For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கப் போறீங்களா? இத படிச்சுட்டு போங்க...

By Babu
|

டிசம்பர் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால், பெரும்பாலான வீடுகளில் பெயிண்ட் அடிக்க நினைப்பார்கள். அப்படி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் போது, எப்போதும் போல வெள்ளை நிறத்தை அடிக்காமல், சற்று வித்தியாசமாக வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அசந்து போகும் வகையில், ஒவ்வொரு அறைக்கும் பொருத்தமான பெயிண்ட் நிறங்களை தேர்ந்தெடுத்து அடிக்கலாம். இதனால் வீடு அழகாக இருப்பதுடன், மனமும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

எப்படியெனில் வீட்டிற்கு வந்தால் சந்தோஷமும், அமைதியும் கிடைக்க வேண்டுமானால், வீட்டின் சுவற்றில் சரியான நிறமுள்ள பெயிண்ட்டை அடிக்க வேண்டுமென்று பல்வேறு வாஸ்து சாஸ்திரங்கள் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆகவே வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்கு முன்பு, எந்த அறைக்கு எந்த நிறத்தில் பெயிண்ட் அடிக்கலாம் என்று ஒன்றுக்கு பலமுறை யோசித்து பின் அடிக்க ஆரம்பியுங்கள்.

சரி, இப்போது எந்த அறைக்கு எந்த நிறத்தில் பெயிண்ட் அடித்தால் நன்றாக இருக்கும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்கை அறை: சிவப்பு மற்றும் வெள்ளை

படுக்கை அறை: சிவப்பு மற்றும் வெள்ளை

படுக்கை அறையில் பெயிண்ட் அடிக்கும் போது, நன்கு ரொமான்டிக்காக இருக்கும் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தலாம். அதிலும் சிவப்பு பாதி, வெள்ளை பாதி என அடித்தால், இன்னும் சூப்பராக இருக்கும்.

படுக்கை அறை: க்ரே

படுக்கை அறை: க்ரே

இது மற்றொரு சிறப்பான தோற்றத்தைக் கொடுக்கும் நிறம். இந்த நிறத்தைப் பயன்படுத்தினால், படுக்கை அறை மிகவும் ராயலான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். அதிலும் இந்த நிறமானது புதுமணத் தம்பதியர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

படுக்கை அறை: சந்தன நிறம்

படுக்கை அறை: சந்தன நிறம்

சந்தன நிறத்தில் படுக்கை அறைக்கு அடித்தால், அறையானது பளிச்சென்று ஸ்மார்ட்டான தோற்றத்தைக் கொடுக்கும்.

ஹால்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

ஹால்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

ஹாலுக்கு ஆரஞ்சு மற்றும் வெள்ளை கலந்து அடித்தால், ஹால் பிரகாசமாக இருப்பதோடு, பெரிய ஹால் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

ஹால்: க்ரே

ஹால்: க்ரே

ஹால் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்க வேண்டுமானால், மெட்டாலிக்/க்ரே நிறத்தை அடிக்கலாம்.

ஹால்: நீல நிறம்

ஹால்: நீல நிறம்

ஹாலுக்கு அடிப்பதற்கு ஏற்ற நிறங்களில் ஒன்று தான் நீல நிறம். இது ஹாலுக்கு ஒரு தனி லுக்கைக் கொடுக்கும்.

சமையலறை: சாக்லெட் நிறம்

சமையலறை: சாக்லெட் நிறம்

உங்களுக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் சமைக்கும் அறைக்கு சாக்லெட் நறத்தை அடியுங்கள். இது சற்று வித்தியாசமாக இருக்கும்.

சமையலறை: சந்தன நிறம்

சமையலறை: சந்தன நிறம்

சிலர் தங்களது சமையலறை பெரியதாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அப்படி நினைத்தால், சமையலறைக்கு சந்தன நிற பெயிண்ட்டை அடியுங்கள்.

சமையலறை: பச்சை

சமையலறை: பச்சை

இயற்கை விரும்பியாக இருந்தால், சமையலறைக்கு பச்சை நிற பெயிண்ட் அடிக்கலாம். இதனால் அது வீட்டை எப்போதும் புத்துணர்ச்சியுடன் பளிச்சென்று வெளிப்படுத்தும்.

குளியலறை: காபி

குளியலறை: காபி

குளியலறைக்கு காபி நிறத்தை அடித்தாலும், அது குளியலறையை பிரகாசமாகவும், அழகாகவும் வெளிக்காட்டும்.

குளியலறை: பிங்க்

குளியலறை: பிங்க்

பெண்களுக்கு எப்போதுமே பிங்க் தான் அதிகம் பிடிக்கும். ஆகவே உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் இருந்தால், வீட்டின் குளியலறைக்கு பிங்க் நிற பெயிண்ட் அடியுங்கள்.

குளியலறை: சில்வர்

குளியலறை: சில்வர்

நிறைய பேருக்கு இந்த நிறம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நிறத்தை அடித்தால், அது குளியலறைக்கு ராயல் லுக்கை கொடுப்பதோடு, இது தான் ட்ரெண்ட்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Paint Wall Colours To Suit Your Home

Take a look at some of these paint wall colours for your home we have helped you with. These are the best home decor ideas we have in store for you to look at.
Story first published: Friday, December 6, 2013, 17:03 [IST]
Desktop Bottom Promotion