For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறிய வீட்டையும் பெரியதாக காட்சியளிக்க சில டிப்ஸ்...

By Super
|

இன்றைய காலங்களில் வீட்டை கட்டுவது என்பது சுலபமான காரியம் அல்ல.வீட்டை கட்டுவது மட்டுமல்லாது வீட்டை அலங்கரித்தல் என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக மர வேலைப்பாடுகள், கைவினை வேலைபாடுகள் செய்வது போன்றவை இன்றியமையாததாக மாறி வருகின்றது. ஆனால், இவை அனைத்தும் பெரிய வீட்டிற்கு தான் பொருந்தும். குறைந்த சதுரஅடி உள்ள வீடுகளில் இவ்வாறு அலங்கரித்தல் என்பது சாத்தியமல்ல.

சதுரஅடி பரப்பளவு அடிப்படையில் சிறிய வீடாக இருந்தாலும் அதனை பெரும் அளவு இடமாக காட்சியளிக்க மாற்ற முடியும். அதேபோல் அதிக சதுரஅடி பரப்பளவு கொண்ட வீட்டை சிறிய அளவு இடமாக காட்சியளிக்க மாற்ற முடியும்.இந்த இடமும் அளவும் நீங்கள் எவ்வாறு உங்கள் வீட்டை அலங்கரிக்கின்றீர்கள் என்பதை பொருத்தே இருக்கின்றது. இது உங்கள் வீட்டை சிறியதாகவும் பெரியதாகவும் மாற்றக்கூடியது.

உங்கள் வீட்டை பெரிதாகவும் பரந்தமயமாகவும் காட்சியப்பதற்கு பலவகையான மேம்பாட்டு வழிகள் உள்ளன. இந்த வழிகளில் அறையை அலங்கரித்தல், வண்ணம் தீட்டுதல், பர்னீசர் அமைப்பு போன்ற சிறியவைகளும் அடங்கும். உங்கள் வீட்டை மாற்றியமைத்து மேம்படுத்தி பெரிதாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளக்குகள்

விளக்குகள்

ஒளிமிக்க மற்றும் ஒழுங்கான பரந்த விளக்கேற்றுந்தொகுதி உபயோகித்தல் உங்கள் வீட்டை பெரிதாக காட்டும். உங்கள் அறையை பெரிதாகக் காட்டும் மாயையை உருவாக்க உதவும். ஒளிமிக்க விளக்குகள் உங்கள் அறையை பெரிய அளவாகக் காட்டி எல்லா பகுதிகளையும் எடுத்துக்காட்டும். ஒளிகுறைவான விளக்குகள் உங்கள் அறையை சிறிதாக்கி மந்தமாக காட்டும்.

வண்ணப்பூச்சுகள்

வண்ணப்பூச்சுகள்

மென்நிற வண்ணப்பூச்சுகள் மற்றும் ஒரேமாதிரியான நிறப்பூச்சுகள் உங்கள் வீட்டை பெரிதாகக் காட்டும். வெள்ளை, அரை வெள்ளை, பெயிஜ் மற்றும் மென்நிறங்கள் வீட்டை பெரிதாகக் காட்ட உதவும். இது உங்கள் வீட்டை பெரிதாகக்காட்ட உபயோகிக்கும் மேம்பாடுகளில் ஒன்றாகும். அதனால், இனி உங்கள் வீட்டை பெரிதாக காட்ட மென்நிறங்களையே பயன்படுத்துங்கள். அல்லது ஒரே வண்ணத்தின் பல சாயல் நிறங்களை பயன்படுத்தலாம்.

பர்னீச்சர்கள்

பர்னீச்சர்கள்

குறைவான மற்றும் சிறிதான பர்னீச்சர்களை பயன்படுத்தினால் உங்கள் வீடு பெரிதாக காட்சியளிக்கும். ஆம்சேர், தரை விரிப்பான், சோபா கம் பெட், மடிக்கும் நாற்காலிகள் மற்றும் மடிக்கும் சாப்பாட்டு மேஜைகள் போன்றவை இடத்தை குறைத்து உங்கள் வீட்டை பெரிதாக காட்டும். பெரிய பர்னீச்சர்களை தவிர்த்து சிறிய மற்றும் சுலபமான பர்னீசர்களை பயன்படுத்தவும். இது உங்கள் வீட்டை பெரிதாக காட்டும் வீடு மேம்படுவதற்கான வழிகளில் சிறந்த ஒன்று.

தேவையற்ற பொருட்கள்

தேவையற்ற பொருட்கள்

தேவையற்ற பொருட்கள் மற்றும் அதிக அளவிலான பர்னீசர்களை தவிர்க்க வேண்டும். தேவையற்ற பொருட்கள், துணிமணிகள் மற்றும் சமையலறைப் பொருட்கள் போன்றவற்றை நீக்கி பெரும் இடத்தை சேமிக்கலாம். இதனால் உங்கள் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் வீட்டை விட்டு நீங்கி விடும்.

கண்ணாடிகள்

கண்ணாடிகள்

நமது வீடு பெரிதாக காட்சியளிக்க இந்த பழைய முறையான வீட்டை அலங்கரித்தல் முறையை பின்பற்றவேண்டும். பழங்காலத்தில் கண்ணாடிகளை சில கோணங்களில் வைத்து அலங்கரித்து வீட்டை பெரிதாக காட்டி வந்தனர். கண்ணாடிகள் உங்கள் வீட்டை பெரிதாக காட்டும் மேலும் 70 களின் சாயல் எளிமையாகவும் நேர்த்தியாகவும் காட்டும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறிய அனைத்து வழிகள் மட்டுமல்லாது, சில சிறிய மாற்றங்களும் வீட்டை பெரிதாக காட்டும். மேற்கூரையின் வண்ணம் அடர் நிறங்களில் இருந்தால், வீட்டின் உயரத்தை அதிகரித்து காட்டும். மேலும் குறைவான அலங்காரம் மற்றும் ஒளி தரும் சாதனங்களும் வீட்டை பெரிதாகக் காட்டும். மேலும் திரைச்சீலைகளை திறந்து வைத்தால், உங்கள் வீடு பெரிதாக காட்சியளிக்கும். இவற்றையும் வீட்டை மேம்படுத்துவதற்கான வழிகளில் சேர்த்து கொள்ளலாம். இவற்றை உபயோகித்தால் சிறிய சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை பெரிதாக காட்டலாம். இந்த டிப்ஸ் உங்களுக்கு உபயோகப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். உங்கள் வீட்டை அழகாகவும் பெரிதாகவும் மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Make Your Home Look Spacious

There are number of home improvement methods to make your house look bigger and spacious. These methods include several small thing like the room decor, paint, furniture and alignment of furniture in the room. A few tips for the rearrangement and home improvement to make your house look spacious are as follows.
Story first published: Saturday, November 16, 2013, 14:52 [IST]
Desktop Bottom Promotion