For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் வீட்டை ஒளிமயமாக்க சில வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

குளிர்காலம் வந்து விட்டது, வீட்டுக்கு வெளியில் சுறுசுறுப்பாக பனிக் காற்றில் நடந்து கொண்டிருந்த நீங்கள் வீட்டுக்குள் வந்து கதகதப்பாக, வசதியாக அமர வேண்டிய நேரம் இது. குளிர்காலத்தில் உங்கள் வீடு கதகதப்பாக இருப்பதற்கு நீங்கள் முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும். குளிர் மற்றும் வறண்ட காற்றுடன் சேர்ந்து பனிப்பொழிவு நிகழ்ந்து, அது மிகவும் அசௌகரியமாக இருக்கும் வேளைகளில் ஒரு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு காபியை உறிஞ்ச வேண்டிய நேரமும் இதுதான்.

குளிர்காலத்தை எதிர்கொள்ளும் பொருட்டாக வீட்டை கதகதப்பாக வைத்திருக்க தயாராவதுடன், வீட்டை ஒளிமயமாகவும் வைத்திருக்க முயற்சி செய்வதும் குளிர் காலத்தின் முன்தயாரிப்பு பணிகளில் ஒன்றாகும். குளிர்காலத்தில் உங்கள் வீட்டை எப்படி ஒளிமயமாக வைப்பது என்பது பற்றிய சில டிப்ஸ்களை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

Lighting Ideas For A Winter Home

1. பளிச் விளக்குகள்

குளிர்காலத்தில் சூரியன் முன்னதாகவே மறைந்து விடும், எனவே பிற பருவங்களை விட வேகமாக மாலை வேளை இரவாக மாறி விடும். குளிர்காலத்தில் பயன்படுத்த வேண்டிய விளக்குகள் 'பளிச்' என்று ஒளி பரப்புவதாக இருந்தால் மிகச் சிறந்தது. சீலிங்-களில் இருக்கும் விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் ஒளி வெள்ளத்தை அதிகரிக்க முடியும். இதன் மூலம் மந்தமான மற்றும் அவலட்சணமான தோற்றத்தை சுறுசுறுப்பாக மாற்ற முடியும். பளிச் விளக்கு உங்கள் வீட்டை புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் காட்சியளிக்கச் செய்யும்.

2. எங்கெங்கும் ஒளி விளக்குகள்

வீட்டின் இருண்ட மூலைகள் மற்றும் பிற பகுதிகளில் குளிர் கால விளக்குகளை நிறுத்தி ஒளிரச் செய்யவும். இது போன்ற இடங்கள் பொதுவாகவே தாழ்வாரங்கள், ஜன்னல்கள் மற்றும் அறைகளின் மூலைகளில் இருக்கும். சிறிய விளக்குகளையோ அல்லது சுவற்றில் பதிக்கப்பட்ட விளக்குகளையோ குளிர்கால ஒளி வெள்ளத்திற்கு பயன்படுத்துங்கள்.

3. மெழுகுவர்த்திகள்

குளிர்காலத்தில் மெழுகுவர்த்திகளை வீட்டில் ஏற்றி வைப்பது காதலுக்கு இதமாக சூழலை ஏற்படுத்தும். மெழுகுவர்த்திகளை சமையலறை, தலைவாயில், கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு வெளியில் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம். எனினும் மெழுகுவர்த்திகளால் வீடு முழுமையும் ஒளி வெள்ளம் பாய்ந்து விடாது, அதனுடன் சேர்ந்து சீலிங் விளக்குகளையும் பயன்படுத்திப் பாருங்கள் - பலன் தெரியும். அது உங்கள் வீட்டிற்கு அற்புதமான காட்சியையும் மற்றும் சிறந்த குளிர்கால அலங்காரத்தையும் கொடுக்கும்.

4. கிறிஸ்துமஸ் அலங்காரம்

குளிர்காலம் என்றால் அது கிறிஸ்துமஸ் சீசன். அதனால் உங்களுக்கு தோன்றும் ஐடியாக்களைப் பயன்படுத்தி வீட்டில் ஒளி வெள்ளம் பாயச் செய்யுங்கள். வீட்டின் உள்ளும், புறமும் வண்ணமயமான விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள். இது குளிர்காலத்திற்கான சிறந்த அலங்காரங்களில் ஒன்றாகவும் இருக்கும். உங்கள் வீட்டின் சுவர்களில் வரிசையாக, பல்வேறு வண்ணங்களில் தொடர் சங்கிலி போல் விளக்குகளை அமையுங்கள். மேலும், உங்கள் வீட்டிலுள்ள மரங்கள் மற்றும் செடி வளர்க்கும் தொட்டிகள் ஆகியவற்றிலும் விளக்குகளை அமைக்கலாம். அணைந்து எரியும் பேட்டர்ன் விளக்குகளை உங்கள் வீட்டுத் தோட்டங்களில் பயன்படுத்துங்கள்.

5. மேஜை விளக்குகள்

மின்சார செலவை குறைக்கும் வகையில் வீட்டிலுள்ள அனைத்து விளக்குகளையும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ள விளக்குகள் மற்றும் லாந்தர்களை பயன்படுத்தி அதிகம் பயன்படுத்தாத அறைகளிலும் வெளிச்சத்தை கொண்டு வரலாம். மாறுவட்ட வகையிலான லாந்தர்கள் மற்றும் விளக்குகளை பயன்படுத்துவதும் அற்புதமான குளிர்கால ஒளி வெள்ளத்திற்கான ஐடியாவாக உள்ளது. இதன் மூலம் உங்கள் பாக்கெட்டுகள் காலியாவதும் தவிர்க்கப்படுகிறது.

இங்கே படித்த குளிர்காலத்தில் வீட்டிற்கு ஒளியேற்றும் ஐடியாக்களை படித்து, உங்கள் வீட்டை மாலை வேளைகளில் ஒளி வெள்ளம் பாய்ந்தோடும், கதகதப்பான இடமாக மாற்றிப் பயன் பெறுங்கள்.

English summary

Lighting Ideas For A Winter Home

In the winter decoration apart from keeping the house warm, lights are also an important consideration get your house ready for winter. Some lighting ideas for winter home and winter decoration are:
Desktop Bottom Promotion