For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேச்சுலர்களே! உங்கள் சமையலறையை அழகாக அலங்கரிக்க.. இதோ சில வழிகள்!!!

By Ashok CR
|

இளமைப் பருவத்தில் மேற்படிப்பை தொடர்வதற்காக பல இடங்களுக்கு மாற வேண்டி இருக்கும். இன்றைய இளைஞர்கள் அவர்கள் தங்கும் வீட்டை அவர்களாகவே அலங்கரித்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் தனித்து இருக்கவே விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலரோ நண்பர்களுடன் அறையை பகிர்ந்து கொள்ளுவார்கள். பெரும்பாலான இளைஞர்கள் தனித்து இருக்கவே ஆசைப்படுகின்றனர். இந்த தனிமையை விரும்பி, தானாகவே தங்களது வீட்டை அலங்கரித்து வாழ்ந்து வருகின்றனர்.

மாணவர்களின் சமையலறை என்று பார்த்தோமானால், அதில் குறைவான பொருட்களே இருக்கும். ஏனெனில், எந்த ஒரு திருமணமாகாத ஆணும் மணிகணக்கில் சமையலறையில் சமையல் செய்வதற்கோ அல்லது சுத்தம் செய்வதற்கோ செலவிடமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் வாழ்வில் உள்ள மற்ற பொறுப்புகளால், சமையலறையில் சமையல் செய்வதற்கு நேரம் கிடைக்காது. இதன் முடிவாக, திருமணமாகாத ஆண்களின் சமையலறையில் சில அடிப்படையான அலங்காரங்களும் அன்றாட உபயோகத்திற்கு தேவைப்படும் பொருட்கள் மட்டுமே இருந்தால் போதுமானது.

திருமணமாகாத ஆண்களின் சமையலறையில் சிறந்த அடுப்பையோ அழகான மிக்ஸ்யையோ பார்க்க முடியாது. பெரும்பாலான திருமணமாகாத ஆண்கள் அல்லது மாணவர்கள் தங்களது காலை உணவு மற்றும் இரவு உணவை மட்டுமே வீட்டில் சாப்பிடுகின்றனர்.

காலை உணவாக ஆம்லெட்கள், சாண்ட்விச் போன்றவற்றை சாப்பிட்டு இரவு உணவிற்கு ரொட்டி மற்றும் தால் போன்றவற்றை தான் அதிகம் செய்வார்கள். மாணவர்களையும், திருமணமாகாத ஆண்களையும் நினைத்து அவர்களுக்கான சமையலறை அலங்காரங்களைப் பற்றி இப்பொழுது படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறிது

சிறிது

பேச்சுலர் அல்லது மாணவர்களின் சமையலறையை வடிவமைப்பதற்கான முதல் கூறாக இருப்பது அதன் அளவு தான். பெரும்பாலானோர் விரும்புவது தனது குறைவான தேவைகளுக்கேற்ப சிறிய சமையலறையை தான். இது ஒரே இடத்தில் நின்று சமையல் செய்ய உதவி புரியும்.

குறைவான பாத்திரங்கள்

குறைவான பாத்திரங்கள்

பெரும்பாலான மாணவர்கள் அல்லது பேச்சுலர்கள் தங்களது சமையலறையில் குறைவான பாத்திரங்களை வைத்திருப்பதற்கு ஆசைப்படுவார்கள். இது அவர்களின் பாக்கெட் பணத்தை மிச்சப்படுத்தி விருப்பமான பொருளை வாங்குவதற்கு வழிவகுக்கும்.

சிறந்த அலமாரி

சிறந்த அலமாரி

குறைவான பொருட்களை விரும்புவதோடு மட்டுமல்லாது இன்றைய மாணவர்கள் மற்றும் பேச்சுலர்கள் அதனை வைப்பதற்கு மூடியவாறு இருக்கும் அலமாரிகளையே தேர்வு செய்கின்றனர். இது அவர்களை எளிதாக பராமரிக்க உதவி புரிந்து அடிக்கடி சுத்தம் செய்யாமல் இருக்கக் செய்யும். பெரும்பாலான சமையலறைகளில் ரெடி டு ஈட், ப்ரி மிக்ஸ் போன்றவை தான் நிறைந்திருக்கும். இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கலாம்.

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

பெரிய குளிர்சாதன பெட்டியை வாங்கி வைத்திருப்பது தான் மாணவர்களின் சமையலறை டிப்ஸ்களில் ஒன்றாகும். இதனால் முந்தைய நாள் உணவு வகைகள், நீண்ட நாள் வரை கெடாத உணவுகள் போன்றவற்றை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாக்கலாம்.

சமையலறையில் டிவி

சமையலறையில் டிவி

சமையலறையில் டிவியை வைக்க முடிந்தால் அதனை உங்கள் சமையலறையில் வைப்பதற்கு சற்றும் யோசிக்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டே உங்களது விருப்பமான விளையாட்டு நிகழ்ச்சியை டிவியில் பார்த்து ரசிக்கலாம். இதனால் உங்கள் விளையாட்டு நிகழ்ச்சியும் கெடாது, சமையலும் கெடாது.

பல பலன்களை தரும் பொருட்கள்

பல பலன்களை தரும் பொருட்கள்

உங்கள் சமையலையும், சமையல் நேரத்தையும் குறைக்கும் என்றால் நாம் அனைவருமே அதனை தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம். சமீபத்தில் வந்துள்ள மைக்ரோவேவ் எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பதற்கு உதவுகின்றது.

போன் அல்லது டேப்லெட் போன்றவற்றை மாட்டுவதற்கான இடங்கள்

போன் அல்லது டேப்லெட் போன்றவற்றை மாட்டுவதற்கான இடங்கள்

இப்பொழுதுள்ள பேச்சுலர்களிடம் பல கோரிக்கைகள் இருக்கின்றது. அவர்களின் போனோ அல்லது டேப்லெட்டொ மாட்டுவதற்கான இடங்கள் தேவைப்படும். இதன் மூலமாக அவர்கள் உணவை தயாரிப்பது எப்படி என்றும் அல்லது ஹொவ் டு குக் வீடியோக்களை பார்த்தும் கற்று கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kitchen Decor For Students

When it comes to their kitchen, most bachelor kitchen décor seem to be minimalistic. Lets face it, who as a bachelor prefers to spend hours on cooking and cleaning in the kitchen.
Story first published: Wednesday, December 4, 2013, 19:29 [IST]
Desktop Bottom Promotion