For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளியலறையை அழகான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான வழிகள்!!!

By Super
|

எல்லோர் மனத்திலும் நமக்கு என்று ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது நிச்சயமாக இருக்கும். அதிலும் நமது வீட்டை நாமே பார்த்து கட்டி அலங்கரிக்கவே விரும்புகின்றோம். மேலும் நமது நண்பர்களோ உறவினர்களோ வீட்டிற்கு வந்து உங்கள் வீட்டை பாராட்டினால் பெரிதும் மகிழ்ச்சியடைவோம். ஒவ்வொருவரும் தங்களது வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அழகாக வைத்துக்கொள்ளவும் ஆசைபடுகின்றோம்.

நமது வீட்டை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பது நமது வீட்டின் குளியலறைதான். எனினும் வீட்டை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொண்டு குளியலறையை அழுக்காக வைத்திருந்தால் எந்த பலனும் இல்லை. ஒருவரது வீட்டின் சுத்தத்தின் நிலைக்காட்டியாக இருப்பது குளியலறைதான். அதனால், நமது குளியலறையை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

குளியலறையை சுத்தபடுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் சில நேரங்களில் குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும். சிறிய இடத்தில் நிறைய பொருட்களை வைப்பதே முக்கிய பிரச்சனையாகும். குளியலறையில் இருக்கும் ஷாம்பூ சோப்பு மற்றும் இதர பொருட்களால் தரை வழுக்கும் மேலும் தரையில் அழுக்கு இருக்கும், துவைத்த துணிகள் விட்டு சென்ற கெட்ட வாடை, போன்றவை குளியலறையை ஒழுங்கற்றதாக இருக்க செய்யும்.

Steps To Organize Your Bathroom

அதனால், குளியலறையை பராமரிப்பதற்கு சில ஒழுங்கான முறைகளை பின்பற்ற வேண்டும். உங்களுக்கு உதவும் சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

வழி 1:

உங்கள் குளியலறையை ஒழுங்குபடுத்துவதற்கு முதன்மையான வழி அதில் இருக்கும் குளியலறைப் பொருட்களை ஒழுங்காக வைக்கவேண்டும்.முதலில் ஷாம்பூ, சோப்கள், பாடி வாஷ் மற்றும் சோப்பு உள்ள எல்லா பொருட்களையும் ஒரு கப்போர்டில் வைக்கவேண்டும். உங்களிடம் கப்போர்ட் இல்லை என்றால் முதலில் அதை வாங்குகள். ஒரு ஷெல்பில் உங்கள் அன்றாட தேவையான பொருட்களை வைத்தால் சுலபமாக இருக்கும்.

வழி 2:

இவை அனைத்தையும் ஒரு இடத்தில் வைத்த பின்பு, உங்கள் துணிகளை போடுவதற்கு ஒரு ஓரத்தில் பக்கெட் அல்லது டப் ஒன்றை வைத்துவிடுங்கள். உங்கள் துணிகளை தரையில் போடாதீர்கள். மேலும் நீண்ட நேரம் உங்கள் துணிகளை ஈரமாகவும் தோய்காமலும் வைக்காதீர்கள். இதனால் அதிலிருந்து கெட்ட வாடை வரும்.

வழி 3:

குளியலறையில் வெள்ளை டைல்ஸ் இருந்தால், இந்த வழியை உபயோகித்து குளியலறையை ஒழுங்குபடுத்துங்கள். தரை கிளீனர் கொண்டு உங்கள் குளியலறையை தினமும் சுத்தம் செய்யவேண்டும். தண்ணீர் விட்டு தரையை தினமும் கழுவ வேண்டும். இதனால் குளியலறையின் தரை வழுக்குவது குறையும். வழுக்கும் தரை அழுக்காகவும் ஆபத்துள்ளதாகவும் இருப்பதால் இந்த வழி உங்கள் குளியலறையை ஒழுங்குபடுத்துவதில் முக்கியமானதாக இருக்கும். மேலும் இவை விபத்துகளையும் விளைவிக்கும்.

வழி 4:

குளித்த பின்பு வாளி, கப் மற்றும் குளியலறை பொருட்களை ஒரு ஓரத்தில் வைக்க வேண்டும். இவை தாறுமாறாக இருந்தால் உங்கள் அறை சிறிதாகவும் நெரிசலாகவும் இருக்கும். உங்கள் அறை பெரிதாக காணவும், எளிதாக பயன்படுத்தவும், குளியலறை பொருட்களை ஒரு புறமாக வைக்க வேண்டும். ஒன்றோடு ஒன்றிக்கு இடைவேளை விட வேண்டும்.

வழி 5:

குளியலறை ப்ரெஷ்னர் மற்றும் ஸ்ப்ரே போன்றவைகளை உபயோகிக்கவேண்டும். இதனால் உங்கள் அறை நல்ல நறுமணத்தை பெரும். உங்கள் குளியலறையை ஒழுங்குபடுத்துவதில் இது ஒரு முக்கிய வழியாகும். உங்கள் அறை நல்ல நறுமணத்தை அளித்தால் நீங்கள் உங்கள் குளியலறையை ஒழுங்குபடுத்திவிட்டதாக நினைத்துக் கொள்ளலாம். பூக்கள் வாசம் நிறைந்த ப்ரெஷ்னர் மற்றும் ஸ்ப்ரேக்களை பயன்படுத்தலாம்.

இவை அனைத்தும் குளியலறையை நன்றாக வைத்து கொள்ள உதவும் வழிகள் ஆகும். இதனை வழக்கமாகவும் திரும்பத் திரும்ப செய்து வர வேண்டும். ஏனெனில் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், வீட்டின் குளியலறையின் அழகை கொண்டே வீட்டை எடை போடுவார்கள். அதனால், உங்கள் வீட்டில் குளியலறையை சுத்தமாகவும் ஒழுங்குள்ளதாகவும் வைக்க வேண்டும். இந்த சில வழிகள் உங்களுக்கு உதவும் என்று நம்புகின்றோம்.

English summary

Steps To Organize Your Bathroom

Bathrooms have soaps, shampoos and stuff that can make the floor slippery, there might be diirt on the floor, the clothes to be washed might leave a foul smell and many such issues make bathrooms disorgabised. Therefore proper steps should be followed to maintain your bathroom. We are enlisting a few steps that maybe of help to you.
Story first published: Friday, November 15, 2013, 19:36 [IST]
Desktop Bottom Promotion