For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபெங் சுயி முறைப்படி சமையலறையை அமைக்க சில டிப்ஸ்...

By Maha
|

ஃபெங் சுயி என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஒரு சீன வாஸ்து சாஸ்திரம். இந்த வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை சீரமைத்தால், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை, அதிர்ஷ்டம் போன்றவை கொட்டும். தற்போது நிறைய மக்கள் இந்த ஃபெங் சுயி முறைப்படி வீட்டை மாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த ஃபெங் சுயி முறைப்படி வீட்டை அமைத்தால், வீட்டில் உள்ளோர் நோய் நொடியின்றி, நீண்ட நாட்கள் வாழ முடியும்.

இது ஒரு மூடநம்பிகை என்று கருதினால், நிச்சயம் அது தவறு. உலகில் ஒருசில மூடநம்பிகைகள் உண்மை என்று உணரும் வகையில் உள்ளன. அந்த வகையில் சமைக்கும் அறையை கூட ஃபெங் சுயி முறைப்படி அமைத்தால், சமைக்கும் உணவு நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்துமிக்க உணவாக இருக்கும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை, சமையலறையை ஃபெங் சுயி முறைப்படி அமைக்க சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. அதன்படி சமையலறையை அமைத்து, நல்ல ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.

Feng Shui Tips For Your Kitchen

கதவுகள்

சமையலறையின் கதவானது வீட்டின் நுழைவாயில் கதவின் அருகே இருக்குமாறு அமைந்தால், இது சமையலறைக்கு நல்ல ஆற்றலைக் கொடுக்கும்.

உபகரணங்கள்

ஃபெங் சுயி முறைப்படி சமையலறையை அமைக்கும் போது, சமையலறையில் அதிகப்படியான மின்சார உபகரணங்களை வைத்திருக்க வேண்டாம். ஏனெனில் இவை சமையலறையில் உள்ள அனைத்து நல்ல சக்திகளையும் வெளியேற்றிவிடும். இதனால் உடலுக்கு உபாதைகள் ஏற்படும்.

குப்பைத் தொட்டி

குப்பைத் தொட்டியில் உள்ள குப்பையை இரவில் காலியாக்கக்கூடாது. நாள்முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் திகழ வேண்டுமானால், விடியற்காலையில் அப்புறப்படுத்த வேண்டும். இதுவும் ஃபெங் சுயி வாஸ்துவில் உள்ள ஒரு டிப்ஸ் தான்.

லைட்

நிறைய மக்கள் காலை அல்லது மதிய வேளையில் சமைக்கும் போது, சமையலறையில் லைட்டுகளை போட்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் ஃபெங் சுயி முறைப்படி, பகல் வேளையில் சமையலறையில் சமைக்கும் போது லைட்டுகளைப் போட்டுக் கொண்டு சமைத்தால், உணவில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகரிக்குமாம்.

பூக்கள்

நல்ல ப்ரஷ்ஷான பூக்களை சமையலறையில் வைத்தால், சமையலறை அழகாக இருப்பதோடு, வீட்டில் உள்ள ஆற்றலையும் அதிகரிக்கும்.

மேற்கூறியவாறெல்லாம் அமைத்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

English summary

Feng Shui Tips For Your Kitchen

To help you bring in good luck and keep up the good health of each family member, here are some of the best Feng Shui tips for the kitchen you can follow. These Feng Shui tips for the kitchen are one of a kind and will surely bring in serenity to your lives. Take a look at these Feng Shui tips for your kitchen.
Story first published: Monday, September 30, 2013, 14:21 [IST]
Desktop Bottom Promotion