியை அளித்து, நம் வாழ்வில் சந்தோஷம் மற்றும் வளத்தை அள்ளிக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த இந்து பண்டிகைக்கான தயார் வேலைகள் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொடங்கிவிடும். தீபாவளி என்பது லட்சுமி தேவி மற்றும் விநாயகரை வழிப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த பண்டிகையின் போது கடவுள்களை நம் வீட்டிற்குள் வரவேற்க வீட்டை சுத்தப்படுத்தி ஒதுக்கி வைப்பார்கள்.

இந்நேரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை சரியான இடத்தில் வைக்க வேண்டும் என்று பலர் முற்படுவதுண்டு. அதனால் இருக்க வேண்டிய இடத்தில் பொருட்களை வைத்து நன்மைகளை அடைய வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. லட்சுமி தேவி மற்றும் விநாயக பெருமானை வரவேற்க தயாராக உள்ளவர்கள் கீழ்கூறிய சில வாஸ்து டிப்ஸ்களை பின்பற்றி, வீட்டை தீபாவளியின் போது தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

Vastu Tips For A Prosperous Diwali

சுத்தம் செய்தல்

தீபாவளியின் போது வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு முக்கியமான வாஸ்து டிப்ஸாகும். வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை தூக்கி எறியுங்கள். ஏனெனில் வீட்டிற்குள் நேர்மறையான சக்தி நுழைவதற்கு, அவைகள் தடையாக இருக்கும். ஆகவே வீட்டை சுத்தமாக வைத்திருந்தால், நேர்மறையான சக்திகள் வீட்டினுள் நுழைந்து அப்படியே தங்கவும் செய்யும்.

அலங்காரம்

தீபாவளி என்றாலே அலங்காரங்கள் தான். மாவிலை தோரணங்கள் மற்றும் செவ்வந்தி பூக்களின் அலங்காரங்களும் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தரும் என்று நம்பப்படுகிறது. வீட்டின் முகப்பில் பூக்களினால் செய்யப்பட்ட தோரனையை கட்டுங்கள். அது இயற்கையின் வளத்தை குறிக்கும். மேலும் கடவுளின் ஆசிர்வாதத்தை ஈர்க்கும்.

விலையுர்ந்த பொருட்களை வைப்பது

வடக்கு திசையை குபேர மூலை என்று சொல்வார்கள். அந்த திசையை குபேரர் ஆள்கிறார் என்றும் நம்பப்படுகிறது. அதனால் செல்வம் வைக்கும் இரும்புப்பெட்டி அல்லது அலமாரியை வடக்கு திசை நோக்கி வைக்கலாம். மேலும் வீட்டில் செல்வத்தை பெருக்க, அந்த பீரோவில் லட்சுமி தேவியின் சிலையை வைக்கலாம்.

விளக்குகள்

விளக்குகள் இல்லாமல் தீபாவளியா? முக்கியமாக அகழ் விளக்குகள். அதிலும் நான்கு கூட்டெண்ணிக்கையாக விளக்குகள் இருக்க வேண்டும். ஏனெனில் இது லட்சுமி தேவி, விநாயகர், குபேரர் மற்றும் இந்திரன் ஆகிய கடவுகளை குறிக்கும். அதனால் அவைகளை பிரிக்காதீர்கள்.

காலடி சுவடுகள்

பல பேரின் வீட்டு நுழைவு வாயில் மற்றும் பூஜை அறை நுழைவு வாயிலில் சிறியதாக சிவப்பு காலடிச் சுவடுகள் வரையப்படும். இவை லட்சுமி தேவியின் காலடித் தடமாக கருதப்படுகிறது. இப்படி செய்வதால் வீட்டிற்குள் செல்வம், சந்தோஷம் மற்றும் வளம் நிறையும் என்று நம்பப்படுகிறது.

சாமி சிலைகளின் திசை

வாஸ்து சாஸ்திரப் படி, லட்சுமி தேவி, விநாயகர், இந்திரர் மற்றும் குபேரரின் சிலைகளை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டும். அவைகளை வணங்குபவர்கள் வட கிழக்கு அல்லது வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வழிபட வேண்டும்.

மேற்கூறிய சில வாஸ்து டிப்ஸ்களை பின்பற்றி, தீபாவளியின் போது வீட்டை தூய்மையாக வைத்து, அதிர்ஷ்டத்தை வீட்டிற்குள் கொண்டு வாருங்கள்.

English summary

Vastu Tips For A Prosperous Diwali

If you are all excited to welcome Goddess Lakshmi and Lord Ganesha at home, then here are the best Vastu tips to purify your home for Diwali.
Story first published: Thursday, October 31, 2013, 20:21 [IST]
Desktop Bottom Promotion